search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maintenance"

    • 0.80 எக்டர் செடி முருங்கை சாகுபடி செய்வதற்கு ரூ.16 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.
    • கால்நடை பராமரிப்பு நிபுணர் மனோகரன், செயற்பொறியாளர் சுப்புராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    தஞ்சாவூர்:

    உலக வங்கி நிதியின் கீழ் தமிழ்நாடு வேளாண்மை நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டம் தஞ்சாவூர் மாவட்ட த்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் செடி முருங்கை பரப்பு விரிவாக்கம் இனத்திற்கு புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மனைவி வேம்பரசி என்பவருக்கு 0.80 எக்டர் செடி முருங்கை சாகுபடி செய்வதற்கு ரூ.16 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் வேம்பரிசியின் விவசாய வயலை உலக வங்கியின் சார்பாக தோட்டக்கலை நிபுணர் சாஜன் கொரியன் (உணவு மற்றும் விவசாய அமைப்பு), தோட்டக்கலை நிபுணர் டாக்டர் வித்யாசாகர், வேளாண்மை நிபுணர் ஷாஜகான், வேளாண் விற்பனை நிபுணர் ராஜேந்திர பாண்டியன், கால்நடை பராமரிப்பு நிபுணர் மனோகரன், செயற்பொறியாளர் சுப்புராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்த நிகழ்வில் தஞ்சாவூர் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பில் தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன், தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தமிழ் செல்வி, துணை தோட்டக்கலை அலுவலர் செந்தில்குமரன், உதவி அலுவலர்கள் ரகுபதி, கரிகாலன், ராஜேஷ் கண்ணன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • குழந்தை ஏசு கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    இதனால் தஞ்சை அருளானந்தநகர், பிலோமினாள்நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்புநகர், திருச்சி ரோடு, வ.உ.சி.நகர், பூக்காரத்தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், கலெக்டர் பங்களாரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரிநகர், காவேரிநகர், நிர்மலாநகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திராநகர், ஆர்.ஆர்.நகர், சேரன்நகர், யாகப்பாநகர், அருளானந்தம்மாள்நகர், குழந்தைஏசு கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சாவூர் நகர் 110/11 கே.வி. துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் நகர் 110/11 கே.வி. துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வ.உ.சி. நகர், பூக்கார தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ. நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், எஸ்.இ. ஆபீஸ், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ். போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம் தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கோ-ஆப்பரேட்டிவ் காலனி, நியூ ஹவுசிங் யூனிட், நட்சத்திரா நகர், வி.பி. கார்டன், ஆர்.ஆர். நகர், சேரன் நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தையேசு கோவில், பிசப் காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும், மின்தடை குறித்த விபரங்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பராமரிப்பில்லாத சித்தார்கோட்டை சமத்துவபுரம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்று எதிர்பார்க்கின்றனர்.
    • திருவள்ளுவர் சிலைகளையும் பராமரித்து பாதுகாக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலை கூண்டில் அடைக்கப்பட்டு அந்த பகுதி பராமரிக்கப்படாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இந்த சமத்துவபுரத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

    தமிழக அரசு இந்த ஆண்டு சமத்துவபுரங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் ரூ.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் வந்த நிலையில், இந்த நிதியை முறையாக பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலைகளையும், திருவள்ளுவர் சிலைகளையும் பராமரித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 63 நாட்டுப்புற கலைஞா்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் காசோலை வழங்கப்பட்டுள்ளது.
    • குடும்ப பராமரிப்பு நிதியுதவி 5 பேருக்கு ரூ. 25,000 வீதம் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டுத் துறை சாா்பில் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு இசைக் கருவிகள், ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கான நிதியுதவி மற்றும் மறைந்த கலைஞா்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    விழாவில் நாட்டுபுற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத் தலைவா் வாகை சந்திரசேகா் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    நலிந்த நிலையில் வாழும் கலைஞா்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி ரூ. 3,000 வழங்குதல், புகழ்பெற்ற மறைந்த கலைஞா்களின் குடும்பங்களுக்கு குடும்ப பராமரிப்பு நிதியுதவி தற்போது ரூ. 25,000 வழங்குதல், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கும், கலைக்குழுக்களுக்கும் இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள் வாங்க ரூ. 10,000 வீதம் 500 கலைஞா்களுக்கு வழங்கப்படுகிறது.

    இதன்படி, தஞ்சாவூா் மண்டலத்தில் (தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள்) நலிந்த நிலையில் வாழும் 63 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் காசோலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப பராமரிப்பு நிதியுதவி 5 பேருக்கு ரூ. 25,000 வீதம் வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் நீலமேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை கோர்ட்டு ரோட்டில் உள்ள நகர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்சார வாரிய தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை கோர்ட்டு ரோட்டில் உள்ள நகர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள் நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வர நகர், உமாசிவன் நகர், பி.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர், டிசிடபிள்யூஎஸ் காலனி, களிமேடு-3 மற்றும் 4. மேல வீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடிரோடு, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளை கேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வெங்கடேச பெருமாள் கோவில், சேவியர் நகர், சோழன் நகர், கல்லணை கால்வாய் ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தாபளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஏபி சுவிட்ச் வரை மின் வினியோகம் இருக்காது.

    இதைப்போல தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள 110 கி.வோ. தொகுப்பு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம் நகர், கரூப்ஸ் நகர், ஏ.வி.பி. அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, மானோஜிப்பட்டி, ரெட்டிப்பாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவையாறு மற்றும் மேலத்திருப்பந்துருத்தி துணை மின் நிலையங்களில் வருகிற 21-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    திருவையாறு:

    திருவையாறு மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவையாறு துணை மின்நிலையம் மற்றும் மேலத்திருப்பந்துருத்தி துணை மின் நிலையங்களில் வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையங்களுக்குட்பட்ட திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திரு ப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம, பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களுர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யா ணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பூண்டி மற்றும் ராகவம்மாள்புரம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள பூண்டி மற்றும் ராகவம்மா ள்புரம் துணை மின் நிலையங்களில் நாளை ( வியாழக்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன.எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம் , மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம் , பள்ளியூர், களஞ்சேரி, இரும்பு தலை, ரங்கநாதபுரம், சூலியக் கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளமார்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலை கோட்டை, சின்ன புலிகுடிகாடு, நார்த்தேவன், குடிக்காடு அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தி அம்மாள்புரம், பனையக்கோட்டை, சடையார் கோவில், துறையு ண்டார் கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • கோசாலையில் 1000-க்கும் மேற்பட்ட பசுக்கள், கன்றுகள், காளைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • பசுக்களை வழிபடுவதன் மூலம் நமது வாழ்வில் சகல விதமான சவுபாக்கியங்களும் கிட்டும்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த கோவிந்தபுரத்தில் பாண்டுரங்கன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் உள்ள கோசாலையில் 1000-க்கும் மேற்பட்ட பசுக்கள், கன்றுகள், காளைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மாட்டு பொங்கலை முன்னிட்டு உலக மக்கள் நன்மைக்காக கோபூஜை வழிபாடு நடைபெற்றது.

    இதில் நூற்றுக்கணக்கான தம்பதியினர் ஒரே நேரத்தில் கோசாலையில் இருக்கும் பசுக்களுக்கு மஞ்சள் குங்குமமிட்டு, வேத பண்டிதர் மந்திரங்கள் கூற அதனை திரும்ப கூறி, உதிரி மலர்களாலும், மஞ்சள் தடவிய அட்சதைகளாலும் பூஜைகள் மற்றும் அர்ச்சனை செய்தும், தீபங்கள் காட்டியும் வழிபட்டனர்.

    பின், பசுக்களுக்கு வாழைப்பழங்களையும், கரும்புகளையும் உணவாக அளித்தனர்.

    பசுக்களை வழிபடுவதன் மூலம் நமது வாழ்வில் சகல விதமான சவுபாக்கி யங்களும் கிட்டும் மற்றும் அனைத்து விதமான தெய்வங்களையும், தேவர்களையும் வழிபட்ட பலன் கிட்டும் என்பதும் ஐதீகம் என்கின்றனர்.

    • தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு ரெயில் வழக்கமாக புறப்பட்டு மயிலாடுதுறைக்கு சென்றது.
    • திட்டைக்கும், பண்டாரவாடைக்கும் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில் நிலையத்தின் வழியாகவும், தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்தும் பல்வேறு ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு ரெயில் (எண்:06874) வழக்கமாக புறப்பட்டு மயிலாடுதுறைக்கு சென்று வந்தது. இந்த ரெயில் புறப்படக்கூடிய நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    திட்டைக்கும், பண்டாரவாடைக்கும் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் தஞ்சை-மயிலாடுதுறை ரெயில் காலை 10.05 மணிக்கு பதிலாக காலை 11.40 மணிக்கு புறப்படும்.

    இந்த மாதம் (ஜனவரி) முழுவதும் இதே நேரத்தில் தான் புறப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணியில் 2280 பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்
    • எந்த வித முகாந்திரமும் இல்லாததை கண்டு ஏமாற்றமடைந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் 13 யூனியன்களில் 688 ஊராட்சிகளில் 2286 உட்கிடை கிராமங்களில் 3689 பெரிய தண்ணீர் தொட்டிகள், 1872 சிறிய தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இந்த தண்ணீர் தொட்டிகளில் இருந்து கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணியில் 2280 பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தண்ணீர் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் சரியான முறையில் பராமரித்து சுத்தம் செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கவில்லை எனில் இன்று காலையில் சுத்தம் செய்ய வேண்டும் என்று ஊராட்சி தலைவர், செயலாளர்களுக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டார். மேலும், சுத்தம் செய்யப்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்படும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தினார். எனவே, அனைத்து தண்ணீர் தொட்டிகளையும் சுத்தம் செய்ய தேவையான பணியாளர்களை பணியமர்த்திட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    அதன்படி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பொன்னம்பலம், கோலியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜானகி, அனந்தலட்சுமி மற்றும் அதிகாரிகள் இன்று காலை கோலியனூர் ஊராட்சியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டு, பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதையடுத்து கோலியனூரை அடுத்த பாளை அகரம் ஊராட்சிக்கு சென்ற கலெக்டர், அங்குள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான எந்த வித முகாந்திரமும் இல்லாததை கண்டு ஏமாற்றமடைந்தார். 

    இதையடுத்து பாளைஅகரம் ஊராட்சி செயலர் விநாயகம் அழைத்து விசாரித்தார். அவரின் பதில் கலெக்டருக்கு திருப்தியளிக்காததால் விநாயகத்தை தற்காலிகமாக சஸ்பெண்டு செய்து கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். தொடர்ந்து பாளைஅகரம் ஊராட்சி தலைவர் லதாவை அழைத்து வாட்டர் டேங்குகளை சுத்தம் செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டுமென நோட்டீஸ் வழங்கினார். இதைத் தொடர்ந்து பணங்குப்பம் ஊராட்சி, தொடர்ந்தனூர் ஊராட்சிகளுக்கும் கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார். விழுப்புரம் கலெக்டர் மோகனின் இந்த அதிரடி நடவடிக்கை ஊராட்சி செயலர்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்த கோவில் சின்ன ஸ்ரீரங்கம், சின்ன திருவரங்கம் என்று அழைக்கப்படுகிறது.
    • மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோவில் போதிய பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் அருகே திருபுவனம் என்ற கிராமத்தில் ஸ்ரீரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. பக்தர்களால் இந்த கோவில் சின்ன ஸ்ரீரங்கம், சின்ன திருவரங்கம் என்று அழைக்கப்படுகிறது.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்வூர் புத்தூர் நாச்சியார் விண்ணகரம், திருபுவனவீரபுரம், விக்கிரம சோழ விண்ணகரம் என்றெல்லாம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கி றது.

    இந்த கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. கடந்த 2013-ம்ஆண்டு அரசின் ஒப்புதலோடு இந்த கோவிலில் திருப்பணி தொடங்கப்பட்டன.

    ஆனால் அந்த பணிகள் முடியவில்லை. தற்போது இந்த கோவில் சிதிலமடைந்து போதிய பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.

    இதனால் பழைமை மாறாமல் இந்த கோவிலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஊர் மக்களால் அதற்காக திட்ட மிடப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு அடித்தளம் போட்ட நிலையிலேயே உள்ளன.

    கோவில் திருப்பணி முடிய அரசு தேவையான நிதிஉதவிகளை வழங்கினால் மட்டுமே நிறைவு பெறும். எனவே பழையை மாறாமல் புதுப்பிக்க அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×