என் மலர்

  செய்திகள்

  வியாசர்பாடி ஆசிரியை வீட்டில் நகை-பணம் கொள்ளை
  X

  வியாசர்பாடி ஆசிரியை வீட்டில் நகை-பணம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வியாசர்பாடியில் ஆசிரியை வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பெரம்பூர்:

  வியாசர்பாடி பக்தவச்சலம் 9-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவருடைய மனைவி வித்யாவதி (38). தனியார் பள்ளி ஆசிரியை.

  நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் கண்விழித்த ஆசிரியை வித்யாவதி வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

  அதிர்ச்சி அடைந்த அவர் கட்டிலின் கீழே இருந்த டிராயரை பார்த்தார். அதுவும் திறந்து கிடந்தது. உடனே கணவரை எழுப்பி னார்.

  டிராயரின் உள்ளே வைத்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி, பள்ளிக்கூடத்தில் செலுத்த வேண்டிய ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், 2 செல்போன்கள் ஆகியவை திருடப்பட்டு இருந்தன. கணவன், மனைவி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது யாரோ கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

  இதுகுறித்து மகாகவி பாரதிதாசன்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இவர்கள் வழக்குப் பதிவு செய்து நகை, பணம், செல்போன்களை கொள்ளையடித்தவர்களை தேடி வருகிறார்கள்.

  இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

  2 வாரங்களுக்கு முன்பு இதே தெருவில் உள்ள ராஜா முகமது என்பவர் வீட்டிலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. வண்டிகளில் இருந்து பெட்ரோல் திருடப்படுகின்றன. போலீஸ் ரோந்து வருவது இல்லை. இதனால்தான் இதுபோன்று தொடர் கொள்ளை நடைபெறுகின்றன என்றனர்.

  போலீசாரிடம் கேட்ட போது, “நாங்கள் முடிந்த அளவு ரோந்து சுற்றுகிறோம். குறைந்த எண்ணிக்கையில்தான் போலீசார் இருக்கிறோம். போலீஸ் எண்ணிக்கையை அதிகமாக்கினால்தான் எல்லா பகுதிகளுக்கும் செல்ல முடியும்” என்று கூறினார்கள்.
  Next Story
  ×