திண்டிவனத்தில் துணிகரம்: 3 கடைகளில் பூட்டை உடைத்த கொள்ளையர்கள்

நேற்று இரவு இவர்கள் கடையில் வேலை முடிந்ததும் வீடுகளுக்கு சென்றனர்.கடையை திறந்து உள்ளே பார்த்தபோது பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை.
பூட்டு உடைக்கப்பட்ட படத்தை காணலாம்.
பூட்டு உடைக்கப்பட்ட படத்தை காணலாம்.
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லியங் கொண்டான் நகரை சேர்ந்தவர் ஜான். இவர் திண்டிவனம் காந்திசிலை அருகே கம்ப்யூட்டர் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இதேபோல அந்த பகுதியில் ஆனந்த் என்பவர் செல்போன் சர்வீஸ் சென்டரும் நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர்கள் கடையில் வேலை முடிந்ததும் வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கம்ப்யூட்டர் சர்வீஸ் மையத்தின் பூட்டுகளை உடைத்தனர். இதேபோல செல்போன் சர்வீஸ் மையம், அருகில் உள்ள பேன்சிஸ்டோர் ஆகி யவற்றின் பூட்டுகளையும் உடைத்தனர்.

அப்போது ஆட்கள் வரும் சத்தம் கேட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இன்று காலை ஜான் உள்பட 3 பேரும் கடைகளை திறக்க வந்தனர். அப்போது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கடையை திறந்து உள்ளே பார்த்தபோது பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. இதுகுறித்து திண்டிவனம் போலீசில் புகார் செய்யப்ப ட்டது. ேபாலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com