search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kane Williamson"

    தொடரை தீர்மானிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆகியுள்ளது. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அபு தாபியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. தபாயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் துபாயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    ராவல், லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லாதம் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ராவல் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராவல் 45 ரன்கள் எடுத்தும், கேன் வில்லியம்சன் 89 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.


    ஐந்து விக்கெட் வீழ்த்திய பிலால் ஆசிப்

    விக்கெட் கீப்பர் வாட்லிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. வாட்லிங் 42 ரன்னுடனும், சோமர்வில் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சோமர்வில் நேற்று எடுத்திருந்த 12 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பட்டேல் 6 ரன்னிலும், போல்ட் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் அரைசதம் அடித்த வாட்லிங் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 116.1 ஓவர்கள் விளையாடி 274 ரன்னில் ஆல்அவுட் ஆனது.


    பிலால் ஆசிப் பந்தில் சோமர்வில் க்ளீன் போல்டாகிய காட்சி

    பாகிஸ்தான் அணி சார்பில் பிலால் ஆசிப் 5 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் பாகிஸ்தான் முதல் இனிங்சை தொடங்கியது. 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசியாக விளையாடிய 20 ஐபிஎல் போட்டிகளில் 10 முறை அரைசதம் அடித்துள்ளார். #IPL2018 #VIVOIPL #KaneWilliamson

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

    நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் 42 பந்தில் 81 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஆனால் அவரை ஐதராபாத் அணியை வெற்றிபெற செய்ய முடியவில்லை. இதன்மூலம் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் அவர் அரைசதத்தை கடந்துள்ளார்.

    அதோடு ஐபிஎல் போட்டிகளில் அவர் கடைசியாக விளையாடிய 20 போட்டிகளில் 10 முறை அரைசதம் அடித்துள்ளார். கடைசி 20 ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த ரன்கள் வருமாறு: 89, 21, 54*, 40, 24, 4, 24, 36*, 6, 50, 54, 84, 29, 0, 63, 32*, 56, 83*, 51, 81. #IPL2018 #VIVOIPL #KaneWilliamson
    புனேயில் நடைபெற்று வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #CSKvSRH
    சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 46-வது ஆட்டம் புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹேல்ஸ் 2 ரன்கள் எடுத்த நிலையில் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து தவான் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் கடந்தனர். அணியின் ஸ்கோர் 16 ஓவரில் 141 ரன்னாக இருக்கும்போது தவான் 49 பந்தில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 17-வது ஓவரின் முதல் பந்தில் கேன் வில்லியம்சன் 39 பந்தில் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தது.



    அடுத்து வந்த மணிஷ் பாண்டே 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. பிராவோ வீசிய கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுக்க 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 50 பந்தில் 92 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்த தவானுக்கு கேன் வில்லியம்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். #IPL2018 #DDvSRH
    ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

    பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தவான் (92), கேன் வில்லியம்சன் (83) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஷிகர் தவான் 50 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் கேன் வில்லியம்சன் அவரை பாராட்டியுள்ளார்.



    போட்டிக்குப்பின் கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘பேட்டிங்கில் எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தினோம். எதிரணியை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினோம். ஆனால் அது எப்போதுமே கடினமாக இலக்கு. முதல் பாதி ஆட்டத்தின்போது ஆடுகளம் கடினமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடினார்.



    ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. இதில் நல்ல உத்வேகம் கிடைத்தது. ஷிகர் தவான் பேட்டிங் அபாரமாக இருந்தது. அவர் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தை வெளிக்காட்டினார்’’ என்றார்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்கள் ரோட்டின் விளையாடவில்லை. கடினமான ஆடுகளத்தில் விளையாடுகிறார்கள் என டாம் மூடி குறிப்பிட்டுள்ளார். #IPL2018 #SRH
    ஐபிஎல் 2018 சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 ஆட்டத்தில பங்கேற்று 8-ல் வெற்றி வகை சூடியுள்ளது.

    சொந்த மைதானமான ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஜொலித்து வருகிறது. இங்கு 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஐந்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி பெரிய ஸ்கோர் ஏதும் எடுக்கவில்லை. 150 முதல் 160 ரன்களுக்குள் எடுத்து எதிரணியை சிறப்பாக மடக்கி வெற்றி பெற்றுள்ளது. அல்லது எதிரணியை 150-க்குள் மடக்கி சேஸிங் செய்துள்ளது.

    மும்பை வான்கடே மைதானத்தில் 118 ரன்னில சுருண்டது. ஆனால், மும்பையை 87 ரன்னுக்குள் சுருட்டி 31 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. அந்த அணி குறைவான ஸ்கோர்தான் அடிக்கிறது. பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதில்லை என்ற விமர்சன் வந்து கொண்டுதான் இருக்கிறது.



    இந்த விமர்சனத்திற்க அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான டாம் மூடி தக்க பதிலடி கொடுத்துள்ளார். ‘‘நாங்கள் ரோட்டின் மீது விளையாடவில்லை. கடுமையான ஆடுகளத்தில் விளையாடுகிறோம். மோசமானதாக கருதப்படும் 20 முதல் 30 ரன்கள் மதிக்கத்தக்க ஸ்கோர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    சென்னைக்கு எதிராக 183 ரன்னை சேஸிங் செய்யும்போது 178 ரன்கள் எடுத்து 4 ரன்னில் தோல்வியை சந்தித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி 178 ரன்கள் சேர்த்து 15 ரன்னில் தோற்றது. சேஸிங்கில்தான் இரண்டு தோல்விகளையும் சந்தித்துள்ளது.
    ×