வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை

ராஜபாளையம் அருகே வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை
Published on

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிழவிக்குளத்தை சேர்ந்தவர் கடற்கரை (வயது44). இவர் குடும்பத்து டன் ராஜபாளையத்தில் வசித்து வருகிறார். இதன் காரணமாக கிழவிக்கு ளத்தில் உள்ள வீடு பெரும் பாலான நேரம் பூட்டியே கிடக்கும்.

ஆயுத பூஜைக்கு கிழவிக் குளத்திற்கு சென்ற கடற்கரை அங்கு பூஜை செய்து விட்டு வீட்டை பூட்டிவிட்டு மீண்டும் ராஜபாளையத்திற்கு வந்து விட்டார். வீடு பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

இந்த நிலையில் நேற்று கிழவிக்குளம் சென்ற கடற்கரை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் கீழராஜகுலராமன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com