கோவையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை-பணம் கொள்ளை

சஜீத் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.வீட்டை பூட்டி சாவியை தந்தையிடம் கொடுத்து விட்டு சென்றார்.
கோவையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை-பணம் கொள்ளை
Published on

கோவை

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் சஜீத் (வயது40). தனியார் நிறுவன ஊழியர்.

இவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊரான பாலக்காட்டிற்கு சென்றார். இதனால் வீட்டை பூட்டி சாவியை தந்தையிடம் கொடுத்து விட்டு சென்றார்.

இந்த நிலையில் சஜீத்தின் வீட்டிற்கு அவரது தந்தை சென்றார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அவரது மகன் சஜீத்துக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சஜித், வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதனையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com