search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "margazhi festival"

    • இந்த திருவிழா வருகிற 6-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 5-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா நாளை (புதன்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழா வருகிற 6-ந் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. இதனையொட்டி நேற்று காலை 9 மணிக்கு மேல் கோவிலில் உள்ள சித்திரசபை மண்டபத்தில் மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சித்திரை சபை மண்டபத்தில் உள்ள நடராஜமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து 18 ஊர் பிடாகைகள், வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவ பிரசாத், தெற்கு மண்மடம் நித்திய காரிய யோகஸ்தானிகர் திலீப் நம்பூதிரி, மற்றும் பக்தர்கள் முன்னிலையில் திருவிழா நோட்டீசுக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை மேளம், தாளம், வெடி முழக்கத்துடன், முத்துக்குடை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. சுசீந்திரம் கோவில் நுழைவு வாயில் முன்பு ஊர் மக்கள் சார்பில் கொடிப்பட்டத்திற்கு வரவேற்பு கொடுக்கின்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    தொடர்நது நாளை காலை 9.15 மணிக்கு மேல் தாணுமாலய சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்கு மண் மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கிறார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்டு 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் கோவில் கலையரங்கத்தில் சமய சொற்பொழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவில் 3-ம் நாள் திருவிழாவான 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காண வரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழாவான 1-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள், மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் நிகழ்ச்சியும், 7-ம் திருவிழாவான 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 9-ம் திருவிழாவான 5-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.

    இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 6-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விமரிசையாக நடைபெற இருக்கிறது.
    • 8-ந்தேதி தேவநாத சாமிக்கு தைலக்காப்பு உற்சவம் நடைபெறுகிறது.

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பகல் பத்து உற்சவம் நேற்று முதல் தொடங்கியது.

    இதையொட்டி பெருமாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பெருமாள், தேசிகர் சாமி புறப்பட்டு பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு பெருமாள், தேசிகர், ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கப்பட்டு சாமிக்கு சாற்றுமுறை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பகல்பத்து உற்சவத்தில் தினசரி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சாற்றுமுறை நடைபெறும். இதில் வருகிற 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

    அதை தொடர்ந்து 2-ந்தேதி மிக முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விமரிசையாக நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் இரவு ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. மேலும் வருகிற 8-ந்தேதி தேவநாத சாமிக்கு தைலக்காப்பு உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • கண்ணனை வேண்டி கன்னிப் பெண்கள் மேற்கொள்வதுதான் இந்தப் பாவை நோன்பு.
    • பெண்கள் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய கணவன் கிடைப்பர் என்பது நம்பிக்கை.

    பாவை நோன்பு என்பது உண்மையில் கன்னிப் பெண்களுக்கானது. தனக்கு ஏற்றார்போல் வாழ்க்கைத் துணையை அடையவும், தனது மனதிற்கேற்றார் போல் ஒரு வாழ்க்கை அமையவும், கண்ணனை வேண்டி கன்னிப் பெண்கள் மேற்கொள்வதுதான் இந்தப் பாவை நோன்பு.

    பக்தியின் மிகுதியால், தன்னையும் ஆயர்பாடியில் பிறந்த ஒரு பெண்ணாக பாவித்து, தான் மிகவும் நேசித்த கடவுளான கண்ணனையே தன்னுடைய கணவனாக அடையவேண்டி, பாவை நோன்பு மேற்கொண்டு ஆண்டாள் பாடிய பாடல்களே திருப்பாவை. 

    பன்னிரண்டு ஆழ்வார்களில், ஆண்டாள் மட்டுமே பெண் என்பதால், மற்ற ஆழ்வார்களுக்கில்லாத சிறப்பாக, கண்ணன் மீது கொண்ட பக்தியை அவளால் காதலாகவும் வழங்க முடிந்தது.

    கண் நிறைந்த கணவன் வேண்டும் என்று விரும்பும் பெண்கள் பாவை நோன்பை கடைபிடித்தால் அந்த ஆசை நிறைவேறும்.

    பெண்கள், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவள் ஆண்டாள். பெருமாள் மீது பக்தி கொண்டு அவரையே தன் கணவனாக அடைய விரும்பியவள்.

    அவள் கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தாள். அவளுக்கு அருள் செய்த சுவாமி, பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

    ஆகவே, பெண்கள் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய கணவன் கிடைப்பர் என்பது நம்பிக்கை.

    திருப்பாவை 30 பாசுரங்களும் மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் நல்ல கணவன் வேண்டியும் மழை வேண்டியும் செய்யும் நோன்பு முறைகளைப் பற்றிக் கூறுகின்றன.

    காத்தியாயனி என்னும் பாவைக்கு வழிபாடு செய்து அவரவர்களுக்கு வேண்டுவனவற்றை அருளும்படி வேண்டுவது வழக்கம். பாவை நோன்பு பெண்மக்கள் எடுக்கும் நோன்பு ஆகும்.

    கண்ணனை மனத்தில் வரித்த ஆண்டாள் தன்னை ஆய்ப்பாடிப் பெண்களில் ஒருத்தியாகப் பாவித்துக் கொள்கின்றாள்.

    திருவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபெருங்கோயில் நந்தகோபர் மாளிகையாகவும், அங்கு எழுந்தளியிருக்கும் இறைவனைக் கிருஷ்ணனாகவும் பாவித்து இடைப்பெண்கள் நோற்ற நோன்பை நோற்கின்றாள்.

    அந்நோன்பைப் பற்றித் திருப்பாவை, நிகழ்ச்சி அடிப்படையில் பதிவு செய்துள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி திருவிழா நாளை தொடங்குகிறது.
    • 10 நாட்கள் நடைபெறும் பகல் பத்து உற்சவம் ஜனவரி 1-ந் தேதி வரை நடக்கிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ேகாவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மார்கழி திருவிழா நாளை (23-ந் தேதி) பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    அன்றைய தினம் மாலை 5மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆண்டாள் பிறந்த வீட்டிற்கு வருகின்றனர். அங்கு அவருக்கு பச்சை காய்கறிகள் பரப்பி வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பிறந்த வீட்டிற்கு வந்த ஆண்டாள் வேதபிரான் பட்டர் திருமாளிகையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதன் பிறகு பகல்பத்து மண்டபத்திற்கு செல்கிறார். 10 நாட்கள் நடைபெறும் பகல் பத்து உற்சவம் ஜனவரி 1-ந் தேதி வரை நடக்கிறது. 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதை தொடர்ந்து ராப்பத்து திருவிழா தொடங்குகிறது.

    11-ந் தேதி வரை ராப்பத்து உற்சவம் ராப்பத்து மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் ஆண்டாள்,ரெங்கமன்னார் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். வருகிற 7-ந் தேதி பிரியாவிடை உற்சவம் நடைபெறுகிறது.

    உச்சநிகழ்ச்சியாக மார்கழி நீராட்ட எண்ணெய் காப்பு உற்சவ விழா 8-ந் தேதி எண்ெணய் காப்பு மண்டபத்தில் தொடங்குகிறது. இந்த விழா 15-ந் தேதி வரை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • இந்த உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பகல்பத்து உற்சவம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    இதையொட்டி, பெருமாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெறுகிறது. பின்னர் பெருமாள், தேசிகர் சாமியை பகல்பத்து மண்டபத்திற்கு கொண்டு சென்று, அங்கு பெருமாள், தேசிகர், ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும். பின்னர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கப்பட்டு சாமிக்கு சாற்றுமுறை நடக்கிறது. இந்த உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.

    வருகிற 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு அன்று, சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது. மேலும் மார்கழி மாதம் என்பதால் சாமிக்கு தினந்தோறும் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில், 1-ந்தேதி பகல் பத்து உற்சவம் நிறைவடையும் நிலையில், மறுநாள் 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • வருகிற 7-ந் தேதி பிரியாவிடை உற்சவம் நடைபெறுகிறது.

    ஆண்டாள் பிறந்த புண்ணிய பூமி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். இங்கு வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மார்கழி திருவிழா வருகிற 23-ந் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆண்டாள் பிறந்த வீட்டிற்கு வருகின்றனர். அங்கு அவருக்கு பச்சை காய்கறிகள் பரப்பி வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறந்த வீட்டிற்கு வந்த ஆண்டாள் வேதபிரான் பட்டர் திருமாளிகையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதன் பிறகு பகல்பத்து மண்டபத்திற்கு செல்கிறார்.

    10 நாட்கள் நடைபெறும் பகல் பத்து உற்சவம் ஜனவரி 1-ந் தேதி வரை நடக்கிறது. 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதை தொடர்ந்து ராப்பத்து திருவிழா தொடங்குகிறது.

    11-ந் தேதி வரை ராப்பத்து உற்சவம் ராப்பத்து மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். வருகிற 7-ந் தேதி பிரியாவிடை உற்சவம் நடைபெறுகிறது. உச்சநிகழ்ச்சியாக மார்கழி நீராட்ட எண்ணெய் காப்பு உற்சவ விழா 8-ந் தேதி எண்ணெணய் காப்பு மண்டபத்தில் தொடங்குகிறது. இந்த விழா 15-ந் தேதி வரை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • பாவை நோன்பின் மூலம் பெண்கள் ஆதிசக்தியை வழிபடும் மாதம் இது.
    • இம்மாதத்தில் முருகப்பெருமானுக்கு உற்சவம் நடத்தப்படுகிறது.

    * இம்மாத திருவாதிரை நட்சத்திரம் அன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்நாளில் நடராஜப் பெருமானும், சிவபெருமானும் வணங்கப்படுகிறார்கள்.

    * ரமண மகரிஷி, சாரதாதேவி, பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இம்மாதத்தில்தான் அவதரித்தனர்.

    * பாவை நோன்பின் மூலம் பெண்கள் ஆதிசக்தியை வழிபடும் மாதம் இது.

    * வைணவர்களால் கொண்டாடப்படும் பெரும் விழாக்களில் ஒன்றான 'வைகுண்ட ஏகாதசி' நடைபெறும் மாதம். இந்நாளில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

    * 12 ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி தினம் இம்மாதம் தான் வருகிறது.

    * 63 நாயன்மார்களில் சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், வாயில நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குரு பூஜை இம்மாதத்தில் நடைபெறுகிறது.

    * இம்மாதத்தில் முருகப்பெருமானுக்கு உற்சவம் நடத்தப்படுகிறது.

    • மார்கழி என்பது பூஜைகளுக்கு உரிய மாதம்.
    • பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வருவது.

    மார்கழி மாதத்தின் பிரதோஷ நன்னாள் நாளை (21-ம் தேதி). பிரதோஷ வேளையில் சிவ தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், பாவங்கள் தொலையும், புண்ணியங்கள் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான மாதம். மார்கழி என்பது பூஜைகளுக்கு உரிய மாதம். இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் எண்ணற்ற பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். இந்த மாதத்தில் நாம் செய்யும் பூஜைகளும் ஜபதபங்களும் மந்திரங்களும் மும்மடங்கு பலன்களைக் கொடுக்கும்.

    சிவ வழிபாடுகளில் மிக மிக முக்கியமான வழிபாடு என்று பிரதோஷத்தைக் குறிப்பிடுவார்கள். பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வருவது. திரயோதசி என்பது ஒவ்வொரு பெளர்ணமிக்கும் முந்தைய மூன்றாம் நாளும் அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளும் வருகிறது.

    திரயோதசி திதி வருகிற மாலை நேரம் பிரதோஷம். பிரதோஷத்தில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடந்தேறும். பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில்தான் சிவனாருக்கு பூஜைகள் நடத்தப்படும்.

    பிரதோஷ நன்னாளில், சிவலிங்கத்திருமேனிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது போலவே, அந்த நாளில், நந்திதேவருக்கும் வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். பிரதோஷம் என்பது எப்போதுமே, மாலை 4.30 முதல் 6 மணி வரை.

    செவ்வாய்க் கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் ராகுகால வேளையில், அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று துர்கைக்கு விளக்கேற்றுவார்கள். நெய்தீபம் அல்லது எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவார்கள்.

    மார்கழி மாதத்தின் பிரதோஷ நாளில், விரதம் இருந்து மாலையில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லுங்கள். நந்திதேவருக்கும் சிவலிங்கத்திருமேனிக்கு நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி, அபிஷேகத்தை தரிசியுங்கள். நமசிவாய மந்திரத்தைச் சொல்லி சிவனாரை வழிபடுங்கள். சிந்தையைத் தெளிவாக்கி, வாழ்வை வளமாக்கித் தந்தருள்வார் சிவனார்!

    • மார்கழி மாதம் முழுவதுமே பெருமாளுக்கு உரிய மாதம்.
    • பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிக்கும் பக்தர்கள் ஏராளம்.

    மார்கழி மாதம் என்பது வழிபாடுகளுக்கும் பூஜைகளுக்கும் உரிய மாதம். வேறு எந்த நிகழ்வுகளிலும் கவனம் செலுத்தாமல், உரிய முறையில் காலையும் மாலையும் பூஜைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபடுவது மிக உன்னதப் பலன்களையெல்லாம் வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    மார்கழி மாதம் முழுவதுமே, பனியும் குளிரும் பரவிக்கிடக்கிற பிரம்ம முகூர்த்தத்தில், ஆண்டாளின் திருப்பாவை பாடி அனந்தனை, அரங்கனை, மாலோனை, மகாவிஷ்ணுவை வழிபடுவார்கள் பக்தர்கள். 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என கீதையில், கிருஷ்ணவதாரத்தில் தெரிவித்துள்ளார் பகவான். மார்கழி மாதம் முழுவதுமே பெருமாளுக்கு உரிய மாதம்.

    ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசி திதியில், பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிக்கும் பக்தர்கள் ஏராளம். அதேசமயம், ஏகாதசி நன்னாளில், விரதம் மேற்கொள்ளும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

    ஏகாதசி நன்னாளில், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதும் பெருமாளுக்கு உகந்த புளியோதரை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்வதும் எண்ணற்ற பலன்களை வாரி வழங்கும்.

    இன்று விரதம் இருந்து மாலையில் பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். துளசி தீர்த்தம் பருகுங்கள். பாவங்களையெல்லாம் விலக்கித் தந்து, புண்ணியங்களையெல்லாம் போக்கி அருளுவார். மங்கல காரியங்களை நடத்தித் தந்தருளுவார். மங்காத செல்வம் தந்தருளுவார்.

    • பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர்.
    • பக்தர்கள் திருப்பாவை, பக்தி சொற்பொழிவு நடத்தினர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் தற்போது திருவண்ணாமலைக்கு வருகின்றனர். அதுமட்டுமின்றி அய்யப்ப பக்தர்களும் ஏராளமானோர் வருகின்றனர். இதனால் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவிலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது. பின்னர் சாமிக்கும், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதல் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர்.

    ஆரணி நகரில் சார்பனார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை திருப்பாவை உற்சவத்துடன் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பக்தர்கள் அனைவரும் அமர்ந்து திருப்பாவை, பக்தி சொற்பொழிவு நடத்தினர்.

    இதேபோல் தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும், கொசப்பாளையம் பகுதியில் உள்ள கில்லா சீனிவாச பெருமாள் கோவிலிலும், அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும், ஆரணி - ஆற்காடு சாலை இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும் மார்கழி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கீழ்பென்னாத்தூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்ட சீனிவாச பெருமாள் கோவில், சிவன் கோவில், காந்திதெரு வாசவி மகாலில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரசக்தி விநாயகர் கோவில், சக்தி விநாயகர் கோவில், வலம்புரி விநாயகர் கோவில் மற்றும் முத்தாலம்மன் கோவில், திரவுபதி அம்மன் கோவில், அய்யப்பசேவா சங்கம், மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    • ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்றது.
    • சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    காலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதர்த்தினிஅம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.

    கோவிலில் இருந்து எழுந்தருளிய சுவாமி-அம்பாள் தெற்கு ரத வீதி, மேற்குரத வீதி, நடுத்தெரு, திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாக ராமதீர்த்தம், லட்சுமணதீர்த்தம் வரை ஊர்வலமாக வந்து அங்கிருந்து வர்த்தகன் தெரு, மார்க்கெட் தெரு, நகரின் பல முக்கிய பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு சுவாமி-அம்பாள் மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

    அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு சாமி-அம்பாள் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே பக்தர்களுக்கு நேரில் வந்து படி அளப்பதாக கூறப்படுகின்றது. அதுபோல் நேற்று சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து எழுந்தருளிய நிகழ்ச்சியை தொடர்ந்து 7 மணி முதல் 12.30 மணி வரை கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 
    • தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும். 

    மார்கழி மாதத்தில் வழிபாடு என்பது வழிவழியாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

    மார்கழி மாதத்தில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம். மேலும் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

    மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் நித்ய விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமந்நாராயணனின் கேசவா, நாராயணா, கோவிந்தா, மாதவா, மது சூதனா, விஷ்ணு, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மனாபா, தாமோதரா என்ற பனிரெண்டு நாமங்களும், பனிரெண்டு மாதங்களாக கருதப்படுகின்றன. இதில் முதல் நாமமாக விளங்கும் ஸ்ரீமந்நாராயணனின் கேசவா என்பது மாதங்களுக்கு மணிமகுடமான மார்கழியாக விளங்குகிறது. 

    மார்கழி மாதத்தில், பெண்கள் இருக்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். இது பாவை நோன்பு என்றும் அழைக்கப்பெறுகின்றது. பாவை நோன்புக் காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ்ந்து விரதத்தை கடைபிடிப்பார்கள்.

    திருவெம்பாவை நோன்பு: திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு தொடங்கி கடைபிடிக்கப்படும் நோன்பாகும். இந்த நோன்பு பாவை நோன்பு, கார்த்யாயனி விரதம் என்று அழைக்கப்படும் சிவ விரதமாகவும், வைணவ விரதமாகவும் போற்றப்படுகிறது.

    மார்கழி மாதத்தில் வைகுண்ட பதவி பெறும் வைகுண்ட ஏகாதசி வருகின்றது. இது வருடத்தில் முக்கிய ஏகாதசி என்பதால் வைகுண்ட ஏகாதசி வழிபட மறவாதீர்கள். மார்கழியில் வருகின்ற பாவை நோன்பு பெண்கள் இருக்கும் விரதங்களில் முக்கியமானது.

    திருமொழி, திருப்பாவை, ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ வேண்டும். திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய திருவாதிரை நோன்பு சிவ விரதமாக போற்றப்படுகின்றன. திருவாதிரை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, பௌர்ணமி அன்று கடைபிடிக்கப்படும்.

    இன்றைய தினம் திருவாதிரை களி செய்து சிவபெருமானுக்கு படைத்து வழிபடுவார்கள். மாங்கல்ய பலம் பெற நோன்பு இருக்கும் பெண்கள் அன்றைய தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாராயணம் செய்வர். திருவாதிரை நட்சத்திரம் அன்று புது மாங்கல்யச் சரடு மாற்றிக் கொள்வார்கள்.

    ×