search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏகாதசி"

    • ஒரே ஒரு நாள் பலனை மட்டும் கொடு. உன்னை விட்டு விடுகிறேன் என்றது.
    • நம்பாடுவான் அதற்கும் மறுத்தார். இறுதியில் பிரம்மராட்ச பூதம் கெஞ்சியது.

    அந்த உற்சாகமும் மலர்ச்சியும் பூதத்துக்கு மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

    சரி உன்னை விட்டு விடுகிறேன்.

    நீ இதுவரை பாடித்துதித்தாய் அல்லவா. அதன் பலனைக் கொடு உன்னை விடுகிறேன் என்றது பிரம்மராட்ச பூதம்.

    அதை மறுத்து தன்னை சாப்பிடச் சொன்னார் நம்பாடுவான்.

    இதனால் பூதம் மேலும் அதிர்ந்தது.

    ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாய்? மனிதப் பிறவி கிடைத்தற்கரியது என்பது உனக்குத் தெரியாதா?

    போய் உன் குடும்பத்தோடு சந்தோஷமாக இரு.

    ஒரே ஒரு நாள் பலனை மட்டும் கொடு. உன்னை விட்டு விடுகிறேன் என்றது.

    நம்பாடுவான் அதற்கும் மறுத்தார். இறுதியில் பிரம்மராட்ச பூதம் கெஞ்சியது.

    தயவு செய்து உன் பலனை எனக்கு கொடு.

    அதன் மூலம் என்னுடைய பிரம்மராட்ச கோலம் முடிவுக்கு வரும் என்று நம்பாடுவானிடம் மன்றாடியது.

    அதனால் மனமிரங்கிய நம்பாடுவான். அன்று தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனைக் கொடுத்தான்.

    பிரம்மராட்சஸ் தன்னுடைய வடிவம் நீங்கி, மேலுலகை அடைந்தது.

    இதனால் இந்த ஏகாதசிக்கு "கைசிக ஏகாதசி" என்று பெயர்.

    இன்றும் திருக்குறுங்குடியில் இந்த கைசிக ஏகாதசி விசேஷமாக நடைபெறுகிறது.

    அன்று கைசிக புராண நாடகமும் நடைபெறுகிறது.

    கைசிக ஏகாதசி விரதமிருக்கும் பக்தனுக்கும் சாப நிவர்த்தி செய்யும் ஆற்றல் உண்டாகிறது என்பது இந்த ஏகாதசியின் தனிச்சிறப்பு.

    • அவரை பிடித்துத் தூக்கியது. நம்பாடுவானிடம் எந்த சலனமுமில்லை. மிகவும் பசிக்கிறதா?
    • சரி என்னைச்சாப்பிட்டு உன் பசியைத் தீர்த்துக்கொள் என்றார் நம்பாடுவான். பிரம்மராட்ச பூதம் அதிர்ந்தது.

    தவத்தாலும் காணமுடியாத அழகிய நம்பியின் திருவுருவைக் கண்டு தொழுதார் நம்பாடுவான்.

    மனம் நிறைந்தது. சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற அதிவேகமாக நடந்தார்.

    அவருக்காகவே காத்திருந்த பிரம்மராட்ச பூதம் நம்பாடுவானைப் பார்த்ததும் வேகமாக ஓடி வந்தது.

    அவரை பிடித்துத் தூக்கியது. நம்பாடுவானிடம் எந்த சலனமுமில்லை. மிகவும் பசிக்கிறதா?

    சரி என்னைச்சாப்பிட்டு உன் பசியைத் தீர்த்துக்கொள் என்றார் நம்பாடுவான்.

    பிரம்மராட்ச பூதம் அதிர்ந்தது.

    தன்னுடைய மரணத்தை இவன் எப்படி சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறான்?

    அப்படி இவனை நாம் சாப்பிடுவதால் அதைவிடப் பெரிதாக ஏதோ ஒன்று அவனுக்கு கிடைக்கப்போகிறது என்று தோன்றியது.

    அதன் தயக்கத்தைக் கவனித்தார் நம்பாடுவான்.

    என்ன யோசனை? சீக்கிரம் சாப்பிட்டு உன் பசியைத் தனித்துக்கொள். என்னுடைய விரதத்தை முடித்து விட்டேன்.

    உற்சாகமாகச் சொன்னார் நம்பாடுவான்.

    • சத்தியத்தைவிட உயிர் பெரிதல்ல. பூதத்தின் பசியைப் போக்குவதைவிட இந்த உடல் பெரிதுமல்ல.
    • பூதத்தை திருப்திப்படுத்துவதே என் திருப்தி என்றார். அதைக்கேட்ட முதியவர் சுயஉருவைக் காட்டினார்.

    பெருமானின் தரிசனம் கிடைத்த சந்தோஷம் ஒரு பக்கம், பிரம்மராட்ச பூதம் பசியைத் தீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் மறுபுறம்.

    வேகமாக நடந்தார்.

    அப்போது முதியவர் ஒருவர் வந்தார். அவர் நம்பாடுவாரிடம் இவ்வளவு அவசரமாக எங்கே போகிறாய்? என்று கேட்டார்.

    அவரது தோற்றமும் இனிய பேச்சும், நம்பாடுவாரை கவர்ந்தன.

    மிகுந்த அடக்கத்துடன் தான் செல்லும் காரணத்தைச் சொன்னார். அதை கேட்ட முதியவர் சிரித்தார்.

    இதென்ன பைத்தியக்காரத் தனம்? யாராவது வலியச் சென்று உயிரை விடுவார்களா?

    உயிருக்கே ஆபத்தான சந்தர்ப்பத்தில் சொல்லப்படும் பொய் பாவமாகாது. போய் பிழைக்கும் வழியைப் பார் என்றார் அவர்.

    சத்தியத்தைவிட உயிர் பெரிதல்ல. பூதத்தின் பசியைப் போக்குவதைவிட இந்த உடல் பெரிதுமல்ல.

    எனவே பூதத்தை திருப்திப்படுத்துவதே என் திருப்தி என்றார் நம்பாடுவார்.

    அதைக்கேட்ட முதியவர் சுயஉருவைக் காட்டினார்.

    • நம்பாடுவான் மனங்குளிர்ந்தார். பெருமானின் திருவருளை நினைந்து கண்ணீர் விட்டார்.
    • அப்போது தனக்காக பூதம் பசியோடு காத்துக் கொண்டிருப்பது அவருக்கு நினைவில் வந்து புறப்பட்டார்.

    குறுங்குடிக்கு அருகே நம்பாடுவான் வந்தார். ஆலயத்தின் தொலைவில் நின்றபடியே பாட ஆரம்பித்தார்.

    மனதுக்குள் சந்தோஷமும் பொங்கியது. சற்றே துன்பமும் ஏற்பட்டது.

    இன்றைய ஏகாதசியும் வீணாகாமல் பாட முடிந்ததே என்பது நம்பாடுவாருக்குள் ஏற்பட்ட சந்தோஷமாகும்.

    ஆனால் பெருமானை தரிசிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது.

    நம்பாடுவானின் மனத்தில் அந்த வருத்தம் அழுத்தும் முன்பாக விலகியது கொடிமரம்.

    கருவறையில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்தார் அழகிய நம்பி.

    நம்பாடுவான் மனங்குளிர்ந்தார். பெருமானின் திருவருளை நினைந்து கண்ணீர் விட்டார்.

    அப்போது தனக்காக பூதம் பசியோடு காத்துக் கொண்டிருப்பது அவருக்கு நினைவில் இருந்தது. வேகமாக புறப்பட்டர்.

    • எதற்கும் பலனில்லாத இந்த உடல், உன் பசியைப் போக்க உதவும் என்றால் அது சிறப்பானதுதான்.
    • ஆனால் நான் சென்று பெருமானைத் துதித்து விட்டு வருகிறேன் என்றார். அதை கேட்டு பூதம் சிரித்தது.

    அன்று கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி. வழக்கம் போல நம்பாடுவான் புறப்பட்டு ஆலயத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

    மகேந்திரகிரியில் இருந்து குறுங்குடி செல்லும் வழி அடர்த்தியான காடு.

    அந்த காட்டின் வழியே வந்தவரை தடுத்து நிறுத்தியது ஒரு பெரிய பூதம்.

    "நல்லவேளை! வந்தாயா? என்னுடைய பத்து நாள் பசி தீர்ந்து போயிற்று" என்று சொல்லி, நெருங்கியது.

    பயம்தரக்கூடிய அந்த கோரவடிவைக் கண்டும் கலங்கவில்லை நம்பாடுவான்.

    இன்று நம்மால் பாடித் துதிக்கமுடியாமல் போகிறதே என்றுதான் கலங்கினார். அதை வாய்விட்டு சொன்னார்.

    உன்னுடைய விருப்பப்படியே ஆகட்டும்.

    எதற்கும் பலனில்லாத இந்த உடல், உன் பசியைப் போக்க உதவும் என்றால் அது சிறப்பானதுதான்.

    ஆனால் நான் சென்று பெருமானைத் துதித்து விட்டு வருகிறேன் என்றார்.

    அதை கேட்டு பூதம் சிரித்தது.

    நான் ஏமாறுவேன் என்று நினைக்கிறாயா? என்னிடமிருந்து தப்புவதற்காக சொல்லும் பொய் இது.

    உன்னை விழுங்கி என் பசியைத் தீர்த்துக்கொள்வேன் என்று ஓடிவந்தது.

    அப்போதும் கூப்பிய கை விலக்காமல் பேசினார் நம்பாடுவான்.

    உன்னிடம் சொன்னபடி நான் கண்டிப்பாக திரும்பி வருவேன்.

    அப்படி வராமல் போனால் நரகத்தில் உழலும்படியான பதினெட்டு வகையான பாவங்கள் என்னை வந்து சேரட்டும் என்றார்.

    இந்த வார்த்தையில் மனம் இளகிய பிரம்மராட்சத் பூதம் அவனை ஆலயம் செல்ல அனுமதித்தது.

    • இது காரணப்பெயர். “நம்மைப் பாடுவான்” என்று பெருமானால் சொல்லப்பட்டதால் நம்பாடுவான் என்றே ஆயிற்று.
    • தாழ்த்தப்பட்ட குலத்திலே பிறந்த போதிலும் அவருடைய பக்தி மிக உயர்வாய் இருந்தது.

    இந்த திருக்குறுங்குடிக்கு அருகில் உள்ள மகேந்திர கிரியின் சாரலில் வசித்து வந்தவன் நம்பாடுவான் என்ற பக்தன்.

    இது காரணப்பெயர். "நம்மைப் பாடுவான்" என்று பெருமானால் சொல்லப்பட்டதால் நம்பாடுவான் என்றே ஆயிற்று.

    தாழ்த்தப்பட்ட குலத்திலே பிறந்த போதிலும் அவருடைய பக்தி மிக உயர்வாய் இருந்தது.

    அதிகாலை பொழுதில் எழுந்து நீராடி, ஆலயத்தை நாடிச்செல்வார்.

    குலத்தினால் தாழ்ந்தவன் என்று அனுமதிக்கப்படாத போதிலும், தொலைவில் நின்று குறுங்குடி நம்பியை நினைத்து மனங்கசிந்து பாடுவார்.

    ஒரு நாள் இரு நாளல்ல. பத்து ஆண்டுகளாக பாடிக்கொண்டிருக்கிறார் நம்பாடுவான்.

    • திருநெல்வேலியில் இருந்து சுமார் 47 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்.
    • நான்கு ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம் இது.

    ஏகாதசியின் சிறப்புக்கு எத்தனையோ சம்பவங்கள் உதாரணமாக உள்ளன.

    அதில் நம்பாடுவான் வாழ்க்கை தனித்துவம் கொண்டது.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 47 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்.

    பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் என்று நான்கு ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம் இது.

    திருமங்கையாழ்வார் கடைசியில் பாடியதும், முக்தி பெற்றதும் இங்கு தான்.

    இங்கே நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலைமேல் நம்பி என்று ஐந்து விதமாக காட்சி தருகிறார் பெருமாள்.

    வராக அவதாரம் கொண்டு நிலங்களை மீட்டருளிய பெருமாள் இங்கு தங்கியதாலும், தன்னுடைய பேருருவை குறுக்கிக்கொண்டு திகழ்ந்ததாலும் குறுங்குடி என்று தலத்துக்குப் பெயர் வந்தது.

    • குருசேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்த நாள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
    • பாற்கடலில் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும்.

    திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராட்சசனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.

    ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்த விரத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனை ரும்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது.

    பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டில் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.

    பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும்.

    குருசேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்த நாள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும்.
    • மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம்.

    ராவணின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத வளர்பிறை ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர்.

    பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்திருளினார்.

    திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலை கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது.

    இந்தயோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார்.

    இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும். மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம்.

    ஒருவருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மகா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    அம்பரீஷ மகாராஜாவை திருமாலின் சுதர்சன் சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.

    • ஓர் ஆண்டிற்கு இருபத்து நான்கு பட்சங்கள். இருபத்து நான்கு பட்சங்களுக்கு ஏகாதசிகள்.
    • ஆனால் சில ஆண்டுகளில் 24 வருடங்களுக்கு மேலும் சில நாட்கள் வரும்.

    ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. அவ்வாறு ஏகாதசி திதிக்கு உரிய தேவதை தர்மம் ஆகும்.

    அதனால் இந்த திதியை 'தர்மதிதி' என்றும் கூறுவது உண்டு.

    எனவே தர்ம திதியாகிய ஏகாதசி விரதத்தை ஒருவர் தவறாது பின்பற்றினால் தர்மத்திற்கு வளர்ச்சி ஏற்படும்.

    அதனால் விரதம் இருப்பவர்கள் பாவங்கள் நீங்கி மேன்மை அடைவார்கள்.

    கர்ம மேந்திரியங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5,மனம்1 ஆகிய இந்தப் பதினொன்றாலும் செய்யப்படும் தீவினைகள், இந்த ஏகாதசி விரதம் இருப்பதால் அழியும்.

    ஏற்கனவே செய்த தீவினைகள் அழிந்துவிடும்.

    பெருமாளை வணங்குகிறோம் இனி தீவினைகள் செய்ய மாட்டோம் என்பதை அவ்வப்போது மறந்துவிடாமல் உறுதியுடன் இருக்க ஏகாதசி விரதம் முக்கியமானதாகும்.

    ஓர் ஆண்டிற்கு இருபத்து நான்கு பட்சங்கள். இருபத்து நான்கு பட்சங்களுக்கு ஏகாதசிகள்.

    ஆனால் சில ஆண்டுகளில் 24 வருடங்களுக்கு மேலும் சில நாட்கள் வரும்.

    எனவே சில ஆண்டுகளில் 25 ஏகாதசிகள் வரும்.

    இந்த ஏகாதசிகளின் வரிசை மார்கழி மாதம் தேய்பிறை பகுதியில் ஆரம்பித்து அடுத்து வரும் கார்த்திகை மாத வளர்பிறைப் பகுதியில் முடிவடைகிறது.

    • பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதிக்கு உரியது.
    • அமாவாசையில் இருந்து ஆரம்பித்து பவுர்ணமி வரை உள்ள திதிகள் வளர்பிறை திதிகள்.

    ஆதி திருவரங்கம் ரங்கநாதர் பெருமாள் ஆலயத்தில் ஏகாதசி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    அன்று மூலவர் பெரிய பெருமாளுக்கு செய்யப்படும் பூஜைகளை பார்த்து தரிசிக்க நீண்ட தூரத்தில் இருந்து எல்லாம் பக்தர்கள் வருகிறார்கள்.

    அந்த அளவுக்கு இந்த தலத்தின் ஏகாதசி பூஜை சிறப்பு பெற்றுள்ளது.

    எனவே ஏகாதசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஏகாதசியை விட உயர்ந்த விரதம் வேறு ஏதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.

    எந்த நிலையிலும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.

    பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திதிக்கு உரியது.

    அமாவாசையில் இருந்து ஆரம்பித்து பவுர்ணமி வரை உள்ள திதிகள் வளர்பிறை திதிகள்.

    இது சுக்ல பட்சம் எனப்படும். பவுர்ணமியில் இருந்து ஆரம்பித்து அமாவாசை வரை உள்ள திதிகள் தேய்பிறை திதிகள்.

    இது கிருஷ்ண பட்சம் எனப்படும்.

    இந்த இரண்டு பட்சங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளில் வரும் திதி ஏகாதசி திதி.

    ஏகம்+தசம்= அதாவது 1+10=11 என்பதுதான் ஏகாதசி திதி. 

    • அம்பரீஷ மகாராஜாவை திருமாலின் சுதர்சன் சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.
    • இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும்.

    ராவணின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத வளர்பிறை ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர்.

    பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்திருளினார்.

    திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலை கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது.

    இந்தயோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார்.

    இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும். மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம்.

    ஒருவருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மகா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    அம்பரீஷ மகாராஜாவை திருமாலின் சுதர்சன் சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.

    திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராட்சசனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.

    ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்த விரத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனனை ரும்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது.

    பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டில் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.

    பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும்.

    குருசேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்த நாள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×