search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabishekam"

    • அலங்காநல்லூர் அருகே அழகி நாசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • தொடர்ந்து நேற்று மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி, வலசை கிராமத்தில் அமைந்துள்ள அழகி நாச்சியம்மன், பாரிகருப்புசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

    விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி, துணை சேர்மன் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    ஏற்பாடுகளை நிர்வாககுழு தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் பொருசுப்பட்டி பங்காளிகள் செய்திருந்தனர்.

    • கும்பாபிஷேகத்திற்காக புதுப்ெபாலிவுடன் அழகர்கோவில் ராஜகோபுரம் காட்சியளிக்கிறது.
    • விரைவில் கள்ளழகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    மதுரை

    ஆழ்வார்களால் பாடப்பெற்ற சிறப்புடையது மதுரை அழகர்கோவில். மேலும் 108 வைணவ திருக்கோவில்களில் ஒன்றாகவும், பாண்டிய நாட்டின் 18 வைணவ கோவில்களில் சிறப்பு வாய்ந்ததாகவும் அழகர் கோவில் கருதப்படுகிறது.

    இந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ரூ.1.5 கோடி செலவில் பணிகள் மும்முர மாக நடந்து வருகிறது. இதற்காக கடந்த மார்ச்

    13-ந் தேதி கோபு ரங்களுக்கு பாலாலயம் நடந்தது. அதனை ெதாடர்ந்து கும்பாபிஷேக பணிகள் தொடர்ந்து நடைபெற்று தற்போது முடியும் தரு வாயில் உள்ளது. இந்த கோவில் கோபுரமானது சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்ட கலவை கள் கொண்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கோவிலின் ராஜகோபுரம் 120 அடி உயரத்துடன் 7 நிலைகளை கொண்டது. இதில் கலைத்திறன் மிக்க 628 சுதை சிற்பங்கள் உள்ளன கோபுரத்தின் உச்சியில் 6¼ அடி உயரம் கொண்ட 7 கலசங்கள் உள்ளன.

    தற்போது இந்த கோபுரத்தில் திருப்பணிகள் முடிந்து பொலிவுடன் காட்சியளிக்கிறது.

    இதனை கோவில், அழகர் மலைக்கு வரும் பக்தர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். விரைவில் கள்ளழகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த கிராமத்தினர் கும்பாபிஷேகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • கடந்த 20-ந் தேதி 2 கால யாகசால பூஜை நடந்தது.
    • புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுரத்தை வந்தடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த கழனிவாசல் கிராமத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 20-ந் தேதி 2 கால யாகசால பூஜையை சிவசிதம்பரம் குடும்பத்தார்கள் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், கல்யாணசுந்தர குருக்கள் நடத்தினார்.

    அதன் பின்னர், பூர்ணாஹுதி நடைபெற்றது.தொடர்ந்து, சிவாச்சாரியர்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோபுரத்தை வந்தடைந்தனர்.

    பின், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம் நடந்தது.

    கும்பாபிஷேக பணிகளுக்காக ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் குலோத்துங்க சோடியன், டெல்லியை சேர்ந்த சந்திரசேகர், ராணுவதுறை உதவி செயலாளர் தேன்மொழி சந்திரசேகர், ஆசிரியை வனிதா குலோத்துங்க சோடியன், மாதவன் உள்ளிட்ட பக்தர்கள் உபயம் செய்தனர்.

    விழாவில் ஊராட்சி தலைவர் செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜாங்கம், குருக்கள் ரமணி, கோவில் பூசாரி கலியமூர்த்தி, நாட்டாமைகள், கிராமமக்கள், மகளிர் சுய குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நன்செய்இடையாறு காவிரி ஆற்றின் வடகரை யில் அமைந்துள்ள அரசமர பிள்ளையார், மாசி பெரி யண்ணசாமி மற்றும் கன்னி மார் கோவில் மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 8- மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யா கம் கணபதி ஹோமம், நவநாயகர் யாகம், மகாலட்சுமி யாகம் மற்றும் பூர்ணாகுதி யும், மாலை 5- மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய்இடையாறு காவிரி ஆற்றின் வடகரை யில் அமைந்துள்ள அரசமர பிள்ளையார், மாசி பெரி யண்ணசாமி மற்றும் கன்னி மார் கோவில் மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 8- மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யா கம் கணபதி ஹோமம், நவநாயகர் யாகம், மகாலட்சுமி யாகம் மற்றும் பூர்ணாகுதி யும், மாலை 5- மணிக்கு முளைப்பாரி அழைத்தலும் நடைபெற்றது.

    மாலை 6- மணிக்கு வாஸ்து பூமி பூஜை, கும்ப அலங்காரம், முதல் காலயாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், மருந்து சாத்துதலும் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மேல் இரண்டாம் காலயாக பூஜை, சபர்சாகுதி, தீபாராதனை யும், 7 மணிக்கு மேல் அரசமர விநாயகர், மாசி பெரியண்ண சாமி மற்றும் கன்னிமார்கள் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    அதனைத் தொடர்ந்து மகா அபிஷே கம், தசதானம், கோபூஜை நடைபெற்றது.

    கும்பாபிஷேகம்

    இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்க ளுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நன்செய்இடையாறு மற்றும் சுற்று வட்டார பகு திகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை நன்செய் இடையாறு மாசி பெரியண்ணசாமி கோவில் பரம்பரை அறங்கா வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • மதனகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    மதுரை

    மதுரை மேலமாசிவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மதன கோபால சுவாமி கோவிலில் பாமா, ருக்மணி யுடன் 2 கைகளில் புல்லாங் குழல் ஏந்தியபடி கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள ்பாலித்து வருகிறார். இங்கு மாதந்தோறும் பல்வேறு திருவிழாக்கள் விமரிசை யாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி பாவை நோன்பு நிகழ்ச்சிக ளில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப் ்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாலய பூைஜகள் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுரம், சன்னதி பிரகா ரங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசி புதுப்பொலி வுடன் காட்சி அளித்தது.

    இதனை கும்பாபிஷேக பூஜைகள், ஹோமங்கள் கடந்த 2 நாடகளுக்கு முன்பு தொடங்கியது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள யாகசாலையில் அக்னி வளர்க்கப்பட்டு சிறப்பு பூைஜகள் நடந்தது. இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து காலை 9 மணிக்கு வைணவ வழி பாட்டு முறைப்படி வைஷ்ணவ வேத ஆகமங்க ளும், திருப்பல்லாண்டு ஓத பட்டாச்சாரியார்கள் கோவில் கோபுர கலசங்க ளில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த பெண் கள் உள்பட ஏராளமானோர் கோவிந்தா... கோபாலா... என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    இதேபோல் மூலவர் சன்னதி விமானம், ராஜ கோபுரம், ஆண்டாள் தாயார் சன்னதி விமானத்திலும் கும்பாபிஷே கம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக ஏற்பாடு களை கோவில் அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி யாக பூஜை நடத்தினர்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது.

    இங்கு கருணாம்பிகை சமேத அவினாசிலிங்கேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் பல்வேறு கல்வெட்டுகள் உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனாரால் பதிகம்பாடி முதலை உண்ட பாலகனை உயிருடன் மீட்ட அதிசயம் நடந்த திருத்தலமும் இதுவே.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது

    அதன்படி கோவில் பரிவார சன்னதி விமானங்கள் பாலாலய பூஜை நேற்று இரவு 7 மணி அளவில் கோவில் மண்டபத்தில் யாகபூஜை நடந்தது.

    கோவில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி யாக பூஜை நடத்தினர்.

    இதில் குமரகுருபர சுவாமிகள், அவினாசி காமாட்சி தாச சுவாமிகள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் டாக்டர்ஆ.சக்திவேல், அறங்காவலர்கள் பொன்னுசாமி, ரவி, பிரகாஷ் ஆறுமுகம், கார்த்திகா, உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • குடமுழுக்கு செப்டம்பர் 3-ந்தேதி நடைபெற உள்ளது.
    • 33 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைத்து வேள்வி நடத்தப்பட உள்ளது.

    மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. பார்வதிதேவி மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து தனது சாபம் நீங்க பெற்ற தலம் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறை. இங்கு புகழ்பெற்ற மாயூரநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலின் குடமுழுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த குடமுழுக்கையொட்டி அபயாம்பிகை அம்பாள் மற்றும் மாயூரநாதர் சாமிக்கு 33 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைத்து வேள்வி நடத்தப்பட உள்ளது. இதற்கான யாகசாலை அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது. பூஜைகளை திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிராயன் சாமிகள் முன்னிலையில், சிவபுரம் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.

    இதில் முகூர்த்த பந்தக்காலுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலை சுற்றி வலம் வந்து பந்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து ரூ.6 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்கியது.
    • திருப்பணியில் கோவிலின் மதில் சுவர் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது.

    கும்பகோணம்:

    மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கும்பகோணம் அருகே கஞ்சனூர் கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோயில் நவக்கிரக தலங்களில் சுக்ர தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலுக்கு தினமும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சுக்கிர பிரீத்தி வழிபாடு செய்கின்றனர். இக்கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்து ரூ. 6 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    கஞ்சனூர் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கு  பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோவிலில் சுவாமி, அம்பாள், சுக்கிரன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு ஆராதனை நடந்தது. கோயிலில் மதுரை ஆதீனத்தின் சார்பில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் சுற்றுசுவர் திருப்பணிகளை மதுரை ஆதீனம் 293 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் பார்வையிட்டு  ஆலோசனைகளை வழங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், கோயில் சுற்றுப்புற 700 மீட்டர் நீளமுடைய மதில் சுவர் திருப்பணி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது.

    மேலும் கோயிலில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் தனித்தனியாக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. கோயில் திருப்பணிகளுடன்  பக்தர்களின் வசதிக்காக சுகாதார வளாகம் அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட உள்ளது. 

    மாசி மக உற்சவத்தில் தேர் ஓடுவதற்கு ஏதுவாக கஞ்சனூர் கோயிலுக்கு புதிதாக தேர் செய்திடும் வகையில் விரைவில் திருப்பணி  தொடங்கப்பட உள்ளது. வரும் மாசி மக விழாவில் தேரோட்டம்  நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    கஞ்சனூர் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக நடமாடும் சித்த மருத்துவ வைத்தியசாலை மதுரை ஆதீனத்தின் சார்பில் தொடங்கிடவும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கோயில்களை முறையாக பராமரிப்பது, திருப்பணி செய்வது, தூய்மையாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்என்றார்.  

    தொடர்ந்து திருப்புறம்பியும் சாட்நாதர் சுவாமி கோயிலில் நடைபெறும் தேர் திருப்பணிகளையும் மதுரை ஆதீனம் பார்வையிட்டார். அவருடன் நிர்வாக பொறுப்பாளர் ஆசிரியர் முத்தையன், கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் கண்காணிப்பாளர் செங்குட்டுவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 6-ந்தேதி பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மக்கள் திரளாக கலந்துகொண்டு அங்காளம்மனை வழிபட்டனர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா மாட்டூர் என சுந்தரமூர்த்தி நாயன்மாரால் தேவார வைப்புத்தலமாக பாடல் பெற்றதும் நடுச்சிதம்பரம் என ஆன்மிகப் பெரியோர்களால் போற்றத்தக்கதுமான சேவூரில் வாலியினால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீவாலிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புடைய, ஆன்மிக தலமான சேவூரில், தென்கரையில் பழங்கால தெய்வமான அங்காளம்மன் கோவில் உள்ளது. சேவூர் அங்காளம்மன் கோவில் குறித்து அதன் பரம்பரை பூசாரி பொ.ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:-

    சேவூரின் தென்கரையில் பல குலத்தவருக்கு வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்து வரும் சுமார் 850 ஆண்டுகளுக்கு முற்பட்ட தெய்வமான அங்காளம்மன் கோவிலில் பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகர், பேச்சியம்மன், வராகி, வீரபத்திரர், கன்னிமார், அகோர வீரபத்திரர் ஆகிய மூர்த்திகள் அமையப்பெற்றது சிறப்பு வாய்ந்ததாகும்.

    அங்காளம்மனை வழிபடுவோருக்கு பசி பிணியை நீக்கி பசுமை வரம் அளிப்பவள். இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கடந்த மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. இதில் திருப்பணி தொடங்கி விரைவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக, ஜூலை 6-ந் தேதி பாலாலய சிறப்பு பூஜை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 6-ந்தேதி கோவில் குடமுழுக்கு திருப்பணி செய்வதற்கான பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஷ்வக்சேன ஆராதனம், புண்ணியாவாசனை, கலச ஆவாஹனம், சுதர்சனஹோமம், திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி, சாற்றுமுறை, மஹாதீபாராதனை நடைபெற்று பாலாயம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், குலதெய்வத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து சமுதாய மக்கள் திரளாக கலந்துகொண்டு அங்காளம்மனை வழிபட்டனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 6-ந்தேதி கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    கொடைக்கானல் ஆனந்தகிரி உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்தநிலையில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி கடந்த 6-ந்தேதி கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அப்போது கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மறுநாள் யாகசாலை பூஜைகள் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இந்தநிலையில் இன்று காலை 10.30 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் பல்வேறு பரிவார சாமிகளுக்கு பூஜைகள் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ம ற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

    • கும்பாபிஷேக விழா இன்று தொடங்கி நாளை வரை நடக்கிறது.
    • கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து 48 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.

    நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளை சிவ சுடலைமாடசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று(சனிக்கிழமை) தொடங்கி நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி பூஜை, காலை 7 மணிக்கு நவகிரக பூஜை, 8 மணிக்கு சுதர்சன ஹோமம், மாலை 5 மணிக்கு மங்கள இசை, யாகசாலை நிர்மாணம், புனித நீர் எடுத்து வருதல், 6.30 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜைகள், வாஸ்து ஹோமம், இரவு 7 மணிக்கு காப்புகட்டுதல், 10 மணிக்கு புதிய சிலை பிரதிஷ்டை ஆகியவை நடக்கிறது.

    நாளை காலை 6 மணிக்கு 2-ம் கால பூஜைகள் ஆரம்பம், காலை 9 மணிக்கு ஜீவ கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்படுதல், தொடர்ந்து கும்பாபிஷேகம், சகல பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், 11 மணிக்கு அபிஷேகம், பகல் 12 மணிக்கு தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு மகேஷ்வர பூஜை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு கீழவண்ணான்விளை முத்தாரம்மன் மகளிர் மன்றத்தாரின் திருவிளக்கு பூஜை, இரவு 7:30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து 48 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.

    கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குடும்பத்தினரும் மற்றும் பொதுமக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

    • 2 ராஜகோபுரங்கள் மற்றும் 10 விமானங்களில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
    • 50 செப்புக் கலசங்களும் வைக்கப்பட்டன.

    கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் பிரசித்தி பெற்ற அருணஜடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெரிய நாயகி அம்பாள் அருணஜடேஸ்வரர் அருள்பாலிக்கிறார்கள். இந்த கோவில் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் கடந்த 2003-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.3 கோடியில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி திருப்பணிகள் தொடங்கியது. கடந்த 6 மாதங்களில் திருப்பணிகள் நிறைவு பெற்று 2 ராஜகோபுரங்கள் மற்றும் 10 விமானங்களில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. 50 செப்புக் கலசங்களும் வைக்கப்பட்டன.

    பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவில் வளாகத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டது. அதில் 59-யாக குண்டங்களும், 25 வேதிகைகள் அமைக்கப்பட்டு, 80 சிவாச்சாரியார்கள் மூலம் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜைகள் நடந்தன.

    முன்னதாக, கடந்த 5-ந் தேதி தேரடி விநாயகர், திருவீதி விநாயகர், ஊருடையப்பர், வீரியம்மன், விஸ்வநாதர் ஆகிய பரிவார கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றது.

    நேற்று அருணஜடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக மகா பூர்ணாஹூதியுடன் கடம் புறப்பட்டு, காலை 9.30 மணிக்கு கோபுரம், விமானங்களுக்கு குடமுழுக்கும், 10.30 மணிக்கு மூலவர்களுக்கு அபிஷேகமும் நடைபெற்றன.

    விழாவில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் முத்துக்குமாரசாமி தம்பிரான், மதுரை ஆதீனம்ஹரிஹர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம், கூனம்பட்டி ஆதீனம், காசி மடத்து இளவரசு சபாபதி தம்பிரான் சாமிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் சிராப் கந்தசாமிபிள்ளை, பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், துணைத் தலைவர் கலைவாணி சப்பாணி, கலைச் செல்வன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×