search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanyakumari bhagavathi amman temple"

    • பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.
    • அம்மனுக்கு பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும், அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

    ஸ்ரீபலி பூஜையும், 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், அம்மனுக்கு பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகமும், இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • 60 நாட்கள் தினமும் அம்மனுக்கு ‘பானக்காரம்’ படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
    • அம்மனுக்கு படைக்கப்பட்ட பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருப்பதற்காக பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதங்கள் அம்மனுக்கு 'பானக்காரம்' என்ற குளிர் பானம் நைவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த 'பானக்காரம்' எலுமிச்சம்பழம், சர்க்கரை, ஏலம், சுக்கு மற்றும் புளி ஆகியவற்றால் தயாரிக்கப்படும்.

    இந்த குளிர்பானத்தை கோடை காலத்தில் அருந்தினால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருக்கும். இந்த ஆண்டு நேற்று முதல் தொடர்ந்து 60 நாட்கள் தினமும் மாலை 4 மணிக்கு அம்மனுக்கு 'பானக்காரம்' என்ற குளிர்பானம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை முடிந்ததும் அம்மனுக்கு படைக்கப்பட்ட பானக்கார குளிர்பானம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை அருந்தினால் வெப்பம் சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    • சிவராத்திரிவிழாவையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழக்கம் போல் உள்ள அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    அதன் பிறகு மகா சிவராத்திரிவிழாவை யொட்டி நள்ளிரவு 12 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜையும், 12.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், அதிகாலை 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், 1.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது. ஒவ்வொரு கால பூஜையின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    மீண்டும் அதிகாலை 4.30 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது.
    • நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்இந்த ஆண்டுக்கான தை மாத நிறைபுத்தரிசி பூஜை வருகிற 5-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடக்கிறது. இதையொட்டி அன்றுஅதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக் கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    பின்னர் அந்த நெற்கதிர் கட்டுகளை கோவில் மேல் சாந்தி தலையில் சுமந்தபடி மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் அந்த நெற்கதிர் கட்டுகளை பகவதி அம்மன் முன் நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைகளை கோவில் மேல் சாந்திகள் நடத்துகிறார்கள்.

    சிறப்பு பூஜை முடிந்தபிறகு நெற்கதிர்கள்அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த நெற்கதிர்களை பக்தர்களுக்குகோவில் மேல்சாந்தி வழங்குகிறார்.

    நிறை புத்தரிசி பூஜை வழிபாட்டுடன் கோவிலில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங் கார தீபாராதனை, உஷ பூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை போன்றவை நடக்கிறது. மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவிலின் உள் பிரகாரத் தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை ஆகியவை நடக்கிறது. நிறைபுத்தரிசி பூஜையை யொட்டி பகவதி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல்மூக்குத்திமற்றும் திருவாபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன்அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைகுமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

    • அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது.
    • அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல நேற்று மார்கழி திருவாதிரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

    இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும், 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், காலை 6.15 மணிக்கு தீபாராதனையும், 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜையும், 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜையும், அலங்கார தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 6.45 மணிக்கு அம்மனுக்கு கொலு மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.

    இதையொட்டி உற்சவ அம்பாளை பல வண்ண மலர்களால் அலங்கரித்து கோவில் மூலஸ்தானத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து உற்சவ அம்பாளை கொலு மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளச் செய்தார்கள். ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மனுக்கு மலர் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், தீபாராதனை, தாலாட்டு நிகழ்ச்சி நடந்து.

    இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம்வரச் செய்யும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாள பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • அம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
    • அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை நட்சத்திரம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வருகிறது. இதையொட்டி அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகிறது.

    அதைத் தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், காலை 6.15 மணிக்கு தீபாராதனையும் 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜையும், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி, தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 6.45 மணிக்கு அம்மனுக்கு கொலு மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.

    இதையொட்டி உற்சவ அம்பாளை பல வண்ண மலர்களால் அலங்கரித்து கோவில் மூலஸ்தானத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து உற்சவ அம்பாளை கொலு மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளச் செய்கிறார்கள். பின்னர் அம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம்வரச் செய்யும் நிகழ்ச்சியும், பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அம்மன் பாதத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. காலை 10 மணிக்கு அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு உச்சிகால பூஜையும், உச்சிகால தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு கோவில் மேல்சாந்தி மேளதாளத்துடன் தனிப்படகில் சென்று விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள அம்மன் பாதத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 9 மணிக்கு கன்னியாகுமரி சன்னதி தெருவில் பனை ஓலைகளால் வேயப்பட்ட சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10 மணிக்கு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து வருடத்தில் 5 முறை மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    • கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
    • வருகிற 17-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை4.30மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. அன்று முதல் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை வழிபடுவது வழக்கம்.

    இதனால் அன்று முதல் கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க கோவிலின் நடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    அதன்படி வருகிற 17-ந்தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசனையொட்டி பக்தர்களின் தரிசனத்துக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை மதியம் 1 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப்படுகிறது.

    • இன்று மாலை 4 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.
    • இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்ம னை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும். இந்த நிலையில் இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திரகிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தானகருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை 4 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவதற்கு பதிலாக 3¾ மணி நேரம் தாமதமாக இரவு 7.45 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சந்திர கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணி யால் மூடி வைக்கப்படுகிறது.

    சந்திர கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்க ப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    • சிறப்பு வழிபாடுகள் நடத்தி கடலில் அம்மனை ஆராட்டினா்.
    • ஆயிரணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் கடந்த 26-ந்தேதி நவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் அபிஷேகம், விசேஷ பூஜைகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.

    நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் அம்மன் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி பகவதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் பரிவேட்டை மண்டபத்தை அடைந்து பாணாசூரனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து பகவதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, உற்சவ அம்பாள் சிலையை ஆராட்டு மண்டபத்தில் வைத்து அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி கடலில் அம்மனை ஆராட்டினா்.

    அதைதொடர்ந்து வருடத்தில் முக்கியமான ஐந்து விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    • அம்மனுக்கு 8 வகையான திரவியங்களாலும், புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலையில் சமய உரை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், இரவில் வாகன பவனி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.

    இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், சந்தனம், களபம் உள்ளிட்ட 8 வகையான திரவியங்களாலும், புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், காலை 10 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைதொடர்ந்து 10.30 மணிக்கு அன்னதானம், பகல் 11.30 மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் பக்தர்கள் புடைசூழ தொடங்கியது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும்போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், ஒன்றிய செயலாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் கோவிலில் இருந்து புறப்படும் அம்மனின் பரிவேட்டை ஊர்வலத்தில் யானை, குதிரை, முத்துக்குடை ஊர்வலம், நாதஸ்வரம், பஞ்ச வாத்தியம், செண்டை மேளம், தேவராட்டம், கோலாட்டம், கேரளா புகழ் தெய்யம் ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவை நடைபெற்றது.

    பரிவேட்டை ஊர்வலம் மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைந்தது. அங்கு பகவதி அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி குதிரை வாகனத்தை வேட்டை மண்டபத்தை சுற்றி 3 முறை வலம் வரச்செய்து வாகனத்தை கிழக்கு நோக்கி நிறுத்தி வைத்தனர்.

    பின்னர், பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, கோவில் மேல்சாந்தி வேட்டை மண்டபத்துக்கு உள்ளே 4 பக்கமும் அம்பு எய்தார். அதன்பிறகு வேட்டை மண்டபத்துக்கு வெளியே 4 திசையை நோக்கி அம்புகளை எய்தார். இறுதியாக ஒரு இளநீரின் மீது அம்பு எய்தார். அம்பு பாய்ந்த இளநீரை கோவில் ஊழியர் ஒருவர் கையில் ஏந்தியபடி அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க ஓடி வலம் வந்தார். இந்த நிகழ்வானது பாணாசுரன் என்ற அரக்கனை அம்மன் அம்பு எய்து வதம் செய்து அழித்ததாக கருதப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து பரிவேட்டை நிகழ்ச்சி முடிந்ததும் மகாதானபுரத்தில் உள்ள நவநீதசந்தான கோபாலகிருஷ்ணசாமி கோவிலுக்கு முன்பு சென்று நின்றார். அங்கு பகவதி அம்மனுக்கும், நவநீதசந்தான கோபால கிருஷ்ணசாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடந்தது. பின்னர், அம்மன் வாகன பவனி மகாதானபுரம் மற்றும் பஞ்சலிங்கபுரம் பகுதிக்கு வந்தது.

    பின்னர், அம்மன் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்காரமடத்தில் சிறிது ஓய்வுக்கு பின் வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைதொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய நாட்கள் மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • 11.30 மணிக்கு அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் தொடங்குகிறது.
    • இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலையில் சமய உரை, கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், இரவில் வாகன பவனி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் திருவிழாவான இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம்பழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    11.30 மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் தொடங்குகிறது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும் போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் கோவிலில் இருந்து புறப்படும் அம்மனின் பரிவேட்டை ஊர்வலத்தில் யானை, குதிரை, முத்துக்குடை ஊர்வலம், நாதஸ்வரம், பஞ்ச வாத்தியம், செண்டை மேளம், தேவராட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் ஆகியவை நடைபெறும்.

    இந்த ஊர்வலம் மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்றடைகிறது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை காண அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருப்பார்கள்.

    இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் மகாதானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபால கிருஷ்ணசாமி கோவிலுக்கு பகவதி அம்மன் செல்கிறார். அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடக்கிறது. அதன் பிறகு அம்மனின் வாகன பவனி மகாதானபுரம் கிராமம் மற்றும் பஞ்சலிங்கபுரம் பகுதிக்கு சென்று விட்டு மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்கார மடத்துக்கு செல்கிறார்.

    அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய நாட்கள் மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகிறது. பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாகர்கோவில், கொட்டாரம், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து பரிவேட்டை திருவிழா நடக்கும் மகாதானபுரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி, அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பஞ்சலிங்கபுரம் ஊராட்சி சார்பில் சுகாதார வசதிகள் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    ×