பண்ருட்டியில் துணிகரம்: விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை

பண்ருட்டியில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
டேபிள் டிராயரில் இருந்த நகை பணத்தை மர்ம நபர்கள்  கொள்ளையடித்து உள்ள காட்சி. 
டேபிள் டிராயரில் இருந்த நகை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து உள்ள காட்சி. 
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு மதுரா துண்டு காடு கிராமத்தை சேர்ந்தவர் ராசு, விவசாயி. இவர் தினமும் காலை வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்திற்கு செல்வது வழக்கம். வழக்கம்போல அவர் வீட்டை பூட்டிக்கொண்டு வயலுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ராசு வீட்டினுள் நுழைந்து டேபிளில் உள்ள பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ.15,000 திருடி சென்றனர்.

ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு மாலை வீடு திரும்பிய விவசாயி ராசு வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com