search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahabalipuram"

    • வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் உள்ள வழுக்கு பாறை பகுதியில் சிறுவர்கள் பலர் சறுக்கி விளையாடினர்.
    • பள்ளிகள் திறக்கும் வரை உள்நாட்டு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும்.

    மாமல்லபுரம்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.

    பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. எனவே விடுமுறை தினத்தையொட்டி பொழுதை கழிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் பெற்றோர்களுடன் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மாமல்லபுரம் வந்ததால் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.

    புராதன சின்னங்கள் முன்பு பலர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் உள்ள வழுக்கு பாறை பகுதியில் சிறுவர்கள் பலர் சறுக்கி விளையாடினர்.

    குடும்பம், குடும்பமாக வந்த பல பயணிகள் கட்டுச்சோற்றை கட்டி வந்து புராதன சின்னங்களில் உள்ள புல்வெளிகளில் அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    மேலும் பயணிகள் வருகை அதிகரிப்பால் நேற்று கிழக்கு ராஜ வீதி, கோவளம் சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை போன்ற சாலைகளில் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் அந்த சாலையில் பயணித்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன.

    இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    இதற்கிடையில் சுற்றுலா வந்த பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப மணிக்கணக்கில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    பள்ளிகள் திறக்கும் வரை உள்நாட்டு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும். அரையாண்டு விடுமுறை தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மாமல்லபுரத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
    • கிராமப்புற பயணிகள் ஏக்கத்துடன் வெளியே நின்று பார்த்துவிட்டு திரும்பினார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று பார்ப்பதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 40யை தொல்லியல்துறை கட்டணமாக வசூலித்து வருகிறது.

    நுழைவு சீட்டை ஆன்-லைன் வழியாகவும், கவுண்டரில் பணம் செலுத்தி வாங்கும் விதிமுறை இருந்து வந்தது.

    இந்த நிலையில் புராதன சின்னங்களில் உள்ள நுழைவு டிக்கெட் வழங்கும் எந்திரத்தில் அச்சிடும் 'பேப்பர் ரோல்' இல்லை என்று கூறு தொல்லியல்துறை ஊழியர்கள் டிக்கெட் கவுண்டரை திடீரென்று மூடிவிட்டனர்.

    இதனால் உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. ஆன் லைன் டிக்கெட் மொபைல் போனில் எடுக்க தெரியாத கிராமப்புற பயணிகள் ஏக்கத்துடன் வெளியே நின்று பார்த்துவிட்டு திரும்பினார்கள்.

    வெளிநாட்டு பயணிகள் கையில் இந்திய ரூபாய் இருந்தும் டிக்கெட் எடுக்க முடியாமல் தினறினர். அவர்களின் வங்கி கணக்கில் இருக்கும் அவர்கள் நாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்றி ஆன்-லைன் டிக்கெட் எடுக்க மணிக்கணக்கில் ரோட்டில் காத்திருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்தி சிலர் பயணிகளிடம் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்றனர்.

    எனவே புராத சின்னங்களில் பூட்டப்பட்ட டிக்கெட் கவுண்டரை மீன்டும் திறந்து நுழைவு சீட்டு கொடுக்க வேண்டும் என சுற்றுலா வழிகாட்டிகளும், சுற்றுலா ஆர்வலர்களும் மாமல்லபுரம் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்., பேப்பர் ரோல் தட்டுப்பாடு காரனமாக தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மாமல்லபுரம் தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.

    மாமல்லபுரம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    திருப்போரூர்:

    புதுச்சேரி பந்துரெட்டி புரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (21). இவருடைய நண்பர் ரஞ்சித்குமார் (24).

    நேற்று இரவு தினேஷ், ரஞ்சித்குமார் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தை அடுத்த கடும்பாடி அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

    இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரியை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 வாலிபர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த தினேஷ், ரஞ்சித்குமார் இருவரும் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காட்டை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 19). நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை பல்கலைக்கழக கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற மகாலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.

    மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி மகாலட்சுமியை தேடி வருகிறார்கள்.

     

    மாமல்லபுரம், கோவளம் கடலில் குளிக்க நாளை முதல் 17-ந் தேதி வரை போலீசார் தடை விதித்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. 17-ந் தேதி காணும் பொங்கலையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் பயணிகளின் கூட்டம் குவியும் முக்கியமாக கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, பட்டிபுலம், தேவநேரி, மாமல்லபுரம் கடற்கரையில் குவியும் பயணிகள் கடலில் குளிப்பார்கள்.

    கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் ராட்சத அலை, புதைமணல்களில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க நாளை முதல் 17-ந் தேதி வரை போலீசார் தடை விதித்துள்ளனர்.

    மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே 700 மீட்டர் தூரத்திற்கு சவுக்கு மர தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பெயரில் மாமல்லபுரம் டி.எஸ்.பி சுப்பாராஜு, இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவி, ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று முதல் ஈடுபட உள்ளனர்.



    மாமல்லபுரம் அருகே ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வட நெம்மேலியை சேர்ந்தவர் விக்டர் வெற்றிவேல். கேளம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கடந்த 10-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றார்.

    நேற்று வீடு திரும்பியபோது பின்பக்க கதவு உடைபட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் வெள்ளி பெருட்கள், பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ×