வீடு புகுந்து நகை- பணம் திருட்டு

செட்டித்தெருவில் உள்ள வீட்டில் தனது மகன் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார்.பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
சம்பவம் நடந்த வீட்டில் போலீசார் விசாரணை.
சம்பவம் நடந்த வீட்டில் போலீசார் விசாரணை.
Published on

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் செட்டித்தெருவை சேர்ந்தவர் டோமினிக். இவரது மனைவி ஜாஸ்மின் (வயது 27).டோமினிக் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஜாஸ்மின் செட்டித்தெருவில் உள்ள வீட்டில் தனது 2 வயது மகன் மற்றும் மாமியார் ரோசரியுடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று மாமியார் ரோசரி வெளியூர் சென்றிருந்தார். ஜாஸ்மின் மதியம் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றிருந்தார்.

அப்போது மர்ம நபர்கள் யாரோ பூட்டிய வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை எடுத்து சென்று விட்டனர்.

வீட்டுக்கு திரும்பிய ஜாஸ்மின் வீட்டில் பீரோ திறந்த நிலையில் இருந்தது கண்டு திடுக்கிட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள் உள்ளதா என பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ஜாஸ்மின் பாபநாசம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் பாபநாசம் டிஎஸ்பி பூரணி, இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்இன்ஸ்பெ க்டர்கள் குமார், இளமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com