என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mandalabishekam"

    • மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
    • 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மேற்கு காவல் நிலைய காவலர்கள் குடியிருப்பில் உள்ள வலஞ்சுழி ராஜகணபதி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.

    இதற்காக நேற்று (2-ந் தேதி) முதல் கால யாகபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் தொடங்கி, இன்று (3-ந் தேதி) 2-ம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து, விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் ஏராளமான போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • 60 அடி உயரமுள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு தினந்தோறும் முனியப்பசாமிக்கு கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. மண்டலாபிஷேக 48-வது நாள் நிறைவு விழா நடைபெற்றது.‌

    நாமக்கல்:

    பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் சாணார்பாளையத்தில் சுமார் 60 அடி உயரமுள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு தினந்தோறும் முனியப்பசாமிக்கு கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. மண்டலாபிஷேக 48-வது நாள் நிறைவு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முனியப்பசாமிக்கு யாகவேள்வி பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்பசாமி கோயில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்

    • விழாவில் பலவகை ஆன்மீக நிகழ்ச்சிகளும் சொற்பொழிவும் நடந்து முடிந்தது.
    • முன்னதாக மழை பெய்ய வேண்டியும், வெயிலின் தாக்கம் குறையவும் விசேஷ வழிபாடு நடைபெற்றது.

    காங்கயம்:

    காங்கயம் தாலுகா குண்டடம் யூனியன் நிழலி தென்கரையில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 48 நாட்களுக்கான மண்டல பூஜை தொடங்கியது. இதையடுத்து வரன்பாளையம் மடாதிபதி மவுன சிவாசல அடிகளாரின் ஆலோசனையின் படி உபயதாரரும், ஆன்மீக பிரமுகருமான திருப்பூர் தொட்டம்பட்டி வெங்கிடுசாமியின் தலைமையில் மண்டலாபிஷேக நிறைவு விழா ஆகம விதிப்படி நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனை உள்பட பலவகை ஆன்மீக நிகழ்ச்சிகளும் சொற்பொழிவும் நடந்து முடிந்தது. இதில் காங்கயம், கொடுவாய், நிழலி, தாராபுரம், குண்டடம் உள்பட திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் இருந்து பக்தர்களும், உபயதாரர்களும் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னதாக மழை பெய்ய வேண்டியும், வெயிலின் தாக்கம் குறையவும் விசேஷ வழிபாடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நிழலி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.  

    ×