என் மலர்

  நீங்கள் தேடியது "Shikar Dhawan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க கேப்டன் கேசவ் மகராஜூக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
  • பனிபொழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை என கேசவ் மகராஜூ கூறினார்.

  ராஞ்சி:

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

  ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 279 ரன் இலக்காக இருந்தது.

  மார்க்ராம் 79 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஹென்ட்ரிக்ஸ் 74 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்), டேவிட் மில்லர் 35 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். முகமது சிராஜ் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

  பின்னர் விளையாடிய இந்திய அணி 279 ரன் இலக்கை 25 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் எளிதில் எடுத்தது. இந்தியா 45.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 282 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்தார். அவர் 111 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 113 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இஷான் கிஷன் 84 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 93 ரன் எடுத்தார்.

  இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 161 ரன் எடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும். சஞ்சு சாம்சன் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 30 ரன் (அவுட் இல்லை) எடுத்தார்.

  வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-

  பந்து ஆடுவதற்கு ஏற்ற வகையில் நன்றாக வந்தது. ஆனால் அதே நேரத்தில் அது அளவை விட மிக குறைவாகவே இருந்தது. இதனால் முதல் 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்களை வீழ்த்துவதே எங்கள் திட்டமாக இருந்தது. இந்த திட்டம் பலித்தது.

  சரியான நேரத்தில் பனிபொழிவு ஏற்பட்டது. இது பேட்டிங்குக்கு ஏற்றதாக இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க கேப்டன் கேசவ் மகராஜூக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

  இஷான் கிஷனும், ஸ்ரேயாஸ் அய்யரும் அபாரமாக பேட்டிங் செய்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியவிதம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.அறிமுக வீரர் ஷபாஸ் முதல் 10 ஓவர்களில் நேர்த்தியாக வீசி திருப்பு முனையை ஏற்படுத்தியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்க தற்காலிக கேப்டன் கேசவ் மகராஜ் கூறும் போது, பனிபொழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.அதனால் 'டாஸ்' வென்ற பிறகு பேட்டிங்கை தேர்வு செய்தோம். ஆனால் ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பனியின் தாக்கத்தால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக மாறி விட்டது என்றார்.

  இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பழி தீர்த்துக் கொண்டது. லக்னோவில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.

  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லியில் நாளை நடக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதலில் விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்கள் குவித்தார்.
  • வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 75 ரன்கள் அடித்தார்.

  டிரினிடாட்:

  இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு அணியுடன் இந்தியா பங்கேற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

  டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ஷுப்மான் கில் ஆகியோர் ஆரம்பம் முதல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

  முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்கள் சேர்த்தது. அரை சதமடித்த ஷுப்மான் கில் 64 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 54 ரன்கள் அடித்தார்.

  தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 13 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அக்சர் படேல் 21 ரன்னிலும், தீபக் ஹூடா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்தது.

  இதையடுத்து, 309 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீரர் ஹோப் 7 ரன்னுக்கு வெளியேற, சிறப்பாக விளையாடி 75 ரன்கள் குவித்த கைல் மேயர்ஸ் ஆட்டமிழந்தார். ஷமர் ப்ரூக்ஸ் 46 ரன்களும், பிராண்டன் கிங் 54 ரன்களும் அடித்தனர். கேப்டன் பூரன் 25 ரன்கள் எடுத்தார்.

  பாவெல் 6 ரன்னுடன் வெளியேற, பின்னர் ஜோடி சேர்ந்த அகேல் ஹோசின், ரொமாரியோ ஷெப்பர்டும் அணியின் வெற்றிக்கு போராடினர். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 12 ரன்கள் அடித்தது.

  50 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்ததால், இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஹோசின் 32 ரன்னுடனும், ஷெப்பர்ட் 38 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் சிராஜ், தாக்கூர், சாகல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்னில் அவுட்டானார்.
  • மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 64 ரன்னில் வெளியேறினார்.

  டிரினிடாட்:

  இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

  அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் இறங்கினர். ஆரம்பம் முதல் இருவரும் அதிரடியாக ஆடினர். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

  ஷுப்மான் கில் முதலில் அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்கள் சேர்த்தது.

  சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யரும் அரை சதமடித்து 54 ரன்னில் வெளியேறினார்.

  தொடர்ந்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 13 ரன், சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அக்சர் படேல் 21 ரன்னிலும், தீபக் ஹூடா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

  இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 309 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது.
  • ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

  புதுடெல்லி:

  ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற பல வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், மிடில் ஆர்டர் பேட்டிங், ஸ்பின் காம்பினேஷன், வேகப் பந்துவீச்சு என அனைத்தும் உறுதியாகிவிட்டது.

  சூர்யகுமார் யாதவ் - ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோரிடையே 4ம் வரிசை பேட்டிங்கிற்கான போட்டி நிலவுகிறது.

  மேலும், ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பிவரும் வேளையில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிவருவதால் விக்கெட் கீப்பர் யார் என்பதும் கேள்வியாக உள்ளது.

  இந்நிலையில், தொடக்க வீரரான ஷிகர் தவானுக்கு டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

  இதுதொடர்பாக பேசிய சுனில் கவாஸ்கர், ஷிகர் தவான் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. டி20 உலக கோப்பைக்கான அணியில் ஷிகர் தவானை எடுப்பதாக இருந்திருந்தால் இங்கிலாந்து தொடரிலாவது அவர் இடம்பெற்றிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இல்லை. எனவே டி20 உலக கோப்பைக்கான அணியில் அவருக்கு இடம் இருக்காது. என்னைப் பொறுத்தமட்டில் ரோகித்தும் கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்திய தொடக்க ஜோடியான தவான் - லோகேஷ் ராகுல் இரண்டு இன்னிங்சிலும் 60 ரன்கள் சேர்த்தது அரிய நிகழ்வாகும். #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜ்-யில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகளம் ஸ்விங்கிற்கு அதிக அளவில் ஒத்துழைக்கும்.

  இதனால் தொடக்க ஜோடியான ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரது பந்து வீச்சை எப்படி தாக்குப்பிடிப்பார்கள்? என்ற பயம் இருந்தது. ஆனால் இருவரும் 18.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 60 ரன்கள் சேர்த்தனர்.

  சுமார் 19 ஓவர் தாக்குப் பிடித்ததால் அதன்பின் வந்த ரகானே, விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா 329 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 35 ரன்களும், லோகேஷ் ராகுல் 23 ரன்களும் சேர்த்தனர்.

  அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. 168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்த இன்னிங்சிலும் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

  இந்த இன்னிங்சிலும் இருவரும் 11.2 ஓவர்கள் தாக்குப்பிடித்து முதல் விக்கெட்டுக்கு சரியாக 60 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் இரண்டு இன்னிங்சிலும் தொடக்க தவான் - லோகுஷ் ராகுல் ஜோடி ஒரே ரன்கள் எடுத்த அரிய நிகழ்வு நடைபெற்றது. 2-வது இன்னிங்சில்  தவான் 44 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ரன்களும் சேர்த்தனர்.  இதற்கு முன் இந்த அரிய நிகழ்வு இரண்டு முறை நடந்துள்ளது. 2008-ம் ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கல்லீஸ் - ஏபி டி வில்லியர்ஸ் ஜோடி முதல் இன்னிங்சிலும், 2-வது இன்னிங்சிலும் தலா 124 ரன்கள் சேர்த்திருந்தது.

  2009-ம் ஆண்டு சிட்னியில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஹெய்டன், காடிச் ஆகியோர் இரண்டு இன்னிங்சிலும் 62 ரன்கள் எடுத்திருந்தனர். அதன்பின் தற்போது தவான் - லோகேஷ் ராகுல் ஜோடி 60 ரன்கள் எடுத்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புனேயில் நடைபெற்று வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #CSKvSRH
  சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 46-வது ஆட்டம் புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார்.

  அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹேல்ஸ் 2 ரன்கள் எடுத்த நிலையில் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார்.

  அடுத்து தவான் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் கடந்தனர். அணியின் ஸ்கோர் 16 ஓவரில் 141 ரன்னாக இருக்கும்போது தவான் 49 பந்தில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 17-வது ஓவரின் முதல் பந்தில் கேன் வில்லியம்சன் 39 பந்தில் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தது.  அடுத்து வந்த மணிஷ் பாண்டே 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. பிராவோ வீசிய கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுக்க 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

  இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் 50 பந்தில் 92 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்த தவானுக்கு கேன் வில்லியம்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். #IPL2018 #DDvSRH
  ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

  பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தவான் (92), கேன் வில்லியம்சன் (83) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  ஷிகர் தவான் 50 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் கேன் வில்லியம்சன் அவரை பாராட்டியுள்ளார்.  போட்டிக்குப்பின் கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘பேட்டிங்கில் எங்களது திட்டத்தை சரியாக செயல்படுத்தினோம். எதிரணியை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினோம். ஆனால் அது எப்போதுமே கடினமாக இலக்கு. முதல் பாதி ஆட்டத்தின்போது ஆடுகளம் கடினமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடினார்.  ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது. இதில் நல்ல உத்வேகம் கிடைத்தது. ஷிகர் தவான் பேட்டிங் அபாரமாக இருந்தது. அவர் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தை வெளிக்காட்டினார்’’ என்றார்.
  ×