கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 'பானக்காரம்' படைத்து சிறப்பு பூஜை

60 நாட்கள் தினமும் அம்மனுக்கு ‘பானக்காரம்’ படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.அம்மனுக்கு படைக்கப்பட்ட பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 'பானக்காரம்' படைத்து சிறப்பு பூஜை
Published on

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருப்பதற்காக பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதங்கள் அம்மனுக்கு 'பானக்காரம்' என்ற குளிர் பானம் நைவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த 'பானக்காரம்' எலுமிச்சம்பழம், சர்க்கரை, ஏலம், சுக்கு மற்றும் புளி ஆகியவற்றால் தயாரிக்கப்படும்.

இந்த குளிர்பானத்தை கோடை காலத்தில் அருந்தினால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருக்கும். இந்த ஆண்டு நேற்று முதல் தொடர்ந்து 60 நாட்கள் தினமும் மாலை 4 மணிக்கு அம்மனுக்கு 'பானக்காரம்' என்ற குளிர்பானம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை முடிந்ததும் அம்மனுக்கு படைக்கப்பட்ட பானக்கார குளிர்பானம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை அருந்தினால் வெப்பம் சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com