என் மலர்
நீங்கள் தேடியது "half century"
- ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
- விராட் கோலி அரைசதம் டி20 கிரிக்கெட்டில் அவரது 100-வது அரைசதமாகப் பதிவானது.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 173 ரன்கள் அடித்தது.
பெங்களூரு சார்பில் ஹேசில்வுட், குருணால் பாண்ட்யா, யாஷ் தயாள் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 17.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 175 ரன்கள் அடித்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பில் சால்ட் 65 ரன்னும், விராட் கோலி 62 ரன்னும், படிக்கல் 40 ரன்னும் அடித்தனர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் விராட் கோலி அடித்த அரைசதம் டி20 கிரிக்கெட்டில் அவரது 100-வது அரைசதமாகப் பதிவானது.
இதன்மூலம் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்தார். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 108 அரைசதங்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
- முதலில் பேட் செய்த கனடா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து வென்றது.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், கனடா அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த கனடா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் முகமது அமீர், ஹரிஸ் ராப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முகமது ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 33 ரன் எடுத்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அரைசதம் அடிக்க 52 பந்துகளை எடுத்துக்கொண்டார். இதன்மூலம் அவர் மோசமான சாதனையை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மெதுவான அரைசதம் (பந்துகள் அடிப்படையில்) அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை ரிஸ்வான் (52 பந்துகள்) படைத்தார். இதற்கு முன் இந்தப் பட்டியலில் டேவிட் மில்லர் (50 பந்துகள் - நெதர்லாந்துக்கு எதிராக, 2024) முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






