இந்தியாவின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவர்... ஷிகர் தவானை புகழ்ந்த விராட் கோலி

ஷிகர் தவான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா வாழ்த்து
shikhar dhawan - Virat Kohli
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும்.

38 வயதாகும் ஷிகர் தவான் 2010-ம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2022 ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

டெஸ்ட் போட்டியில் 2018- ம் ஆண்டுக்குப்பின் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2021-க்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.

இந்நிலையில், ஷிகர் தவானுக்கு அவரது நெருங்கிய நண்பர் விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், "ஷிகர் தவான், நீங்கள் இந்தியாவின் மிகவும் நம்பகமான தொடக்க வீரர்களில் ஒருவராக இருந்தீர்கள். நீங்கள் எண்ணற்ற நினைவுகளை எங்களுக்கு கொடுத்துள்ளீர்கள். விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வம், உங்கள் விளையாட்டுத்திறன் மற்றும் உங்களது அற்புதமான புன்னகையை நாங்கள் தவற விடுவோம். ஆனால் உங்கள் கிரிக்கெட் பாரம்பரியம் எப்போதும் வாழும்.

நீங்கள் கொடுத்த நினைவுகள், மறக்க முடியாத நிகழ்ச்சிகள் மற்றும் எப்போதும் உங்கள் இதயத்திடம் இருந்து வழிநடத்தியதற்காக நன்றி. மைதானத்திற்கு வெளியே உங்களது அடுத்த இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தினேஷ் கார்த்தி, பும்ரா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com