லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்தார் ஷிகர் தவான்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் ஷிகர் தவான் அடித்துள்ளார்.
Shikhar Dhawan
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். 38 வயதாகும் இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.

ஓய்வை அறிவித்த ஷிகர் தவானுக்கு விராட் கோலி, ரோகித் சர்மா, சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் தொடரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் இணைந்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் லெஜெண்ட்ஸ் லீக் துவங்குகிறது.

லெஜெண்ட்ஸ் லீக்கில் இணைந்தது குறித்து தவான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கிரிக்கெட் விளையாடுவதற்கான உடல் தகுதியுடன் தான் நான் இருக்கிறேன். கிரிக்கெட் என்பது என் வாழ்வின் பிரிக்கமுடியாத பகுதி. எனது கிரிக்கெட் நண்பர்களுடன் இணைந்து புதிய நினைவுகளை உருவாக்கி ரசிகர்களை மகிழ்விப்பதில் நான் ஆவலுடன் உள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com