நேபாள பிரீமியர் லீக்கில் இணைந்தார் ஷிகர் தவான்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் ஷிகர் தவான் அடித்துள்ளார்.
நேபாள பிரீமியர் லீக்கில் இணைந்தார் ஷிகர் தவான்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். 38 வயதாகும் இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார்.

இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.

இதனையடுத்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் தொடரான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், நேபாளம் நாட்டில் நடைபெறும் நேபாள பிரீமியர் லீக் தொடரில் கர்னாலி யாக்ஸ் அணியில் விளையாடுவதற்காக ஷிகர் தவான் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com