search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabishekam"

    • பஞ்சமூர்த்தி சாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.
    • திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வடதிருமுல்லைவாயலில் உள்ள பழமையான கொடியிடைநாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

    இதையொட்டி கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாக பூஜையும், அதைதொடர்ந்து யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசம் எடுத்துவரப்பட்டு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுர கலசங்களுக்கும், அதை தொடர்ந்து மூலவர் மாசிலாமணீஸ்வரர் கொடியிடை நாயகி மற்றும் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கொடி மரம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    அப்போது கூடியிருந்த பக்தர்கள் "ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா" என பக்தி கோஷங்களை எழுப்பினர். மாலையில் திருக்கல்யாண வைபவமும், இரவு பஞ்சமூர்த்தி சாமிகள் திருவீதி உலாவும் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் நாசர், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், கோவில் அறங்காவலர், செயல் அலுவலர், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் மண்ணரையை அடுத்த பாரப்பாளையத்தில் பழமை வாய்ந்த, மிகவும்பிரசித்தி பெற்ற பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேக விழா நடத்த கோவில் கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    இதன்படி திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து கோவிலில் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று காலை 5.30 மணிக்கு கணபதி வழிபாடு மற்றும் 6-ம் கால பூஜையுடன் தொடங்கியது.

    9 மணிக்கு யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு, அனைத்து கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றுதல் ஆகியவை நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் பழனி ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... என்ற கோஷம் முழங்க சாமிதரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    காலை 11.30 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையும், மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் அரசியல், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பக்தர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் பாரப்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஆயிரக்கணக்கானவர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மாடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தேனுகாம்பாள் சமேத ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோவிலில் 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கடந்த வியாழக்கிழமை தொடங்கி ஏழு நாட்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அபி ஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா எம். எல். ஏ. , தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், தாம்பரம் கிழக்கு பகுதி செயலாளர் மாடம்பாக்கம் லயன் ஆ. நடராஜன், மண்டல குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இரவில் சுவாமி- அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
    • இக்கோவிலில் 1900-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே அரிகேசவநல்லூரில் அமைந்துள்ளது பெரியநாயகி சமேத அரியநாத சுவாமி கோவில். சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், சிவலிங்கம் குபேரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டதாகும்.

    இங்கு சனிபகவானின் துணைவி ஜேஸ்டாதேவிக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் 1900-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தற்போது கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 2-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று அதிகாலை விக்னேஸ்வர பூஜையை தொடர்ந்து புண்ணியாக வாசனம், 6-ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் எழுந்தருளலை தொடர்ந்து பெரியநாயகி, அரியநாத சுவாமி விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. சுமார் 123 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், எம்.எல்.ஏ.க்கள் இசக்கி சுப்பையா, நயினார் நாகேந்திரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அரிகேசவநல்லூர் வெங்கட்ராமன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலையில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம், தீபாராதனை, இரவில் சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியவை நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி அரிகேசவநல்லூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் வரவேற்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது.

    முன்னதாக நெல்லைக்கு வந்த தெலுங்கானா கவர்னருக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.

    • பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
    • இன்று முதல் தினமும் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே 100 ஆண்டு பழமையான பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 3-ந்தேதி முதற்கால யாக பூஜையுடன் தொடங்கியது.

    கோவிலில் புதிதாக தட்சணா மூர்த்தி, வாராகி அம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று காலை 6.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாகபூஜை மற்றும் திரவ்ய யாகம் நடந்தது.

    9 மணிக்கு மகா தீபாராதனைக்கு பின் கலச புறப்பாடு நடந்தது. பின்னர் காலை 9.45 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிேஷகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் சங்கர நராயணன், ரவி ஆகியோர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் 'ஓம் சக்தி... பராசக்தி' என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    கோவிலை சுற்றிலும் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பரிவாரம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் பிளேக் மாரியம்மனுக்கு மகாஅபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தச தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தென்னம்பாளையம் மார்க்கெட் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை தென்னம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் விழாக்கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று (வியாழக்கிழமை) முதல் தினமும் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    • பக்தர்கள் மீது குழாய் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது.
    • நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது.

    நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. தமிழ் கடவுளான முருகப்பெருமான் அருள்பாலிக்கும் இக்கோவில் அறுபடை வீடுகளை போல பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாகும்.

    இங்கு நவநீதேஸ்வரர் மூலவராக அருள்பாலித்து வருகிறார். நவநீதேஸ்வரராக சிவன், கோலவாமனராக பெருமாள் சிங்காரவேலவராக முருகப்பெருமான் ஆகியோர் ஒரே கோவிலில் தனிச்சன்னதியில் அருள்பாலிப்பது இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும்.

    இங்கு அருள்பாலித்து வரும் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்ததாக கந்த புராணம் கூறுகிறது.

    அதன்படி ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவையொட்டி அம்மனிடம் இருந்து சிங்காரவேலவர்(முருகன்) வேல் வாங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது.

    அப்போது முருகனின் மேனி எங்கும் வியர்வை சிந்தும் அதிசயத்தை பக்தர்கள் கண்டு வியந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த அற்புத காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் சிக்கலுக்கு வருவார்கள்.

    பல்வேறு சிறப்புகளைப் பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணி வேலைகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

    இதையொட்டி நவநீதேஸ்வரர், சிங்காரவேலவர், வேல் நெடுங்கண்ணி அம்மன், கோலவாமன பெருமாள் உள்ளிட்ட தனிச்சன்னதிகள், ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம், ராஜகோபுரம் கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு கோபுரங்கள், விமானங்கள் மற்றும் உள்பிரகார மண்டபங்கள் புனரமைக்கப்பட்டது.

    திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. 52 யாக குண்டங்களுடன் பிரம்மாண்ட யாக சாலை அமைக்கப்பட்டது. இங்கு 108 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை கூறி யாக சாலை பூஜைகளை நடத்தினர்.

    6 கால யாக சாலை பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை புனிதநீர் அடங்கிய கடங்கள் சிவ வாத்தியங்கள் முழங்க யாக சாலையில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டன. காலை 9.45 மணி அளவில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

    அப்போது 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு பக்தர்கள் சிக்கல் சிங்காரவேலவரை மனமுருகி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது குழாய் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது.

    விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், சென்னை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ராஜா, நாகை குற்றவியல் நீதித்துறை தலைமை நீதிபதி கார்த்திகா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் முருகன், தாசில்தார் ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா, சிக்கல் கோவில் அர்ச்சகர் ராமநாத சிவாச்சாரியார், சிக்கல் வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
    • பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    பழனி மலையில் வீற்றிருக்கும் முருகனை தரிசிப்பதற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் அலைகடலென திரண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் பழனி முருகனின் அருள் திருப்பூரிலும் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் திருப்பூர் மண்ணரை பாரப்பாளையத்தை சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் ஸ்ரீபழனி ஆண்டவர் என்ற கோவிலை அமைத்துள்ளனர். பழனி மலையில் இருந்து கல் எடுத்து வந்து பாரப்பாளையத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கோவிலில் பகவதி அம்மன் ஆசியுடன் காளியம்மன், பழனி ஆண்டவர், கருப்பராயருடன் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 500 வருடங்களை கடந்து இருக்கும் இந்த கோவிலில் சுற்றுவட்டார பகுதி மக்கள் வேண்டும் வரம் அளிப்பதால் பக்தி பரவசத்துடன் ஸ்ரீபழனி ஆண்டவ முருகனை வழிபட்டு வருகின்றனர்.

    இந்த கோவில் கும்பாபிஷே விழா நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தது. கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து கோவிலில் தனபூஜை, கோபூஜை, வாஸ்து பூஜை, முளைப்பாலிகை பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் 2-ம் கால பூஜை, 3-ம் கால பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால பூஜை, கோபுரகலசங்கள் வைத்தல் நிகழ்ச்சியும், யாகசாலையில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

    மேலும் கோவிலின் மூலஸ்தானத்தில் முருகன் மற்றும் சிவன், பார்வதி, காளியம்மாள், குருபகவான், துர்க்கையம்மன், சண்டிகேஷ்வரர், விநாயகர், கருப்பராயர் மற்றும் நவக்கிரகங்கள் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் நேற்று கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதில் கோவில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள், விழாக்குவினர், பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அரோகரா மற்றும் ஓம்சக்தி, பராசக்தி கோஷம் முழங்க வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கு கணபதி வழிபாடு மற்றும் 6-ம் காலபூஜையுடன் தொடங்குகிறது.

    காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் பழனி ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் பாரப்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று முதற்கால யாகபூஜை நடக்கிறது.
    • நாளை 2-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    திருப்பூர் மாவட்டம், சேவூர் புளியம்பட்டி செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில், சூரிபாளையம் என்னும் அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் உள்ளது. இங்கு எல்லாம் வல்ல அன்னையின் திருவருள் எங்கும் பெருகி ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து எங்கும் நீக்கமற நிறைந்து அருள்புரிகின்ற வண்ணம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாய் பற்பல திருநாமங்களுடன் எழுந்தருளி ஈரேழு உலகினையும் காக்கும் தெய்வம் அன்னை அக்னிமாரியம்மன் சாஸ்திர சம்பிரதாயப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் செல்வசக்தி விநாயகர், ராஜகணபதி, அக்னிமாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தையொட்டி இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், முதற்கால யாகபூஜை, காலை 7 மணிக்கு சேவூர் செம்பி விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக் குடம், கேரள செண்டை மேளத்துடன் எடுத்து வருதல். மாலை 3 மணிக்கு முளைப்பாரிகள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு 2-ம் கால யாக பூஜை. இரவு 7 மணிக்கு 3-ம் கால யாக பூஜை,கோபுர கலசம் வைத்தல். இரவு 8 மணிக்கு எந்திரபிரதிஷ்டை, மருந்து சாத்துதல், சாமி வைக்கப்படுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாகபூஜை, நாடி சந்தானம், கலசம் புறப்பாடு, காலை 5 மணிக்கு, அக்னி மாரியம்மன், செல்வ சக்தி விநாயகர், ராஜகணபதி கோபுர கலச கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து செல்வ சக்தி விநாயகர், ராஜகணபதி, அக்னி மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். இதையடுத்து மகா அபிஷேகம், அலங்கார தீபாரதனைகள் நடக்கிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொள்கிறார்கள். விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு காலை 7 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    • 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.

    நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. அதன்படி கடந்த 29-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 52 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.

    சிக்கல் ராமநாத சிவாச்சாரியார், கந்தசாமி சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு யாகசாலை பூஜைகளை செய்து வருகிறார்கள்.

    தொடர்ந்து இன்று (புதன்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு நடக்கிறது. பின்னர் 10.30 மணிக்குள் கோவில் விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்படுகிறது.

    குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 30-ந் தேதியில் இருந்து கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    இதில் பக்தி பாடல்கள், நாதஸ்வரம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவையொட்டி 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 2006-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
    • கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 2006-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன் முதற்கட்ட திருப்பணியாக நேற்று மாலை 4 மணியளவில் முதற்கால யாக பூஜைகள் தொடங்கியது. இதில் கணபதி வழிபாடு, யாகம் மற்றும் கொடி மரத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (புதன் கிழமை) காலை 9 மணியளவில் 2-ம் கால பூஜைகள் நடக்கிறது. இதில் கோவில் கொடி மரத்துக்கு பாலாயம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் செய்துள்ளனர்.

    • மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
    • 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மேற்கு காவல் நிலைய காவலர்கள் குடியிருப்பில் உள்ள வலஞ்சுழி ராஜகணபதி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.

    இதற்காக நேற்று (2-ந் தேதி) முதல் கால யாகபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் தொடங்கி, இன்று (3-ந் தேதி) 2-ம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து, விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் ஏராளமான போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • முன்னதாக கடந்த 21-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • கடம் புறப்பட்டு நடைபெற்று கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே ஆம ப்பள்ளம் கிராமத்தில் பழனியாண்டவர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோ யில் திருப்பணிகள் செய்ய ப்பட்டு கும்பாபி ஷேகம் நடந்தது. முன்ன தாக புதன்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து விழா அன்று நான்காம் கால யாகசாலைபூஜைகள் நிறைவு பெற்று புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள, தாளங்கள் முழங்கிட கோயிலை வலம்வந்து விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    ×