ஷிகர் தவான், ஷுப்மான் கில் அசத்தல் - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 309 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்னில் அவுட்டானார்.மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 64 ரன்னில் வெளியேறினார்.
ஷிகர் தவான்
ஷிகர் தவான்
Published on

டிரினிடாட்:

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் இறங்கினர். ஆரம்பம் முதல் இருவரும் அதிரடியாக ஆடினர். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

ஷுப்மான் கில் முதலில் அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்கள் சேர்த்தது.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யரும் அரை சதமடித்து 54 ரன்னில் வெளியேறினார்.

தொடர்ந்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 13 ரன், சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அக்சர் படேல் 21 ரன்னிலும், தீபக் ஹூடா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 309 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com