search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரம் புராதன சின்னங்களில் கவுண்டர்கள் திடீர் மூடல்- வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தவிப்பு
    X

    ஆன்லைனில் டிக்கெட் எடுக்க ஐந்துரதம் ரோட்டில் காத்திருந்த வெளிநாட்டு பயணிகள்.


    மாமல்லபுரம் புராதன சின்னங்களில் கவுண்டர்கள் திடீர் மூடல்- வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தவிப்பு

    • உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
    • கிராமப்புற பயணிகள் ஏக்கத்துடன் வெளியே நின்று பார்த்துவிட்டு திரும்பினார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை அருகில் சென்று பார்ப்பதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 40யை தொல்லியல்துறை கட்டணமாக வசூலித்து வருகிறது.

    நுழைவு சீட்டை ஆன்-லைன் வழியாகவும், கவுண்டரில் பணம் செலுத்தி வாங்கும் விதிமுறை இருந்து வந்தது.

    இந்த நிலையில் புராதன சின்னங்களில் உள்ள நுழைவு டிக்கெட் வழங்கும் எந்திரத்தில் அச்சிடும் 'பேப்பர் ரோல்' இல்லை என்று கூறு தொல்லியல்துறை ஊழியர்கள் டிக்கெட் கவுண்டரை திடீரென்று மூடிவிட்டனர்.

    இதனால் உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. ஆன் லைன் டிக்கெட் மொபைல் போனில் எடுக்க தெரியாத கிராமப்புற பயணிகள் ஏக்கத்துடன் வெளியே நின்று பார்த்துவிட்டு திரும்பினார்கள்.

    வெளிநாட்டு பயணிகள் கையில் இந்திய ரூபாய் இருந்தும் டிக்கெட் எடுக்க முடியாமல் தினறினர். அவர்களின் வங்கி கணக்கில் இருக்கும் அவர்கள் நாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்றி ஆன்-லைன் டிக்கெட் எடுக்க மணிக்கணக்கில் ரோட்டில் காத்திருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்தி சிலர் பயணிகளிடம் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்றனர்.

    எனவே புராத சின்னங்களில் பூட்டப்பட்ட டிக்கெட் கவுண்டரை மீன்டும் திறந்து நுழைவு சீட்டு கொடுக்க வேண்டும் என சுற்றுலா வழிகாட்டிகளும், சுற்றுலா ஆர்வலர்களும் மாமல்லபுரம் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்., பேப்பர் ரோல் தட்டுப்பாடு காரனமாக தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மாமல்லபுரம் தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.

    Next Story
    ×