search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்கள் ரோட்டின்மீது விளையாடவில்லை- டாம் மூடி
    X

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்கள் ரோட்டின்மீது விளையாடவில்லை- டாம் மூடி

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்கள் ரோட்டின் விளையாடவில்லை. கடினமான ஆடுகளத்தில் விளையாடுகிறார்கள் என டாம் மூடி குறிப்பிட்டுள்ளார். #IPL2018 #SRH
    ஐபிஎல் 2018 சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 ஆட்டத்தில பங்கேற்று 8-ல் வெற்றி வகை சூடியுள்ளது.

    சொந்த மைதானமான ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஜொலித்து வருகிறது. இங்கு 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஐந்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி பெரிய ஸ்கோர் ஏதும் எடுக்கவில்லை. 150 முதல் 160 ரன்களுக்குள் எடுத்து எதிரணியை சிறப்பாக மடக்கி வெற்றி பெற்றுள்ளது. அல்லது எதிரணியை 150-க்குள் மடக்கி சேஸிங் செய்துள்ளது.

    மும்பை வான்கடே மைதானத்தில் 118 ரன்னில சுருண்டது. ஆனால், மும்பையை 87 ரன்னுக்குள் சுருட்டி 31 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. அந்த அணி குறைவான ஸ்கோர்தான் அடிக்கிறது. பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதில்லை என்ற விமர்சன் வந்து கொண்டுதான் இருக்கிறது.



    இந்த விமர்சனத்திற்க அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான டாம் மூடி தக்க பதிலடி கொடுத்துள்ளார். ‘‘நாங்கள் ரோட்டின் மீது விளையாடவில்லை. கடுமையான ஆடுகளத்தில் விளையாடுகிறோம். மோசமானதாக கருதப்படும் 20 முதல் 30 ரன்கள் மதிக்கத்தக்க ஸ்கோர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    சென்னைக்கு எதிராக 183 ரன்னை சேஸிங் செய்யும்போது 178 ரன்கள் எடுத்து 4 ரன்னில் தோல்வியை சந்தித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி 178 ரன்கள் சேர்த்து 15 ரன்னில் தோற்றது. சேஸிங்கில்தான் இரண்டு தோல்விகளையும் சந்தித்துள்ளது.
    Next Story
    ×