என் மலர்
சினிமா

தள்ளிப்போன கோலிசோடா-2 ரிலீஸ்
விஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலிசோடா-2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. #Golisoda2
ரஃப் நோட் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கோலிசோடா-2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக இயக்குநர் விஜய் மில்டன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் முதற்முயற்சியை கருத்தில் கொண்டு படத்தை அடுத்த மாதம் அதாவது, ஜூன் 14-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று விஜய் மில்டன் கூறியிருக்கிறார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகிய ‘கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா, ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு அச்சு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை கிளப்போர்ட்டு நிறுவனம் சார்பில் வி.சத்யமூர்த்தி வெளியிடுகிறார். #Golisoda2
Next Story






