search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lucknow"

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் ரோகித்தின் அபார சதத்தால் இந்தியா வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #INDvWI #RohitSharma
    லக்னோ:

    இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
     
    இந்நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது. லக்னோ மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

    டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.இருவரும் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்த நிலையில் ஷிகர் தவான் 43 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய ரிஷப் பண்ட் 5 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.



    ஆனாலும் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 61 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சர்கள் அடித்து 111 ரன்கள்  எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். லோகேஷ் ராகுல் 14 பந்தில் 26 ரன் எடுத்து அட்வுடாகாமல் இருந்தார். இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு195 ரன்கள் எடுத்தது.

    196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்திய பந்து வீச்சாளர்களின் சிறப்பான பங்களிப்பால் அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    இதையடுத்து, 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #INDvWI #RohitSharma
    ஆண்டுதோறும் பெங்களூருவில் நடக்கும் விமான கண்காட்சி இந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு கர்நாடக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #AeroIndia #AirExpo
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆண்டு தோறும் விமான கண்காட்சி நடப்பது வழக்கம். கடந்த 1996-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த கண்காட்சியை இம்முறை உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த தகவலோ, மறுப்பு தகவலோ வரவில்லை.

    விமான கண்காட்சி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதும், கர்நாடக மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 2019 உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு பெங்களூருவில் நடைபெறும் உலக புகழ் பெற்ற விமான கண்காட்சியை உத்தரபிரதேசத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், விமான கண்காட்சியை நடத்துவதற்கான அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளும் பெங்களூருவில் உள்ளது. ஆயினும் இந்த விமான கண்காட்சியை உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

    இந்நிலையில், குமாரசாமி இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். #RajnathSingh #JammuKashmirIssue
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், அங்கு முழு அமைதி திரும்ப வேண்டும் என்பது மட்டுமே அரசின் விருப்பமாக உள்ளது. இதற்கான பணிகளில் தான் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது.

    காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி அங்கு அமைதியை கொண்டு வருவது எங்களின் மிகப்பெரிய இலக்கு. பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் பணிகளில் ஈடுபட நமது பாதுகாப்பு படை எப்போதும் தயாராக உள்ளது.

    மாநிலத்தில் அமைதி ஏற்பட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பயங்கரவாதிகளின் எந்தவிதமான தாக்குதல் முயற்சியையும் முறியடிக்க பாதுகாப்பு படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். #RajnathSingh #JammuKashmirIssue
    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 24 லட்ச ரூபாய் மதிப்பிலான 715 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #goldsmuggling
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ளது சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையம். இங்கு இன்று அதிகாலை வந்த பயணிகளின் உடமைகளை வழக்கம்போல் சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனை செய்தனர்.

    இந்நிலையில், அங்கு சந்தேகப்படும் படியாக இருந்த நபரை சோதனை செய்த அதிகாரிகள், அவர் மறைத்து வைத்திருந்த 715 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    மேலும், அவரை கைது செய்து, தங்க கடத்தலின் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 24 லட்ச ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  #goldsmuggling
    உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் சுமார் ஒரு கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப்பொருளை கடத்த முயன்ற 3 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர். #Heroinseized
    லக்னோ:

    பீகார் மாநிலத்தில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு கடத்தமுயன்ற தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருளை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளனர். லக்னோ-பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த கைது நடந்துள்ளது.

    பிடிபட்ட170 கிராம் எடையுள்ள ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு 1 கோடியாகும் இந்த கடத்தலில் தொடர்புடைய ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட மூவரும் உத்தரப்பிரதேசம் மாநிலம் பாரபாங்கி பகுதியை சேர்ந்த மால்டி வெர்மா, போலா சிங் மற்றும் குஷல் வெர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது. #Heroinseized
    ×