search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசிலாமணீஸ்வரர் கோவில்"

    • பஞ்சமூர்த்தி சாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.
    • திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட வடதிருமுல்லைவாயலில் உள்ள பழமையான கொடியிடைநாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

    இதையொட்டி கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாக பூஜையும், அதைதொடர்ந்து யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசம் எடுத்துவரப்பட்டு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுர கலசங்களுக்கும், அதை தொடர்ந்து மூலவர் மாசிலாமணீஸ்வரர் கொடியிடை நாயகி மற்றும் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கொடி மரம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    அப்போது கூடியிருந்த பக்தர்கள் "ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா" என பக்தி கோஷங்களை எழுப்பினர். மாலையில் திருக்கல்யாண வைபவமும், இரவு பஞ்சமூர்த்தி சாமிகள் திருவீதி உலாவும் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் நாசர், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், கோவில் அறங்காவலர், செயல் அலுவலர், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கும்பாபிஷேக விழா ஜூலை 2-ந்தேதி தொடங்குகிறது.
    • 3-ந்தேதி கஜபூஜை, நவகிரக ஹோமம், அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    சென்னை வடதிருமுல்லைவாயலில் உள்ள கொடியிடை நாயகி உடனுறை மாசிலாமணீஸ்வரர் கோவிலில் ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா ஜூலை 2-ந்தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, சங்கல்பம், கோபூஜை, தனபூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நடக்கிறது.

    3-ந்தேதி காலை 9 மணிக்கு கஜபூஜை, நவகிரக ஹோமமும், மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணமும் நடக்கிறது. 4-ந்தேதி காலை 8.30 மணிக்கு அஸ்வ பூஜை, சாந்திஹோமம், யாக சாலை நிர்மாணம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சர்ப்பபூஜை, யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை நடக்கிறது.

    5-ந்தேதி காலை 9 மணிக்கு பச்சை சாத்துப்படி, 2-ம் கால யாக பூஜையும், மாலை 4.30 மணிக்கு மஞ்சள் சாத்துப்படி 3-ம் கால யாக பூஜை, தீபாராதனையும் நடக்கிறது.

    6-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, விசேஷ ஹோமம் நடக்கிறது. காலை 9 மணிக்கு பிரதான கலசங்கள் ஆலய வலம் வருகிறது. காலை 9 மணிக்கு மேல் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10 மணிக்கு மாசிலா மணீஸ்வரர் கொடியிடை நாயகிக்கு மகாகும்பாபிஷேகம் தீபாராதனை நடக்கிறது.மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம் அலங்கார தரிசனம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு 9 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் திருவீதி உலாவும் நடக்கிறது.

    ×