search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teacher house"

    ஒட்டப்பட்டி அருகே பூட்டிய வீட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரூ.12ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியில் உள்ள சத்யா நகர் அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் தனபால்.

    இவர் செக்காரப்பட்டி உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர் பங்குநத்தம் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இருவரும் ஆசிரியர் என்பதால் நேற்ற காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டனர்.

    பின்னர் மாலையில் மீண்டும் 2 பேரும் வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே உள்ளே சென்று பார்த்தபோது அஙகு பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    அதே பீரோவில் மற்றொரு கவரில் 5 பவுன் நகையை செல்வி சுருட்டி வைத்து இருந்தார். அதனை மர்ம நபர்கள் கவரிங் என்று நினைத்து விட்டு சென்றிருக்கலாம் என்று தெரியவந்தது. கவரில் சுருட்டி வைத்திருந்தால் 5 பவுன் நகை மட்டும் தப்பியது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் உடனே அங்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    பூட்டிய வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    கோவை செட்டிப்பாளையம் அருகே ஆசிரியை வீட்டில் திருட்டு போன 4 பவுன் நகையை அபகரித்த சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் துரைசாமி (52). மில் தொழிலாளி. இவரது மனைவி அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 19 பவுன் நகை திருட்டு போனது. இது தொடர்பாக துரைசாமி செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நகையை திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 பவுன் நகையை பறிமுதல் செய்துள்ளனர்.

    இவற்றில் 15 பவுன் நகையை மட்டும் துரைசாமியிடம் கொடுத்து விட்டு மீதி 4 பவுன் நகையை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நகையை பல முறை துரைசாமி கேட்டுள்ளார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு செலவுக்கு ரூ. 50 ஆயிரம் பணம் தர வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.

    இந்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனுக்கு தெரிய வந்தது. அவர் விசாரணை அதிகாரி சப் -இன்ஸ்பெக்டரை வாக்கி டாக்கியில் அழைத்து உங்கள் மீது பல்வேறு புகார்கள் உள்ளது. பல முறை உங்களை எச்சரித்து உள்ளோம். இது தான் கடைசி தடவை என எச்சரித்து உள்ளார். இந்த எச்சரிக்கை மற்ற போலீசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    கும்பகோணத்தில் பூட்டி கிடந்த ஆசிரியர் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சென்னை பைபாஸ் சாலை ஓ.எஸ்.எம். நகரை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 48). இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி புதுக்கோட்டையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு குடும்பத்தினருடன் காரில் சேதுராமன் சென்றார். பின்னர் நேற்று மாலை அவர் கும்பகோணம் திரும்பினார்.

    அப்போது வீட்டுக்கு வந்த சேதுராமன், பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

    பின்னர் படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகை மற்றும் எல்இடி டி.வி, லேப்டாப் ஆகியவை திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்டு மர்ம கும்பல், பின்பக்க கதவை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுபற்றி ஆசிரியர் சேதுராமன், கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    வியாசர்பாடியில் ஆசிரியை வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பூர்:

    வியாசர்பாடி பக்தவச்சலம் 9-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவருடைய மனைவி வித்யாவதி (38). தனியார் பள்ளி ஆசிரியை.

    நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் கண்விழித்த ஆசிரியை வித்யாவதி வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர் கட்டிலின் கீழே இருந்த டிராயரை பார்த்தார். அதுவும் திறந்து கிடந்தது. உடனே கணவரை எழுப்பி னார்.

    டிராயரின் உள்ளே வைத்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி, பள்ளிக்கூடத்தில் செலுத்த வேண்டிய ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், 2 செல்போன்கள் ஆகியவை திருடப்பட்டு இருந்தன. கணவன், மனைவி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது யாரோ கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

    இதுகுறித்து மகாகவி பாரதிதாசன்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இவர்கள் வழக்குப் பதிவு செய்து நகை, பணம், செல்போன்களை கொள்ளையடித்தவர்களை தேடி வருகிறார்கள்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    2 வாரங்களுக்கு முன்பு இதே தெருவில் உள்ள ராஜா முகமது என்பவர் வீட்டிலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. வண்டிகளில் இருந்து பெட்ரோல் திருடப்படுகின்றன. போலீஸ் ரோந்து வருவது இல்லை. இதனால்தான் இதுபோன்று தொடர் கொள்ளை நடைபெறுகின்றன என்றனர்.

    போலீசாரிடம் கேட்ட போது, “நாங்கள் முடிந்த அளவு ரோந்து சுற்றுகிறோம். குறைந்த எண்ணிக்கையில்தான் போலீசார் இருக்கிறோம். போலீஸ் எண்ணிக்கையை அதிகமாக்கினால்தான் எல்லா பகுதிகளுக்கும் செல்ல முடியும்” என்று கூறினார்கள்.
    ஆண்டிடம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 19 பவுன் நகை மற்றும் பணம் இருந்த இரும்பு லாக்கரை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் தூக்கி சென்றனர்.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி சுசீலா(60). இவர் விளந்தை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இதனால் பழனிசாமியும், அவரது மனைவி சுசீலாவும் விளந்தை கிராமத்தில் தனியாக வசித்து வந்தனர். கடந்த 2-ந் தேதி மகளை பார்க்க சென்னை சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பழனிசாமியின் வீடு திறந்து கிடந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தை சேர்ந்தவர்கள் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஒரு அறையில் இருந்த 2 பீரோக்கள் திறக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. இதுகுறித்து சென்னையில் உள்ள பழனிசாமியை செல்போன் மூலம் போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் படுக்கை அறையில் நகைகள், பணம் வைக்கப்பட்டிருந்த இரும்பு லாக்கர் உள்ளதா? என்று கேட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது நகை, பணம் இருந்த இரும்பு லாக்கர் மாயமாகி இருந்தது. மீண்டும் பழனிசாமியை தொடர்பு கொண்ட போலீசார், உடனே புறப்பட்டு வருமாறு கூறினர். அதன்பேரில் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டார்.

    மர்ம நபர்கள் வீட்டின் முன்புற இரும்பு கேட்டின் மீது ஏறி குதித்து, கதவின் தாழ்ப்பாளை வெளியே இருந்து ஜன்னல் வழியாக கம்பியால் நெம்பி உடைத்துள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஒரு அறையில் இருந்த 2 பீரோக்களை திறந்து நகை, பணம் உள்ளதா? என்று பார்த்துள்ளனர். அதில், எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் படுக்கை அறைக்கு சென்று நகை-பணம் இருந்த இரும்பு லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். அது முடியாமல் போகவே, இரும்பு லாக்கரை அப்படியே தூக்கி சென்றுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மோப்ப நாய் மலரை வரவழைத்தனர். அது திருட்டு நடந்த வீட்டிலிருந்து ஓடி கொளப்பாடி சாலையில் நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையில் சென்னையில் இருந்த பழனிசாமி, தனது மனைவி சுசீலாவுடன் நேற்று மாலை ஆண்டிமடத்திற்கு வந்தார்.

    அவரிடம் போலீசார் வீட்டில் திருட்டு போன இரும்பு லாக்கரில் எவ்வளவு நகை, பணம் இருந்தது என்று விசாரித்தனர். லாக்கரில் வீடு மற்றும் நில பத்திரங்கள், 19 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் மற்றும் ¼ கிலோ வெள்ளி பொருட்கள் இருந்ததாக அவர் தெரிவித்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து பழனிசாமி கொடுத்த புகாரின்பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மாமல்லபுரம் அருகே ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வட நெம்மேலியை சேர்ந்தவர் விக்டர் வெற்றிவேல். கேளம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கடந்த 10-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றார்.

    நேற்று வீடு திரும்பியபோது பின்பக்க கதவு உடைபட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் வெள்ளி பெருட்கள், பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ×