search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி
    X

    தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி

    • தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    • 3 கடைகளில் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த மாதம் 11-ந்தேதி கொள்ளையர்கள் ஒரு வீட்டில் புகுந்து 2 பெண்களை கொலை செய்து 60 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். ஒரு சிறுவனையும் கத்தியால் குத்தினர். அவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

    இந்த கொள்ளை நடந்து ஒரு மாதம் ஆனபோதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இது தேவகோட்டை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தேவ கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தியாகிகள் பூங்கா அருகில் உண்ணா விரதம் இருந்தனர்.

    அப்போது போலீசார் ஒரு மாதத்திற்குள் உண்மை யான குற்ற வாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று நாட்டார்கள் மற்றும் கிராம மக்கள் அறிவித்தனர். அதன்பின்னர் டி.ஐ.ஜி. துரை தேவகோட்டையில் முகாமிட்டு இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    தற்போது இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக ஏ.எஸ்.பி. ஸ்டாலின் பொறுப்பேற்று குற்றவாளிகளை தேடி வருகிறார். இன்ஸ் பெக்டர் சரவணன், பொது மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் திருமண மண்டபத்தில் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் தங்களது பகுதிகளில் அதிக அளவு கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மீண்டும் கொள்ளை

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே திருப்பத்தூர் சாலையில் ஒரு ஷாப்பிங் சென்டர் மற்றும் ஸ்டூடியோ, கம்ப்யூட்டர் சென்டர் என அடுத்தடுத்து 3 கடைகளில் கதவுகளை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. இதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    விரைவில் கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×