தச்சு தொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளை

வெங்கடேசன் (வயது 48) தச்சு தொழிலாளி. வெங்கடேசன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வீட்டை திறந்து பார்த்தபோது, பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தச்சு தொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளை
Published on

சேலம்:

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48) தச்சு தொழிலாளி. வெங்கடேசன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று வெங்கடேசன் பழனி கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டை திறந்து பார்த்தபோது, பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் பணம் மற்றும் 1 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

இது குறித்து வெங்கடேசன் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com