என் மலர்

  நீங்கள் தேடியது "sikkal singaravelan temple"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிங்கார வேலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
  • சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

  புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாக நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சிங்கார வேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

  பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் சிங்காரவேலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுக கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

  இதேபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

  தொடர்ந்து விபூதி அலங்காரத்துடன் வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இங்குள்ள சுப்பிரமணியசாமி ஒரு முகம், ஆறு திருக்கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அமைந்துள்ளது.

  இதேபோல், தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  இதேபோல் வாய்மேடு பழனி ஆண்டவர் கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. முன்னதாக முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், தேன், திருநீறு, மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

  பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளியங்கி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருஞானசம்பந்தர் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடினார்.
  • இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த பதிகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

  திருஞானசம்பந்தர் சிக்கல் சிங்கார வேலவர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடினார். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த பதிகம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

  வானுலா வும்மதி வந்துலா வும்மதில் மாளிகை

  தேனுலா வும்மலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்

  வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி

  ஞானமா கந்நினை வார்வினை யாயின நையுமே.

  வானத்தே உலாவும் மதிவந்து பொருந்தும் மதில்கள் சூழ்ந்த

  மாளிகைகளும், தேன்பொருந்திய மலர்களை உடைய சோலைகளும்

  நிறைந்து விளங்கும்.

  திருச்சிக்கல் என்னும் தலத்தில், வேனிற் காலத்துக் குரியவனாகிய மன்மதனை நெற்றி விழியால் எரித்தழித்த வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அவனருளால் விளைந்த பக்தி ஞானத்தாலே நினைப்பவர் வினைகள் நைந்துஅறும்.

  மடங்கொள்வா ளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்

  திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்

  விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே

  அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.

  இளமை பொருந்திய வாளைமீன்கள் துள்ளிக் குதித்துக் களிக்கும் மணம்

  பொருந்திய மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்ததும்

  மனஉறுதியுடைய சிறந்த மறையவர்கள் நிறைந்துள்ளதுமான

  சிக்கலில் எழுந்தருளிய, விடம் தங்கிய கண்டத்தினை உடைய

  வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை மனத்தால் விரும்பியவராய்

  அடைந்து வாழும் அடியவர்கள் அல்லல்கள் நீங்குவர்.

  நீலநெய் தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய

  சேலுமா லுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்

  வேலவொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்

  பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.

  நீலநிறம் பொருந்திய நெய்தல் மலர்கள் விளங்கி மலரும் சுனைகள் பலவற்றைக் கொண்டதும், சேல்மீன்கள் துள்ளும் வயல் வளம் நிறைந்ததுமான சிக்கல் என்னும் திருப்பதியில் வேல் போன்ற ஒளிநிறைந்த கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட வெண்ணெய்ப் பிரானாகிய பால்வண்ண நாதனின் திருவடிகளை ஏத்தின் நம் பாவங்கள் நீங்கும்.

  கந்தமுந் தக்கைதை பூத்துக் கமழ்ந்து சேரும்பொழிற்

  செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்

  வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்

  சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.

  மணம் முற்பட்டுச் சென்று பரவுமாறு தாழைகள் பூத்துக் கமழும்

  பொழில்களில் வண்டுகள் செந்து என்னும் ஒருவகைப் பண்ணோடு பாடும்.

  பாடல்களைக் கொண்டு விளங்கும் சிக்கல் என்னும் தலத்தில், கற்பம்

  செய்தமைத்த திருவெண்ணீற்றை அணிந்த தலைமையாளனாகிய

  வெண்ணெய்ப்பிரானின் மணம் பொருந்திய திருவடிகளை நினைபவர்

  வினைப்கள் தேய்வது திண்ணம்.

  மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு

  தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்

  வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே

  தங்குமேன் மைசர தந்திரு நாளுந்த கையுமே.

  மேகங்கள் தங்கும் மறையவரின் மாடவீடுகளையும் அவற்றின் அருகே

  உயர்ந்து வளர்ந்துள்ள தென்னைகளை உடைய சோலைகளையும்

  கொண்டு செல்வம் நிறைந்துவிளங்கும் சிக்கல் என்னும் தலத்தில்

  சினம்மிக்க கண்களை உடைய வெள்ளேற்று ஊர்தியை உடைய

  வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அடையின், மேலான

  கதி கிடைத்தல் உறுதி. செல்வம் நாள்தோறும் பெருகும்.

  வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்

  தெண்டிரைக் கொள்புனல் வந்தொழு கும்வயற் சிக்கலுள்

  விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப் பெருமானடி

  கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.

  மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த காழிப் பதியுள் தோன்றிய

  ஞானசம்பந்தன் செவ்விய தண்மையான அழகிய பொழில்கள் சூழ்ந்த

  சிக்கலில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் போற்றி

  இசையோடு பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்

  சிவலோகத்தில் கற்பமுறையில் உண்டான திருவெண்ணீற்றை அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை மேவுவர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இத்தல பெருமாள் “கோலவாமனப் பெருமாள்’ என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
  • நவநீதேஸ்வரர் கோவிலில் தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறும்.

  சிக்கல் சிவாலயத்தில் சைவ, வைணவ பேதமில்லாமல் அமையப்பெற்றுள்ள தனிக்கோவிலில் கோலவாமனப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிப்பதும், ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருவதும் குறிப்பிடத் தக்கவையாகும்.

  பெருமாள் தல வரலாறு:

  ஒரு முறை தேவர்கள் அசுரகுலத்தை சேர்ந்த மகாபலி சக்கரவர்த்தியால் தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறித்து மகாவிஷ்ணுவின் திருவடியில் விண்ணப்பம் ஒன்றை வைத்தார்கள்.

  அதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இங்கு வந்து இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவனை வழிபட்டு அசுரகுரு சுக்ராச்சாரியார் அருள் பெற்ற மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக புராணங்கள் வாயிலாக கூறப்படுகிறது.

  எனவே இத்தல பெருமாள் "கோலவாமனப் பெருமாள்' என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். ஆதலால் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள சிவனை, மகாசக்தி, முருகன், பெருமாள் மற்றும் அனுமனையும் தரிசனம் செய்பவர்களுக்கு எந்த ஒரு துஷ்ட சக்திகளின் பாதிப்பும் ஏற்படாது என்பது ஐதீகம்.

  நவநீதேஸ்வரர் கோவிலில் தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறும். இவ்வாலயத்தில் வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறியதும் இத்தல இறைவன் வெண்ணெய்நாதருக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முருகனின் வாகனம் மயில்.
  • மயிலுக்கு சிகி என்றொரு பெயரும் உண்டு.

  * முருகனின் வாகனம் மயில். மயிலுக்கு சிகி என்றொரு பெயரும் உண்டு. சிகி வாகனன் என்பதில் இருந்து இத்தலம் சிக்கல் என்றானது.

  * இத்தல சிங்கார வேலவனின் ஆபரணங்களும், அவன் பெயரை போலவே சிங்காரமானவைதான்.

  * ரத்தினங்கள் இழைத்த கொண்டை, பொன்னால் ஆன கவசம், வெள்ளியிலான குடை, வைரவேல், ஆனவட்டம் என அற்புத வேலைபாடுகள் அமைந்த ஆபரணங்கள் இந்த வேலவனுக்கு உண்டு.

  * தட்சிணாமூர்த்தி கோஷ்டத்திற்கு அருகே தல விருட்சமான மல்லிகைக் கொடி உள்ளது.

  * இத்தல கார்த்திகை மண்டபத்தில் கந்த புராண நிகழ்ச்சிகளை ஓவியங்களாகவும், ராமாயண நிகழ்ச்சிகளை சுதைச் சிற்பங்களாகவும் தரிசிக்கலாம்.

  * ஆணவமும், மந்த புத்தியும் உள்ளது ஆடு. நம்மிடம் உள்ள ஆணவத்தையும், மந்த புத்தியையும் அடக்குவேன் என்பதை கூறாமல் கூறுவது போல இத்தல முருகன் ஆட்டு கிடா வாகனத்தில் பவனி வருகிறார்.

  * இத்தலத்தில் விருத்த காவிரி எனும் ஓடம்போக்கியாறு, காமதேனு தீர்த்தம், கயா தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், அம்மா தீர்த்தம் என 5 தலதீர்த்தங்கள் உள்ளன.

  * திலோத்தமையின் மீது காதல் கொண்டு அதனால் தவபலனை இழந்த விஸ்வாமித்திரர் இத்தலத்திற்கு வந்து அந்த பாவத்தை தீர்த்துக் கொண்டதாக தல புராணம் கூறுகிறது.

  * வசிஷ்டர் சீடர்களோடு இருப்பதும், காமதேனு நவநீதேஸ்வரரை வழிபடுவதும் ஆகிய தலபுராணச் சிற்பங்களை பிராகாரத்தில் காணலாம்.

  * வசந்த மண்டபத்தில் கார்த்திகை திருநாள் உற்சவத்தின் போது தேவியருடன் சிங்கார வேலவன் எழுந்தருள்வது வழக்கம். அப்போது நிலைக்கண்ணாடி முன் நடத்தப்படும் ஒய்யாளி சேவை அற்புதமானது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா நடைபெறும்.

  நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சிங்காராவேலவரை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

  அதில் கந்தசஷ்டி விழா தேரோட்டமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா நடைபெறும். விழாவின் 5-ம் நாள் தேரோட்டம் நடக்கும். அன்றைய தினம் சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளுவார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்படும்.

  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்வர். நான்கு வீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை வந்தடையும். தேர் அசைந்தாடி வரும் காட்சி பிரமிப்பாக இருக்கும்.தேரோட்டத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சிக்கல் கிராமத்தில் குவிவார்கள்.

  அதன்படி இந்த ஆண்டும் கந்தசஷ்டி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிங்காரவேலவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.
  • பக்தர்கள் முருகனின் அழகில் மெய்மறந்து மனமுருகி தரிசிப்பர்.

  சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

  அன்றைய தினத்தில் சிங்காரவேலவருக்கு மஞ்சள், பால், தயிர், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.

  அதனை தொடர்ந்து, சிங்காரவேலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.

  அந்த அலங்காரத்தில் முருகனை தரிசிக்கும் பக்தர்கள் 'அழகென்ற சொல்லுக்கு முருகா'.. என்ற பாடல் வரிகளுக்கேற்ப அவரின் அழகில் மெய்மறந்து முருகனை மனமுருகி தரிசிப்பர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சோழ வள நாட்டில் இயற்கையில் மலைகள் கிடையாது.
  • இந்தத் தலம், அறுபடை வீடுகளுக்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.

  நாகை மாவட்டம், நாகை- – திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிக்கல் கிராமம். இங்கு 80 அடி உயரத்தில் அமைந்துள்ள கோவிலில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார் சிங்காரவேலவர்.

  சோழ வள நாட்டில் இயற்கையில் மலைகள் கிடையாது. செயற்கையாக அமைக்கப்பட்ட மலைக் கோயிலான இந்தத் தலம், அறுபடை வீடுகளுக்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.

  வலப்புறம் சிவனாகிய 'நவநீதேஸ்வரர்', இடப்புறம் பார்வதிதேவியான 'வேல் நெடுங்கண்ணி'. இப்படி அம்மை – அப்பனுக்கு இடையில் அமர்ந்து அருள் பாலிக்கும் சிங்காரவேலரின் பார்வை பட்டாலே மலையளவு சிக்கல்களும் பனி போல மாயமாகி விடுமாம்.

  ''ஒருகாலத்தில் சூரபத்மன் என்ற அரசன், மக்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். அழியா வரம் பெற்ற அவனை வதம் செய்ய முருகனால் மட்டுமே முடியும் என்று கருதிய தேவர்கள் முருகனிடம் மன்றாட, முருகனும் சூரனை வதம் செய்ய சம்மதித்தார்.

  சூரன் சிவனிடம் அழியா வரம் பெற்றதால், அவனை அழிப்பதற்கான வேல் வேண்டி இந்தத் தலத்தில் அம்மை – அப்பன் முன் தவமிருந்தார் முருகன். இறுதியில் மகனின் தவத்தை மெச்சிய பார்வதிதேவி, சக்தி மிக்க வேலை வழங்க, அந்த வேலுடன் திருச் செந்தூர் சென்று சூரனை சம்ஹாரம் செய்ததுடன், அன்று முதல் சிங்காரவேலன் ஆனார் முருகன்.

  ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு முன், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டியன்று சக்தியிடம் முருகன் வேல் வாங்கும் காட்சி, 'சக்தி – வேலன் புறப்பாடு'களுடன் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

  இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகனின் திருமேனியில் வியர்வை துளிர்க்கும். அப்படி வழியும் வியர்வையை அர்ச்சகர்கள் துடைப்பதும், துடைக்கத் துடைக்க வியர்வை துளிர்ப்பதும் மிகவும் ஆச்சர்யமானது. இந்த அதிசயத்தைக் காண வெளி நாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் குவிந்து விடுவார்கள்''

  பக்தர்கள் கூறிய உண்மை தகவல்கள்

  தன் மைத்துனருக்குத் திருமணமாக வேண்டும் என்ற வேண்டுதலோடு கோவையிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்தார் கணேசன் குருக்கள்.

  ''என் மைத்துனர் மகாராஜன், அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் குருக்களாக இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக இவருக்கு கல்யாணத்துக்கு பெண் பார்க்கிறோம். ஏதோ ஒரு சிக்கல் வந்து கல்யாணம் தடைபட்டு கொண்டே செல்கிறது. அதனால் தான் எல்லா சிக்கல்களும் தீர்ந்து சீக்கிரமே இவருக்கு 'டும் டும்' கொட்டணும்னு வேண்டிக்க வந்தோம்'' என்றார். அவர் வேண்டிய சில நாட்களிலே மகாராஜனுக்கு திருமணம் நடந்து முடிந்த அதிசயம் நிகழ்ந்தது.

  ஏழாவது திருமண தினத்தை முன்னிட்டு தேவூரில் இருந்து மகனுடன் வந்திருந்தனர் ராஜலிங்கம்- – பாக்ய லட்சுமி தம்பதி. ''ஒவ்வொரு கல்யாண நாளன்றும் சிங்காரவேலவரைத் தரிசிப்பது எங்கள் வழக்கம். இவர் கருணையால் எங்கள் வாழ்வில் எந்த சிக்கலும் இல்லை. சண்டை, சச்சரவுகளும் இல்லை. ஒரு மகன், ஒரு மகளுடன் தெளிந்த நீரோடை போல போகிறது எங்கள் வாழ்க்கை'' என்று மகிழ்ந்த படியே சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலவரின் வரலாற்று மகிமையை சொல்லத் தொடங்கினார் ராஜலிங்கம்.

  ''சூரபத்மனின் முரட்டுப் பிடியில் சிக்கித் தவித்த தேவர்களையே காப்பாற்றிக் கரை சேர்த்தவர் இந்த சிங்காரவேலவர்.அப்பேர்ப் பட்டவருக்கு சாதாரண மானுட பக்தனின் சிக்கல்களெல்லாம் எம்மாத்திரம்? இவரது அருட் பார்வை பட்டதுமே எப்பேர்ப்பட்ட சிக்கலும் சுக்கு நூறாகிவிடும்''

  பாண்டிச்சேரியிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த ஆசிரியை தமிழரசி, ''டீச்சர் டிரெயினிங் முடிச்சிருந்த எனக்கு, போஸ்ட்டிங் போடாமல் 3 ஆண்டுகளாக அலைக்கழிச்சுட்டு இருந்தாங்க. ஆறு மாதத்துக்கு முன்னாடி இங்க வந்து 'சத்ரு சம்ஹார பூஜை' செஞ்சு சிங்காரவேலரை வழிபட்டுப் சென்றோம். இப்போது எனக்கு வேலை கிடைச்சு ரெண்டு மாசமாகுது. அதான்.. நன்றிக் கடன் செலுத்திட்டுப் போகலாம்னு வந்திருக்கோம்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

  இப்படி சிக்கல் சிங்காரவேலரை மனமுருகி வேண்டி கொண்டு தரிசித்த பக்தர்களை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பது நிதர்சனமான உண்மை. மேற்கூறியவர்களை போல் இன்னும் லட்சகணக்கானோர் மனமுருகி சிங்காரவேலவரை தரிசனம் செய்து பயன் அடைந்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்புகழில் சிங்கார வேலனைப் போற்றிப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.
  • திருப்புகழில் சிக்கல் சிங்கார வேலவரின் சிறப்புகளும், சிக்கல் தலத்தின் பெருமைகளும் கூறப்படுகின்றன.

  சிக்கல் சிங்காரவேலவர் கோவில் முருகப் பெருமானின் அறிவிக்கப்படாத 7-ம் படைவீடாகப் போற்றப்படுகிறது.

  விஸ்வாமித்திரர், அகத்தியர், கார்த்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.

  'கன்னல் ஒத்த மொழிச் சொல்' எனத் தொடங்கும் திருப்புகழில் சிக்கல் சிங்கார வேலவரின் சிறப்புகளும், சிக்கல் தலத்தின் பெருமைகளும் கூறப்படுகின்றன.

  'அற்ப குணம் படைத்தவர்கள் பக்கம் என் மனதை செலுத்தவிடாமல், இயல், இசை, நாடகம் என்று முத்தமிழில் விருப்பம் கொண்டவனாக விளங்கும் நீ, எனக்கு அருள் புரிவாயாக!

  அரக்கர்களின் தலைகளை பூமியில் உருளச் செய்யும் வீரம் கொண்டவனே!

  கொடிய பாம்பின் விஷத்தைப் போன்ற மனம் கொண்ட சூரனை, வெற்றி காண வேலாயுதத்தை உடையவனே! செம்மை குணம் கொண்ட பெரியோரின் உள்ளத்தில் வீற்றிருக்கும் சிக்கல் சிங்கார வேலவரே!'

  - என்று தனது திருப்புகழில் சிங்கார வேலனைப் போற்றிப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.

  இங்கு வரும் பக்தர்கள், 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்து சிக்கல் தவிர்க்கின்ற சிங்கார வேலவனை நித்தம் பாடுவோம்' என்று கூறியும், திருப்புகழைப் பாடியும் தங்கள் வழிபாட்டை நிறைவு செய்கின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தத் தலத்தில் அம்மை – அப்பன் முன் தவமிருந்தார் முருகன்.
  • முருகனின் திருமேனியில் வியர்வை துளிர்க்கும்.

  நாகை மாவட்டம், நாகை- – திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சிக்கல் கிராமம். இங்கு 80 அடி உயரத்தில் அமைந்துள்ள கோவிலில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார் சிங்காரவேலவர்.

  சோழ வள நாட்டில் இயற்கையில் மலைகள் கிடையாது. செயற்கையாக அமைக்கப்பட்ட மலைக் கோயிலான இந்தத் தலம், அறுபடை வீடுகளுக்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.

  வலப்புறம் சிவனாகிய 'நவநீதேஸ்வரர்', இடப்புறம் பார்வதிதேவியான 'வேல் நெடுங்கண்ணி'. இப்படி அம்மை – அப்பனுக்கு இடையில் அமர்ந்து அருள் பாலிக்கும் சிங்காரவேலரின் பார்வை பட்டாலே மலையளவு சிக்கல்களும் பனி போல மாயமாகி விடுமாம்.

  ''ஒருகாலத்தில் சூரபத்மன் என்ற அரசன், மக்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். அழியா வரம் பெற்ற அவனை வதம் செய்ய முருகனால் மட்டுமே முடியும் என்று கருதிய தேவர்கள் முருகனிடம் மன்றாட, முருகனும் சூரனை வதம் செய்ய சம்மதித்தார்.

  சூரன் சிவனிடம் அழியா வரம் பெற்றதால், அவனை அழிப்பதற்கான வேல் வேண்டி இந்தத் தலத்தில் அம்மை – அப்பன் முன் தவமிருந்தார் முருகன். இறுதியில் மகனின் தவத்தை மெச்சிய பார்வதிதேவி, சக்தி மிக்க வேலை வழங்க, அந்த வேலுடன் திருச்செந்தூர் சென்று சூரனை சம்ஹாரம் செய்ததுடன், அன்று முதல் சிங்காரவேலன் ஆனார் முருகன்.

  ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு முன், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டியன்று சக்தியிடம் முருகன் வேல் வாங்கும் காட்சி, 'சக்தி – வேலன் புறப்பாடு'களுடன் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

  இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகனின் திருமேனியில் வியர்வை துளிர்க்கும். அப்படி வழியும் வியர்வையை அர்ச்சகர்கள் துடைப்பதும், துடைக்கத் துடைக்க வியர்வை துளிர்ப்பதும் மிகவும் ஆச்சர்யமானது. இந்த அதிசயத்தைக் காண வெளி நாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் குவிந்து விடுவார்கள்''

  பக்தர்கள் கூறிய உண்மை தகவல்கள்

  தன் மைத்துனருக்குத் திருமணமாக வேண்டும் என்ற வேண்டுதலோடு கோவையிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்தார் கணேசன் குருக்கள்.

  ''என் மைத்துனர் மகாராஜன், அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் குருக்களாக இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக இவருக்கு கல்யாணத்துக்கு பெண் பார்க்கிறோம். ஏதோ ஒரு சிக்கல் வந்து கல்யாணம் தடைபட்டு கொண்டே செல்கிறது. அதனால் தான் எல்லா சிக்கல்களும் தீர்ந்து சீக்கிரமே இவருக்கு 'டும் டும்' கொட்டணும்னு வேண்டிக்க வந்தோம்'' என்றார். அவர் வேண்டிய சில நாட்களிலே மகாராஜனுக்கு திருமணம் நடந்து முடிந்த அதிசயம் நிகழ்ந்தது.

  ஏழாவது திருமண தினத்தை முன்னிட்டு தேவூரில் இருந்து மகனுடன் வந்திருந்தனர் ராஜலிங்கம்- – பாக்ய லட்சுமி தம்பதி. ''ஒவ்வொரு கல்யாண நாளன்றும் சிங்காரவேலவரைத் தரிசிப்பது எங்கள் வழக்கம். இவர் கருணையால் எங்கள் வாழ்வில் எந்த சிக்கலும் இல்லை. சண்டை, சச்சரவுகளும் இல்லை. ஒரு மகன், ஒரு மகளுடன் தெளிந்த நீரோடை போல போகிறது எங்கள் வாழ்க்கை'' என்று மகிழ்ந்த படியே சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலவரின் வரலாற்று மகிமையை சொல்லத் தொடங்கினார் ராஜலிங்கம்.

  ''சூரபத்மனின் முரட்டுப் பிடியில் சிக்கித் தவித்த தேவர்களையே காப்பாற்றிக் கரை சேர்த்தவர் இந்த சிங்காரவேலவர்.அப்பேர்ப் பட்டவருக்கு சாதாரண மானுட பக்தனின் சிக்கல்களெல்லாம் எம்மாத்திரம்? இவரது அருட் பார்வை பட்டதுமே எப்பேர்ப்பட்ட சிக்கலும் சுக்கு நூறாகிவிடும்''

  பாண்டிச்சேரியிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த ஆசிரியை தமிழரசி, ''டீச்சர் டிரெயினிங் முடிச்சிருந்த எனக்கு, போஸ்ட்டிங் போடாமல் 3 ஆண்டுகளாக அலைக்கழிச்சுட்டு இருந்தாங்க. ஆறு மாதத்துக்கு முன்னாடி இங்க வந்து 'சத்ரு சம்ஹார பூஜை' செஞ்சு சிங்காரவேலரை வழிபட்டுப் சென்றோம். இப்போது எனக்கு வேலை கிடைச்சு ரெண்டு மாசமாகுது. அதான்.. நன்றிக் கடன் செலுத்திட்டுப் போகலாம்னு வந்திருக்கோம்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

  இப்படி சிக்கல் சிங்காரவேலரை மனமுருகி வேண்டி கொண்டு தரிசித்த பக்தர்களை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பது நிதர்சனமான உண்மை. மேற்கூறியவர்களை போல் இன்னும் லட்சகணக்கானோர் மனமுருகி சிங்காரவேலவரை தரிசனம் செய்து பயன் அடைந்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பக்தர்கள் மீது குழாய் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது.
  • நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது.

  நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. தமிழ் கடவுளான முருகப்பெருமான் அருள்பாலிக்கும் இக்கோவில் அறுபடை வீடுகளை போல பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாகும்.

  இங்கு நவநீதேஸ்வரர் மூலவராக அருள்பாலித்து வருகிறார். நவநீதேஸ்வரராக சிவன், கோலவாமனராக பெருமாள் சிங்காரவேலவராக முருகப்பெருமான் ஆகியோர் ஒரே கோவிலில் தனிச்சன்னதியில் அருள்பாலிப்பது இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும்.

  இங்கு அருள்பாலித்து வரும் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்ததாக கந்த புராணம் கூறுகிறது.

  அதன்படி ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவையொட்டி அம்மனிடம் இருந்து சிங்காரவேலவர்(முருகன்) வேல் வாங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது.

  அப்போது முருகனின் மேனி எங்கும் வியர்வை சிந்தும் அதிசயத்தை பக்தர்கள் கண்டு வியந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த அற்புத காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் சிக்கலுக்கு வருவார்கள்.

  பல்வேறு சிறப்புகளைப் பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணி வேலைகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

  இதையொட்டி நவநீதேஸ்வரர், சிங்காரவேலவர், வேல் நெடுங்கண்ணி அம்மன், கோலவாமன பெருமாள் உள்ளிட்ட தனிச்சன்னதிகள், ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம், ராஜகோபுரம் கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு கோபுரங்கள், விமானங்கள் மற்றும் உள்பிரகார மண்டபங்கள் புனரமைக்கப்பட்டது.

  திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. 52 யாக குண்டங்களுடன் பிரம்மாண்ட யாக சாலை அமைக்கப்பட்டது. இங்கு 108 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை கூறி யாக சாலை பூஜைகளை நடத்தினர்.

  6 கால யாக சாலை பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை புனிதநீர் அடங்கிய கடங்கள் சிவ வாத்தியங்கள் முழங்க யாக சாலையில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டன. காலை 9.45 மணி அளவில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

  அப்போது 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு பக்தர்கள் சிக்கல் சிங்காரவேலவரை மனமுருகி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது குழாய் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது.

  விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், சென்னை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ராஜா, நாகை குற்றவியல் நீதித்துறை தலைமை நீதிபதி கார்த்திகா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் முருகன், தாசில்தார் ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா, சிக்கல் கோவில் அர்ச்சகர் ராமநாத சிவாச்சாரியார், சிக்கல் வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram