search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருமுல்லைவாயல் சிவன் கோவிலில் ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம்
    X

    திருமுல்லைவாயல் சிவன் கோவிலில் ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம்

    • கும்பாபிஷேக விழா ஜூலை 2-ந்தேதி தொடங்குகிறது.
    • 3-ந்தேதி கஜபூஜை, நவகிரக ஹோமம், அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    சென்னை வடதிருமுல்லைவாயலில் உள்ள கொடியிடை நாயகி உடனுறை மாசிலாமணீஸ்வரர் கோவிலில் ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா ஜூலை 2-ந்தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, சங்கல்பம், கோபூஜை, தனபூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நடக்கிறது.

    3-ந்தேதி காலை 9 மணிக்கு கஜபூஜை, நவகிரக ஹோமமும், மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணமும் நடக்கிறது. 4-ந்தேதி காலை 8.30 மணிக்கு அஸ்வ பூஜை, சாந்திஹோமம், யாக சாலை நிர்மாணம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சர்ப்பபூஜை, யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை நடக்கிறது.

    5-ந்தேதி காலை 9 மணிக்கு பச்சை சாத்துப்படி, 2-ம் கால யாக பூஜையும், மாலை 4.30 மணிக்கு மஞ்சள் சாத்துப்படி 3-ம் கால யாக பூஜை, தீபாராதனையும் நடக்கிறது.

    6-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, விசேஷ ஹோமம் நடக்கிறது. காலை 9 மணிக்கு பிரதான கலசங்கள் ஆலய வலம் வருகிறது. காலை 9 மணிக்கு மேல் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10 மணிக்கு மாசிலா மணீஸ்வரர் கொடியிடை நாயகிக்கு மகாகும்பாபிஷேகம் தீபாராதனை நடக்கிறது.மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம் அலங்கார தரிசனம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு 9 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் திருவீதி உலாவும் நடக்கிறது.

    Next Story
    ×