search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meteorological Center"

    இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. #Southwestmonsoon
    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.



    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் நாடு முழுவதும் வழக்கமான அளவைவிட குறைவான அளவே (91 சதவீதம்) மழை பெய்து இருப்பதாகவும், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மழை அளவு மிகவும் பற்றாக்குறையாக உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.  #Southwestmonsoon
    வங்கக்கடல் பகுதியில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று புயலாக மாறி நேற்று முன்தினம் நள்ளிரவு ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடந்தது.

    இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும். சென்னை நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அது உருவாகும்பட்சத்தில், தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் (ஞாயிறு, திங்கள் கிழமை) ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. #Meteorological #Rain
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று அனேக இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும்(திங்கட்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடி, மின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்துள்ள மழை அளவு விவரம் வருமாறு:-

    தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகாசியில்(விருதுநகர் மாவட்டம்) 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர்(விருதுநகர்), விரிஞ்சிபுரம்(வேலூர்), ஆரணி(திருவண்ணாமலை), திண்டிவனம்(விழுப்புரம்) ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழையும், தம்மம்பட்டி(சேலம்), வானூர்(விழுப்புரம்), சேந்தமங்கலம்(நாமக்கல்) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை அளவும் பதிவானது.

    செஞ்சி, மயிலம்(விழுப்புரம்), சூளகிரி(கிருஷ்ணகிரி), செய்யாறு(திருவண்ணாமலை), கலவை(வேலூர்) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்து உள்ளது. போளூர்(திருவண்ணாமலை), திருத்தணி, பூண்டி(திருவள்ளூர்), வேலூர், மேலாலத்தூர்(வேலூர்), ராஜபாளையம்(விருதுநகர்), ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம்(காஞ்சீபுரம்), ஆத்தூர்(சேலம்), குன்னூர்(நீலகிரி) ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    கடலூர்(கடலூர்), ஆலங்காயம், காவேரிப்பாக்கம், திருப்பத்தூர், குடியாத்தம், ஆம்பூர்(வேலூர்), அஞ்சட்டி, ராயக்கோட்டை, ஓசூர்(கிருஷ்ணகிரி), கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை(ஈரோடு), கரூர், மாயனூர்(கரூர்), திருவண்ணாமலை, வந்தவாசி, சாத்தனூர் அணை(திருவண்ணாமலை), நாமக்கல், மங்களாபுரம்(நாமக்கல்), திருக்கோவிலூர், சங்கராபுரம்(விழுப்புரம்), பள்ளிப்பட்டு, திருவாலங்காடு(திருவள்ளூர்), காரைக்குடி(சிவகங்கை), காஞ்சீபுரம், உத்திரமேரூர்(காஞ்சீபுரம்) ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    மேலும் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. 
    தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை) மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கியது. பொதுவாக தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பெய்யும். கேரளா, கர்நாடகாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை வெளுத்து வாங்குகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை) மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தற்போது கேரளாவில் தொடர் மழை பெய்து வருவதால், அதன் தாக்கம் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

    அடுத்த 24 மணி நேரத்திலும் (இன்றும்) இந்த 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரையில், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    சின்னக்கல்லாரில் 26 செ.மீ., வால்பாறையில் 21 செ.மீ., வால்பாறை தாலுகா அலுவலகத்தில் 17 செ.மீ., தேவலாவில் 11 செ.மீ., பெரியாரில் 9 செ.மீ., நடுவட்டம், செங்கோட்டையில் தலா 7 செ.மீ., ஜி பஜாரில் 6 செ.மீ., பழனி, பொள்ளாச்சி, கூடலூரில் தலா 4 செ.மீ., ஊட்டி, பாபநாசம், பேச்சிப்பாறை, குளச்சல், குழித்துறையில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    வடகிழக்கு வங்கக்கடலில் ஒடிசாவை ஒட்டி உள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. எனினும், தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

    வலுவான தென்மேற்கு பருவக்காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும். இந்த காற்றின் வேகம் 60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.



    காற்றின் வேகம் காரணமாக அலைகளின் உயரம் அதிகரிக்கும். குறிப்பாக குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் 11 அடி முதல் 15 அடி உயரம் வரை அதிகரிக்கக் கூடும். தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் வங்கக்கடலின் ஆழமான பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படும்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

    வால்பாறை, சின்னக்கல்லார்(கோவை) ஆகிய இடங்களில் தலா 6 சென்டி மீட்டர் மழையும், பொள்ளாச்சியில்(கோவை) 4 செ.மீ. மழையும், நடுவட்டம், தேவலா(நீலகிரி), பாபநாசம்(நெல்லை), குழித்துறை(கன்னியாகுமரி) ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழையும், செங்கோட்டை(நெல்லை), தக்கலை, பேச்சிப்பாறை(கன்னியாகுமரி), பெரியார்(தேனி) ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. மேலும் நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், குளச்சல்(கன்னியாகுமரி) ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை அளவும் பதிவாகி உள்ளது. #tamilnews
    தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என்றும், சில மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை மற்றும் மிகக்கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து குளிர்வித்து வருகிறது. இன்றும் (சனிக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கனமழை மற்றும் மிகக்கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

    தேவலா (நீலகிரி) 8 சென்டி மீட்டர், வால்பாறை (கோவை) 7 செ.மீ., சின்னக்கல்லார் (கோவை) 6 செ.மீ., பாபநாசம் (நெல்லை), பெரியாறு (தேனி) தலா 5 செ.மீ., பொள்ளாச்சி (கோவை) 4 செ.மீ., நடுவட்டம் (நீலகிரி) 3 செ.மீ., செங்கோட்டை, தென்காசி (நெல்லை), நாகர்கோவில் (கன்னியாகுமரி) ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் மேலும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மராட்டியம், கோவா மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது.

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மலைசார்ந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சூறைக்காற்று அவ்வபோது வீசும்.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, சின்னக்கல்லார் பகுதியில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தோவாளை, கூடலூர், பெரியார் அணை ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளது. செங்கோட்டையில் 7 செ.மீ, கோவையில் 2 செ.மீ., தென்காசி மேட்டுப்பாளையத்தில் 1 செ.மீ, மழையும் பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில், இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 98 டிகிரி வெப்பநிலை காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மழை அளவு விவரம் வருமாறு:-

    புதுக்கோட்டை, திருப்பத்தூர், தாராபுரம், கோவிலான்குளம், அருப்புக்கோட்டை, கோத்தகிரி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 3 சென்டி மீட்டர் மழையும், பெரியார், இரணியல், சிவகாசி, தாளவாடி, திருமயம், ராயக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    தளி, பாப்பிரெட்டிபட்டி, குளச்சல், சூலூர், பவானிசாகர், பீளமேடு, தக்கலை, சத்தியமங்கலம், குடவாசல், அரவக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. 
    ×