என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

கடைசி 20 ஐபிஎல் போட்டிகளில் 10 அரைசதம் அடித்து அசத்திய கேன் வில்லியம்சன்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடைசியாக விளையாடிய 20 ஐபிஎல் போட்டிகளில் 10 முறை அரைசதம் அடித்துள்ளார். #IPL2018 #VIVOIPL #KaneWilliamson
பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் 42 பந்தில் 81 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஆனால் அவரை ஐதராபாத் அணியை வெற்றிபெற செய்ய முடியவில்லை. இதன்மூலம் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் அவர் அரைசதத்தை கடந்துள்ளார்.
அதோடு ஐபிஎல் போட்டிகளில் அவர் கடைசியாக விளையாடிய 20 போட்டிகளில் 10 முறை அரைசதம் அடித்துள்ளார். கடைசி 20 ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த ரன்கள் வருமாறு: 89, 21, 54*, 40, 24, 4, 24, 36*, 6, 50, 54, 84, 29, 0, 63, 32*, 56, 83*, 51, 81. #IPL2018 #VIVOIPL #KaneWilliamson
Next Story






