search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kishore"

    கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் சத்யராஜ், வரலட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தின் விமர்சனம். #EcharikkaiReview #Varalakshmi
    உலகத்தில் அனைத்தையும் தீர்மானிக்கும் பணத்தை தவறான வழியில் சம்பாதிக்க நினைத்தால் என்ன ஆகும் என்ற எச்சரிக்கையே படம்.

    தனது அக்கா கணவரை கொன்ற குற்றத்துக்காக சிறைக்கு சென்று திரும்பும் கிஷோர், சிறுவயதில் அனாதையாக விடப்பட்ட தனது அக்கா மகன் விவேக் ராஜ்கோபாலுக்கு எதையாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறார். ஜெயிலில் இருந்து வெளியே வரும் கிஷோர், பைக் திருடி பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் விவேக்கை வைத்து பெரிய அளவில் பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார்.



    அதற்காக ஒரு பெரிய கடத்தலை செய்யவும் முடிவு செய்து, அதற்கான வேலையில் இறங்குகிறார். கடைசியில் விவேக்கை வைத்து ஆள்கடத்தல் செய்து அதன் மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கத் திட்டமிடுகிறார். அதன்படி தொழிலதிபரின் மகளான வரலட்சுமி சரத்குமாரை கடத்துகின்றனர்.

    இதுஒருபுறம் இருக்க மனைவியை இழந்த, ஓய்வுபெற்ற காவலரான சத்யராஜ் தனது மகளுடன் வசித்து வருகிறார். தனது மகளை விட்டு பிரியமுடியாமல் தவிக்கும் சத்யராஜிடம் வரலட்சுமி கடத்தப்பட்ட செய்தியை அவரது அப்பா கூறி, தனது மகளைக் காப்பாற்றி தரும்படி சொல்கிறார்.



    சத்யராஜ், காவல்நிலைய அதிகாரிகளின் உதவியுடன் தனது வீட்டில் வைத்தே கடத்தல்காரர்களை தேடி வருகிறார். கடைசியில், சத்யராஜ், கடத்தல்காரர்களை பிடித்தாரா? கிஷோர், விவேக் தங்களது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்களா? வரலட்சுமி என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கிஷோர் வழக்கமான தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி தனது இடத்தை தக்கவைத்துக் கொள்கிறார். சத்யராஜ் ஒரு போலீஸ் அதிகாரிக்கு உண்டான மிடுக்குடனும், தனக்கே உரித்தான நக்கலுடனும், மகள் மீது பாசம் காட்டுவதில் அப்பாவாகவும் அசத்தியிருக்கிறார்.



    தனது ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி இந்த படத்திலும் தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். விவேக் ராஜகோபாலின் நடிப்பு கவரும்படியாகவே இருக்கிறது. தனது உடல்மொழிகளால் அனைவரையும் ஈர்க்கிறார். யோகி பாபு வரும் காட்சிகள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. அனைவருமே அவர்களது கதாபாத்திரத்தை நிறைவாகவே செய்து இருக்கிறார்கள்.

    ஒரே நாள், அதிகபட்சமாக இரண்டே இடங்கள், பிரதானமாக ஐந்து கதாபாத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு நிறைவான திரைப்பட அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் சர்ஜுன்.கே.எம். தான் எடுத்துக்கொண்ட கதையை அதன் களத்தில் அழகாகப் பொருத்திப் பார்வையாளருக்குத் தெளிவாகக் கடத்தியிருக்கும் இயக்குநருக்குப் பாராட்டுகள். குறும்படங்கள் மூலம் தனது திறமையை காட்டிவந்த சர்ஜுன் தற்போது முழு நீள படத்திலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். எனினும் முதல் பாதியில் வேகமாக செல்லும் படத்தை, இரண்டாம் பாதியின் மெதுவான திரைக்கதை பாதிக்கிறது. அனைவருமே தவறான வழியில் சம்பாதிக்க நினைப்பதையே திரைக்கதையாக நகர்கிறது. கருத்து பழையதாக இருந்தாலும் அதை சொன்ன விதத்தில் கவர்கிறார் இயக்குனர் சர்ஜுன்.



    நீ புத்திசாலி என்றால் நான் முட்டாள் இல்லை என்று உனக்குத் தெரியும், ஒரு முறைதான் தப்பு பண்ணிணேன். மறுபடியும் அந்தத் தப்பைப் பண்ண மாட்டேன், ஜெயில் வாழ்க்கை நிறைய மாத்திருக்கு. அது எல்லாத்தையும் சுக்குநூறா உடைச்சுருச்சு என வசனங்கள் நச்சென்று இருக்கின்றன. 

    கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பாடல், பின்னணி இசை ஆகியவை படத்தை மெருகேற்றுகின்றன. சுதர்‌ஷன் ஸ்ரீநிவாசன் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.

    மொத்தத்தில் `எச்சரிக்கை' விறுவிறுப்பு.

    வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் முன்னோட்டம். #VadaChennai #Dhanush
    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை'. 

    வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    இசை - சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பு - ஜி.பி.வெங்கடேஷ், ஆர்.ராமர், ஒளிப்பதிவு - வேல்ராஜ், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், கலை இயக்குனர் - ஜாக்கி, சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் - ராபர்ட், ஆடை வடிவமைப்பு - அமிர்தா ராம், தயாரிப்பு - தனுஷ், தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.பி.சொக்கலிங்கம், தயாரிப்பு நிறுவனம் - வுண்டர்பார் பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - வெற்றிமாறன்.

    மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் டீசர், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. படத்தை அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் முதல் பாகம் ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில், படத்தின் இசை குறித்து சந்தோஷ் நாராயணன் மனம் திறந்துள்ளார். #VadaChennai #Dhanush
    தனுஷ் - வெற்றிமாறன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் `வடசென்னை'. மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின்
     முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூலை 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

    இந்த நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல்களை இசையமைத்து முடித்துவிட்டதாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,

    `வடசென்னை படத்திற்கு இசையமைத்து முடித்துவிட்டேன். வெற்றிமாறனின் இந்த பிரம்மாண்ட படைப்பில் நானும் ஒருவனாக இருப்பதை கவுரவமாக நினைக்கிறேன். படத்திற்காக கடுமையாக உழைத்த நடிகர் தனுஷுக்கு வாழ்த்துக்கள். துடிப்பும், வேடிக்கையும் அடங்கிய ஏரியா குத்து பாடல்களுடன் திரும்ப வருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்'. என்று கூறியிருக்கிறார். 

    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். முக்கிய கதபாத்திரங்களில் அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட்டில் வெளியாக இருக்கிறது. #VadaChennai #Dhanush

    விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கோலிசோடா-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்டண்ட் சிவா, இந்த படத்தின் மூலமாக நடிகனாகும் ஆசை நிறைவேறிவிட்டதாக கூறியிருக்கிறார். #GoliSoda2 #StuntSiva
    விஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா, ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் கோலிசோடா-2. 

    இந்த படத்தில் சாதி சங்க தலைவராக நடித்து இருந்தவர் ஸ்டண்ட் சிவா. படத்தில் நடித்தது பற்றி சிவா கூறும்போது ‘சண்டை பயிற்சியாளராக காதலுக்கு மரியாதை தான் முதல் படம். சேது, நந்தா, பிதாமகன் உட்பட பல படங்களில் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்து இருக்கிறேன். என் படங்களில் சண்டைக்காட்சிகள் மிகவும் இயல்பாக இருக்கும். 



    வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் ஹாசனின் கண்ணை கேட்கும் கதாபாத்திரம் தான் நடிகராக முதல் படம். தொடர்ந்து சில படங்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். நடிப்பதற்காக தான் சினிமாவுக்குள் வந்தேன். அது நிறைவேறி இருப்பதோடு பாராட்டுகளும் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். இவரது மகன்கள் இருவரும் கராத்தே சாம்பியன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #GoliSoda2 #StuntSiva

    விஜய் மில்டனிடம் விளையாட்டாக சொன்னதை, சீரியஸாக எடுத்து கொண்டு, தன்னை, பரத் சீனிக்கு ஜோடியாக அழுத்தமான கதபாத்திரத்தில் நடிக்க வைத்ததாக ‘கோலிசோடா-2’ படத்தில் நடித்துள்ள சுபிக்‌ஷா கூறியிருக்கிறார். #GoliSoda2
    விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கோலிசோடா-2’. சமுத்திரகனி, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹிணி, ஸ்டன்ட் சிவா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

    படத்தில் நாயகியாக நடித்துள்ள சுபிக்‌ஷா கூறும்போது, 

    "கடுகு படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறியது என்றாலும், எனக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. ரசிகர்கள் என்னை கடுகு சுபிக்‌ஷா என்று அழைத்தது மகிழ்ச்சியாக இருந்தது, மீண்டும் விஜய் மில்டன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் என நினைத்தேன். ஆனால் உடனடியாக அந்த வாய்ப்பு என் வீட்டு கதவை தட்டும்  என நான் எதிர்பார்க்கவேயில்லை.

    படத்தில் என் கதாபத்திரத்தின் பெயர் இன்பவல்லி, பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு ஜாலியான கதாபாத்திரம். படத்தை பற்றியும், என் கதாபாத்திரத்தை பற்றியும் விவாதிக்கும் போது விஜய் மில்டன் சார், இயல்பாக நடித்தாலே போதும், எந்த முன் தயாரிப்பு வேலையும் அந்த கதாப்பாத்திரத்துக்கு தேவையில்லை என்றார்.



    பாரத் சீனிக்கு ஜோடியாக நடிப்பது பற்றி கூறும் சுபிக்‌ஷா, கடந்த முறை கடுகு படத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு சில காட்சிகளே இருந்தன, அதை பற்றி நான் விஜய் மில்டன் சாரிடம் சொன்னேன். அதை விஜய் மில்டன் சீரியஸாக எடுத்து கொண்டார் போல, கோலி சோடா-2 படத்திலும் எங்களை நடிக்க வைத்து, எனக்கும் பாரத் சீனிக்கும் அழுத்தமான காட்சிகளை கொடுத்திருக்கிறார். பாரத் சீனி ஆக்‌ஷன் காட்சிகளை விட, காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

    கோலி சோடா 2 உலகம் முழுவதும் வரும் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகிறது. ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பாரத் சீனி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். ஏற்கனவே வெளியான ப்ரோமோ காட்சிகளில் சுப்ரீம் சுந்தர் வடிவமைத்த சண்டைக்காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. அச்சு இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார், குறிப்பாக பொண்டாட்டி பாடல் கோலி சோடா படத்தின் சுவையை கொண்டு வந்திருக்கிறது.​ #GoliSoda2 #Subhiksha

    விஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலிசோடா-2’ படத்தின் முன்னோட்டம். #GoliSoda2
    ரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘கோலிசோடா-2’.

    இதில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா,ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

    இசை - அச்சு, எடிட்டிங் - தீபக், ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், கலை - ஜனார்த்தனன், பாடல்கள் - மதன் கார்க்கி, மணி அமுதவன், தயாரிப்பு - பரத்சீனி, ஒளிப்பதிவு, இயக்கம் - எஸ்.டி.விஜய் மில்டன்.



    படம் பற்றி கூறிய இயக்குனர்....

    “ இந்த படத்தில் சமுத்திரகனி, கிஷோர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்த கதையில் புதுமுகங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    கவுதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த கதையை நான் எழுதும் போதே அவரை மனதில் வைத்து ஒரு பாத்திரத்தை உருவாக்கினேன். இது ஒரு கவுரவ பாத்திரமாக இருந்தாலும் கதையை முன்நோக்கி கொண்டு செல்லும் பாத்திரம். படத்தில் அவர் நடித்தது பெரும் மகிழ்ச்சி. நான் நினைத்ததைவிட ‘கோலி சோடா-2’ சிறப்பாக உருவாகி இருக்கிறது” என்றார். #GoliSoda2

    விஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலிசோடா-2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. #Golisoda2
    ரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கோலிசோடா-2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக இயக்குநர் விஜய் மில்டன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
    தயாரிப்பாளர் சங்கத்தின் முதற்முயற்சியை கருத்தில் கொண்டு படத்தை அடுத்த மாதம் அதாவது, ஜூன் 14-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று விஜய் மில்டன் கூறியிருக்கிறார். 

    கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகிய ‘கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா, ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 



    அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு அச்சு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை கிளப்போர்ட்டு நிறுவனம் சார்பில் வி.சத்யமூர்த்தி வெளியிடுகிறார். #Golisoda2 

    ×