search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியை வீட்டில் திருட்டு போன 4 பவுன் நகையை சுருட்டிய சப்-இன்ஸ்பெக்டர்
    X

    ஆசிரியை வீட்டில் திருட்டு போன 4 பவுன் நகையை சுருட்டிய சப்-இன்ஸ்பெக்டர்

    கோவை செட்டிப்பாளையம் அருகே ஆசிரியை வீட்டில் திருட்டு போன 4 பவுன் நகையை அபகரித்த சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் துரைசாமி (52). மில் தொழிலாளி. இவரது மனைவி அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 19 பவுன் நகை திருட்டு போனது. இது தொடர்பாக துரைசாமி செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நகையை திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 பவுன் நகையை பறிமுதல் செய்துள்ளனர்.

    இவற்றில் 15 பவுன் நகையை மட்டும் துரைசாமியிடம் கொடுத்து விட்டு மீதி 4 பவுன் நகையை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நகையை பல முறை துரைசாமி கேட்டுள்ளார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு செலவுக்கு ரூ. 50 ஆயிரம் பணம் தர வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.

    இந்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனுக்கு தெரிய வந்தது. அவர் விசாரணை அதிகாரி சப் -இன்ஸ்பெக்டரை வாக்கி டாக்கியில் அழைத்து உங்கள் மீது பல்வேறு புகார்கள் உள்ளது. பல முறை உங்களை எச்சரித்து உள்ளோம். இது தான் கடைசி தடவை என எச்சரித்து உள்ளார். இந்த எச்சரிக்கை மற்ற போலீசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×