search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR birthday"

    • தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆட்சியாளர்கள் விவசாயிகளை புறக்கணித்து வருகிறார்கள்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் எங்ககெல்லம் குளம், குட்டைகள் உள்ளதோ அங்கெல்லாம் தூர்வாரி குடிமாரமத்து பணி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றினோம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று மாட்டு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    அமைப்பு செயலாளர் பொன்னையன், மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், எம்.எல்.ஏ.க்கள் மணி, ராஜமுத்து, சித்ரா பாலசுப்பிரமணியன், ஜெயசங்கர், நல்லத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நானும் ஒரு விவசாயி. விவசாயி பெருமக்களோடு இந்த மாட்டு பொங்கல் விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. இன்றைக்கு வேளாண் பெருமக்கள் தான் நாட்டுக்கு உணவளிக்கின்றனர். விவசாய பணி என்பது கடுமையான பணி. நாட்டு மக்கள் வளம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆட்சியாளர்கள் விவசாயிகளை புறக்கணித்து வருகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் எங்ககெல்லம் குளம், குட்டைகள் உள்ளதோ அங்கெல்லாம் தூர்வாரி குடிமாரமத்து பணி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றினோம்.

    விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்தது அம்மாவுடைய அரசு தான். 2 முறை தள்ளுபடி செய்தோம். பல தடுப்பணைகள், பல பாலங்கள் கட்டி கொடுத்தோம். விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மானியமாக வழங்கப்பட்டது.

    சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம், தருமபுரி மாவட்டங்களில் மக்கா சோளம் பயிரில் அமெரிக்கன் படை பழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயிகள் கேட்காமலே ரூ.150 கோடி நிவாரணம் நான் வழங்கினேன். மேலும் ரூ.48 கோடி வழங்கி எங்கெல்லாம் மக்காச்சோளம் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோ அங்கு அரசாங்கமே பூச்சிக்கொல்லி மருந்து அடித்து விவசாயிகளை காப்பாற்றிய அரசாங்கம் அம்மா அரசாங்கம்.

    ஆனால் தி.மு.க. அரசு, மரவள்ளி கிழங்கு பயிரில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உதவவில்லை. விவசாயிகளை பாதுகாக்க தி.மு.க. அரசு தவறி விட்டது.

    ஏழை, எளிய மக்கள் அதிகம் பேர் தான் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்கள். கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு எப்படி கொடுத்தார்கள் என உங்களுக்கு தெரியும். ஒழுகிற வெல்லம் என அப்படிப்பட்ட பொங்கல் தொகுப்பை தான் தி.மு.க. ஆட்சியில் கொடுத்தார்கள்.

    அம்மா மறைவுக்கு பிறகு நான் முதல்-அமைச்சராக இருந்தபோது, நான் ஒரு விவசாயி என்ற காரணத்தினாலே தை பொங்கல் பண்டிகையை கிராமபுறங்கள் மகிழ்ச்சியோடும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொதுமக்களின் கோரிக்கை ஏற்று ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 2500 ரூபாய் பொங்கல் தொகுப்போடு வாரி வழங்கினேன். பச்சரிசி, ஏலக்காய், முந்திரி, முழுகரும்பு என பொங்கல் தொகுப்போடு கொடுத்தேன்.

    ஆனால் இந்த ஆண்டு கரும்பு கொடுக்க மறுத்தார்கள். ஆங்காங்கே விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். நானு அறிக்கை விட்டேன். தி.மு.க.வுடைய கவனத்துக் கொண்டு சென்ற பிறகு தான் இந்த ஆண்டு உங்களுக்கு முழு செங்கரும்பு கிடைக்க பெற்றது. இல்லையென்றால் பொங்கலுக்கு உங்களுக்கு செங்கரும்பு கிடைத்திருக்காது. ஆகவே விவசாயிகளை புறக்கணிக்கின்ற அரசு தி.மு.க.,

    ஆகவே போராடி, போராடி தான் மக்களுக்கு நன்மை பெற வேண்டும். அப்படிபட்ட ஆட்சி தான் மு.க. ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என்ன? நன்மை பெற்றார்கள். சிந்தித்து பாருங்கள். எந்த நன்மையும் கிடையாது. திராவிட மாடல் ஆட்சி விளம்பரத்துக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்து கொண்டிருக்கிறார்கள்.

    வீட்டுக்கு பயன்படுத்துகின்ற மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். 18 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி விட்டார்கள். கடை, வீடுகளுக்கு வரி, குடிநீர் வரி ஆகியவற்றையும் உயர்த்தி விட்டார்கள். உயர்த்தாத வரி கிடையாது. இவ்வளவு வரியை உயர்த்தியும், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அம்மா அரசு இருந்தபோது கிராமத்தில் கால்நடை வளர்ப்பு முகாம் நடத்தினோம். கோமாரி நோய் பாதிக்கப்படுகின்ற இடங்களுக்கு நேரில் சென்று தடுப்பு மருந்து வழங்கி கால்நடைகளை காப்பாற்ற வேண்டும். ஆனால் இந்த அரசு செய்ய தவறிவிட்டது.

    கிராமபுற மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுககு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அ.தி.மு.க. அரசு சாதனை படைத்தது, மு.க.ஸ்டாலினும், அவரது மகனும் தமிழகத்தை கூறு போட்டு ஆட்சி நடத்தி வருகிறார்கள். பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்தது தி.மு.க. இந்த அரசை வீட்டிற்கு அனுப்ப எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.

    எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நாம் அனைவருக்கும் பொன்னாள், எம்.ஜி.ஆர். பிறந்ததும் வரலாறு, அவர் மறைந்ததும் வரலாறு, அத்தகைய வரலாற்றை யாரும் படைக்கவில்லை. அண்ணாவின் புகழை பரப்பியவர் எம்.ஜி.ஆர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், அதே போல அ.தி.மு.க.வுக்கு வழி பிறந்து விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெய ராமன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
    • பூத் கமிட்டி, பாசறை அமைப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கழக அலுவல கத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெய ராமன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில், திருப்பூரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, மேலும் பார்க் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கிக் கொண்டாடுவது. பூத் கமிட்டி, பாசறை அமைப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதில் கட்சி நிர்வாகிகள் சிட்டி பழனிசாமி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, ஏ.எஸ்.கண்ணன், வி.பி.என்.குமார், கே.பி.ஜி.மகேஷ்ராம், தம்பி மனோகரன், கேச வன், பட்டுலிங்கம், கருணாகரன், திலகர் நகர் சுப்பு, ஹரிஹரசுதன், வேலுமணி, பி.கே.எம்.முத்து, சுந்தராம்பாள், கலைமகள் கோபால்சாமி, சென்னிமலை கோபால கிருஷ்ணன் உள்பட கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றார்கள். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்றைய தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்தது.
    • மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்ப, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் வீர சபதம் ஏற்று, கண்துஞ்சாது களப்பணி ஆற்றி, மீண்டும் கழகத்தின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்கிடுவோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. என்ற மாபெரும் பேரியியக்கத்தை புரட்சித் தலைவர் தொடங்கி, அதன் தலைவராக மக்களின் பேராதரவை பெற்று 3 முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராக நல்லாட்சியை வழங்கினார்.

    சங்க இலக்கிய காலத்தில் இருந்த கடையேழு வள்ளல்களைத் தொடர்ந்து, வாரி வாரி வழங்கி எட்டாவது வள்ளலாகத் திகழ்ந்தவர். எம்.ஜி.ஆர். தான் உழைத்து சேகரித்த செல்வத்தை, ஏழை, எளியோர்களுக்கும், நலிவடைந்தவர்களுக்கும் வழங்கிய வள்ளல் பெருந்தகை.

    தனது திரைப்படப் பாடல்கள், வசனங்கள், கதைகள் மூலமாக இயக்கத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை கிராமங்கள் தோறும் சென்றடையச் செய்து அடித்தட்டு மக்களின் பேராதரவினைப் பெற்று, அவர்களின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தவர்.

    1972-ம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசிக்கு ஏற்றவாறு பஞ்சப்படி கொடுக்கப்படும் என்று அறிவித்து அரசாணையை வெளியிட்டது. அப்போது தமிழக முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி இதை மாநில அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த மறுத்தார். பிறகு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான பஞ்சப்படி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கொடுக்கும் பொருட்டு, ஊதியக் குழு ஒன்றினை அமைத்து, அதை அமல்படுத்திக் காட்டி, அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

    இன்றைய தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி, கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்தது.

    இந்த மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்ப, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் வீர சபதம் ஏற்று, கண்துஞ்சாது களப்பணி ஆற்றி, மீண்டும் கழகத்தின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்கிடுவோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    எம்ஜிஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் 18-ம் தேதி முதல் 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. #MGRBirthday #ADMKMeetings
    சென்னை:

    அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்; கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரது அறிவிப்பிற்கிணங்க, டாக்டர் எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 18.1.2019 - வெள்ளிக்கிழமை முதல் 20.1.2019 ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.



    பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, புரட்சித் தலைவரின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MGRBirthday #ADMKMeetings
    எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி அவருடைய திருவுருவச்சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். #MGRBirthday #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி காலை 10 மணியளவில் திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலைக்கு துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    கழக அமைப்பு ரீதியான 70 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MGRBirthday #TTVDhinakaran
    தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டு 3 மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் அதிமுக நிர்வாகிகள் மூவர் 18 ஆண்டுகளாக சிறையில் உள்ளதால், அவர்களை விடுவிக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
    சென்னை:

    தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி நீண்டகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அந்தந்த ஜெயில்களில் இருக்கும் கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் அடுத்த கட்டமாக தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அ.தி.மு.க.வினர் 3 பேர் விடுதலையாகிறார்கள். கடந்த 2000-ம் ஆண்டில் தர்மபுரியில் நடந்த பஸ் எரிப்பில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் 
    பலியானார்கள்.

    இதுதொடர்பாக தர்மபுரி அ.தி.மு.க. நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மது, முனியப்பன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

    மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 3 பேரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இவர்கள் மூவரும் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    அவர்கள் 18 ஆண்டுகாலம் தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்யலாமா என்பது குறித்து சிறைத்துறை யுடன் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டதால் அவர்களுக்கு அரசு உத்தரவு பொருந்துமா? குடும்பத்தினர் ஏதும் ஆட்சே பனை தெரிவிக்கிறார்களா? 3 பேரின் மனநிலை என்ன? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் 1996-ம் ஆண்டு சிதம்பரம், அண்ணா மலை பல்கலைக் கழக மாணவரும் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகனுமான நாவரசு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸ்களில் அடைத்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டது.

    இதுதொடர்பாக அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அவருடன் படித்த மாணவரான ஜான்டேவிட் கைது செய்யப்பட்டார். அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருவதால் இவரையும் விடுதலை செய்வது குறித்து சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது.
    ×