என் மலர்
நீங்கள் தேடியது "Jewel Money robbery"
- திருமங்கலம் அருகே தனியாக வசித்த பெண்ணின் வீட்டில் புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- கோவிலுக்கு சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே பேரையூர் பக்கமுள்ள அதிகாரிபட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது50). இவரது கணவர் சுப்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது பிள்ளைகள் திருமணமாகி வெளியூரில் உள்ளனர்.
இதனால் பொன்னம்மாள் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு தனது ஊரில் உள்ள கோவிலில் நடந்த தேர்த்திருவிழாவை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். வீட்டின் சாவியை கதவின் மீது வைத்திருந்தார்.
இந்த நிலையில் கோவி லுக்கு சென்று விட்டு பொன்னம்மாள் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1லட்சம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து சேடப்பட்டி போலீஸ் நிலையத்தில் பொன்னம்மாள் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பொன்னம்மாள் கோவிலில் இருந்து திரும்பி வந்த போது அவரது வீடு பூட்டி தான் இருந்திருக்கிறது. ஆகவே அவர் கோவிலுக்கு சென்ற போது வீட்டு சாவியை கதவின் மேலே வைப்பதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் தான், அவரது வீட்டில் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
அதன் அடிப்படையில் அக்கம்பக்கத்தினர் மற்றும் பொன்னம்மாளின் உறவினர்கள் உள்ளிட்டோ ரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நேற்று நீலமேகம் உறவினர் சுப நிகழ்ச்சிக்காக தனது காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்று உள்ளார்.
- வீட்டின் வராண்டாவின் முன் பக்கம் உள்ள இரும்பு கேட்டை மட்டும் பூட்டி உள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தெற்கு தெருவில் ஆற்றுப்பாதை ஓரம் வசிப்பவர் நீலமேகம் (வயது58) இவரது மனைவி ஜோதி (56).இவர்கள் வீட்டின் அருகாமையில் பழைய இரும்பு கடை ஒன்று நடத்தி வருகின்றனர்.நேற்று நீலமேகம் உறவினர் சுப நிகழ்ச்சிக்காக தனது காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்று உள்ளார்.கணவர் கார் வரும் என கருதி வீட்டின் வெளிப்பக்கம் உள்ள இரும்புக்கேட்டை பூட்டாமல் மூடிவைத்துள்ளார். மேலும் வீட்டில் உள்பகுதியில் உள்ள கதவு பூட்டாமல் வீட்டின் வராண்டாவின் முன் பக்கம் உள்ள இரும்பு கேட்டை மட்டும் பூட்டி உள்ளார். இரவு 8.30 மணி அளவில் நீலமேகம் கார் வந்த சமயம் கேட்டு திறந்து கிடப்பது கண்டு உள்ளே சென்று ஜோதி பார்த்தபோது பீரோ லாக்கர் அனைத்தும் உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு உள்ளார்.
பீரோவிலிருந்த தோடு 2 பவுன், 2 பவுனில் ஒரு செயின், 3 பவுனில் ஒரு செயின், நெக்லஸ் 6 பவுன் என மொத்தம் 13 பவுன் நகைகள் மற்றும் 70 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த திட்டக்குடி போலீசார் இதுகுறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். கொள்ளை நடந்த தெருவில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒரு வார காலமாக திட்டக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் குறி வைத்து திருடும் கொள்ளையர்ககளால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
- பண்ருட்டியில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு மதுரா துண்டு காடு கிராமத்தை சேர்ந்தவர் ராசு, விவசாயி. இவர் தினமும் காலை வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்திற்கு செல்வது வழக்கம். வழக்கம்போல அவர் வீட்டை பூட்டிக்கொண்டு வயலுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ராசு வீட்டினுள் நுழைந்து டேபிளில் உள்ள பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ.15,000 திருடி சென்றனர்.
ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு மாலை வீடு திரும்பிய விவசாயி ராசு வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கராபுரம் அருகே முன்னாள் யூனியன் தலைவர் வீட்டில் நகை, பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
- வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்தன.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி ரோஜாவதி(வயது62). இவரது கணவர் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ரிஷிவந்தியம் வடக்கு யூனியன் தலைவராக பதவி வகித்தவர். கடந்த ஓராண்டுக்கு முன் அவர் இறந்த நிலையில் ரோஜாவதி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூ ர்களில் வசிக்கின்றனர். ரோஜாவதி மூட்டு வலி காரணமாக கடந்த 2-ந் தேதி சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றவர், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் 90 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவலறிந்த டி.எஸ்.பி., பழனி, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கைரேகை பிரிவு போலீசாருடன் சென்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை அருகே உள்ள கங்கை கொண்டானை அடுத்த துறையூரை சேர்ந்தவர் ஆசிர்வாதம் (வயது 65). ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு. இவரது மனைவி காஞ்சனா. கணவன்- மனைவி இருவரும் நேற்று காலை தங்களது வீட்டை பூட்டி விட்டு நெல்லை தாழையூத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் மீண்டும் நேற்று மாலையில் ஊருக்கு சென்றனர். அப்போது அவர்களது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் தங்க நகை, ரூ. 97 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ. 17 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிர்வாதம் கங்கை கொண்டான் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து ரூ. 17 லட்சம் நகை-பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாதவரம் பொன்னியம்மன் மேடு முனுசாமி நகரில் வசித்து வருபவர் ரவி நாராயணன். இவர் வீட்டினை பூட்டி விட்டு அருகில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த 24 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ஒரு வெள்ளி குத்து விளக்கு திருட்டு போய் இருந்தது.
இதுகுறித்து மாதவரம் போலீசில் புகார் செய்தார். கொள்ளையர்கள் பூட்டை உடைக்காமல் கள்ளச்சாவி மூலம் திறந்து உள்ளே சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வியாசர்பாடி பக்தவச்சலம் 9-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவருடைய மனைவி வித்யாவதி (38). தனியார் பள்ளி ஆசிரியை.
நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் கண்விழித்த ஆசிரியை வித்யாவதி வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் கட்டிலின் கீழே இருந்த டிராயரை பார்த்தார். அதுவும் திறந்து கிடந்தது. உடனே கணவரை எழுப்பி னார்.
டிராயரின் உள்ளே வைத்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி, பள்ளிக்கூடத்தில் செலுத்த வேண்டிய ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், 2 செல்போன்கள் ஆகியவை திருடப்பட்டு இருந்தன. கணவன், மனைவி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது யாரோ கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
இதுகுறித்து மகாகவி பாரதிதாசன்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இவர்கள் வழக்குப் பதிவு செய்து நகை, பணம், செல்போன்களை கொள்ளையடித்தவர்களை தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
2 வாரங்களுக்கு முன்பு இதே தெருவில் உள்ள ராஜா முகமது என்பவர் வீட்டிலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. வண்டிகளில் இருந்து பெட்ரோல் திருடப்படுகின்றன. போலீஸ் ரோந்து வருவது இல்லை. இதனால்தான் இதுபோன்று தொடர் கொள்ளை நடைபெறுகின்றன என்றனர்.
போலீசாரிடம் கேட்ட போது, “நாங்கள் முடிந்த அளவு ரோந்து சுற்றுகிறோம். குறைந்த எண்ணிக்கையில்தான் போலீசார் இருக்கிறோம். போலீஸ் எண்ணிக்கையை அதிகமாக்கினால்தான் எல்லா பகுதிகளுக்கும் செல்ல முடியும்” என்று கூறினார்கள்.