search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalishwari College"

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்கவிழா நடந்தது.
    • ஆங்கிலத்துறையின் இளங்கலை மற்றும் முது–கலை மாணவர்கள் பயன் பெற்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் சார்பில் ஆங்கில இலக்கிய மன்றம் நியோ ஐடோலா-2023 தொடக்கவிழா நடை–பெற்றது. விழாவுக்கு கல் லூரி முதல்வர் முனை–வர் பெ.கி.பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    இதையடுத்து மாணவ இலக்கிய மன்ற தலைவர், துணைத்தலைவர், செயலா–ளர் மற்றும் அலுவ–லக உறுப் பினர்கள் ஆகியோர் நிய–மனம் செய்யப்பட்டனர். பின்னர் துறைத்தலைவர் முனைவர் எஸ்.பெமினா வாழ்த்துரை வழங்கினார்.

    பின்னர் முழுமையான வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி நிலை என்ற தலைப்பில் ஜெய்ப்பூர் காம்காம் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவன ஆங்கில பேராசிரியர் முனை–வர் ஷாலினி சிறப்பு–ரையாற்றினார்.

    அப்போது அவர் பேசு–கையில், நேர்மறை எண்ணத் தின் பயனை விவரித்தார். மேலும் வாழ்வின் ஒவ் வொரு நிகழ்வும் நேர்ம–றை–யான விளைவு–களையே ஏற்படுத்தும் என்ற ஏற்றமிகு கருத்தினை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். முன்னதாக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை கே.பி.ஸ்வப்னா வரவேற்றார். முடிவில் உதவி பேராசிரியை என்.நாகஜோதி நன்றி கூறி–னார்.

    இந்த இலக்கிய மன்றத் தின் தொடர் நிகழ்ச்சியாக மாணவர்களின் தனித்திற–மையை வெளிப்படுத்தும் விதமாக திறனறி விழா நடைபெற்றது. மாணவர்கள் கவிதை, நாடகம், ஆடல், பாடல், மவுன நாடகம் மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஆங்கிலத்துறையின் இளங்கலை மற்றும் முது–கலை மாணவர்கள் பயன்பெற்றனர்.

    • முதலிடம் பெற்ற காளீஸ்வரி கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • கல்லூரி செயலாளர் செல்வராசன், முதல்வர் பாலமுருகன் பாராட்டினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை முதுகலை 2-ம் ஆண்டு மாணவி ஜி.சக்தி கிருபா, தமிழக அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய 2023-ம் ஆண்டிற்கான அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப்போட்டியில் பங்கேற்றார்.

    ''மானுட சேவையின் தேவை'' என்ற தலைப்பில் பேசிய அவர் மாவட்ட அளவிலான முதல் பரிசு ரூ.20 ஆயிரத்தை பெற்றார்.

    பரிசு பெற்ற மாணவி சக்தி கிருபாவை, கல்லூரி செயலாளர் செல்வராசன், முதல்வர் பாலமுருகன், ஆங்கிலத்துறைத் தலைவர் பெமினா மற்றும் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
    • தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பர பாரதி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நீதி இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கை நடத்தியது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். கேரளா பல்கலைக்கழகக் கல்லூரி இணைப் பேராசிரியர் சீனிவாசன் "காலம் தோறும் அறமுணர்த்தல் பதினென்கீழ்க்கணக்கு அறநூல்களை முன்வைத்து'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    2-ம் அமர்வில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தின் உதவிப்பேராசிரியர் கரு.முருகனும், 3-ம் அமர்வில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் முதுகலைத் தமிழ் மற்றும் தமிழாய்வு மையத் தலைவர் சிவனேசனும் பேசினர். தமிழியல் துறைத் தலைவர் அமுதா வரவேற்றார். இதில் பிற கல்லூரி மாணவர்கள் 25 பேரும், தமிழியல் துறை மாணவர்கள் 140 பேருமாக மொத்தம் 165 மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பர பாரதி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை முத்துச்சிதம்பர பாரதி மற்றும் சங்கர் உள்பட தமிழியல் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பிற கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன.
    • சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி அணியினர் முதலிடத்தை பிடித்து வெற்றி கேடயத்தை பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றத்தின் சார்பில் "வானம்பாடி 2023" என்ற தலைப்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். பேச்சு, கோலம், மருதாணிப் போட்டி, முகஓவியம், நெருப்பின்றி சமைத்தல், காய்கறிகளில் உருவம் அமைத்தல், வினாடி-வினா, மவுன நாடகம், நிலைக்காட்சி, கிராமிய நடனம் உள்ளிட்ட 10 போட்டிகள் நடந்தன.

    இதில் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 9 கல்லூரிகளில் இருந்து 220 மாணவர்கள் பங்கேற்றனர். தமிழியல் துறைத்தலைவர் அமுதா வரவேற்றார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் பொற்கொடி நன்றி கூறினார். இந்த நிகழ்வை தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் மரியசெல்வி உள்ளிட்ட தமிழியல் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைந்தனர். ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி அணியினர் முதலிடத்தை பிடித்து வெற்றி கேடயத்தை பெற்றனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடந்தது.
    • ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே காவல் துறையை அணுக வேண்டும். மாணவிகள் போட்டித்தேர்வுகளை எழுத வேண்டும் என்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி, உள் புகார்கள் குழு, மாணவர்கள் ஆலோசனைக் குழு மற்றும் மகளிர் மேம்பாட்டுப் பிரிவு ஆகிய அமைப்புகள் இணைந்து உலக மகளிர் தின விழாவை நடத்தியது. விருதுநகர் காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் ரூபாதேவி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், இலக்கை அடைவதற்கு தடைகளாக இருப்பவை அதிகம். ஆனால் எதுவுமே தடைகள் இல்லை என்பதை உணர வேண்டும். எண்ணம் இருந்தால் சாதிக்கலாம். இலக்கை கைவிடக்கூடாது. தயக்கத்தைத் தகர்த்தெறிய வேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயம் என்பதே இருக்கக் கூடாது. ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே காவல் துறையை அணுக வேண்டும். மாணவிகள் போட்டித்தேர்வுகளை எழுத வேண்டும் என்றார். கணினி பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கார் பராமரிப்பு நிறுவனத்திற்கான நேர்காணல் நடந்தது.
    • 253 மாணவர்கள் பணி நியமன ஆணையை பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் பணி அமர்வு மையத்தின் சார்பில் கோவை 5கே கார் கேர் நிறுவனத்துடன் இணைந்து நேர்காணல் நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கார் பராமரிப்பு நிறுவனத்தின் மனிதவள மேலாளர் தினேஷ் தமது நிறுவனத்தில் உள்ள பணி வாய்ப்புகள் மற்றும் பணி வாய்ப்பு பெற்ற நபர்களின் பின்னூட்ட கருத்துக்களை காணொலி காட்சியின் மூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.

    இதில் கார் பராமரிப்பு நிறுவனத்தின் முதன்மை மனிதவள மேலாளர் மணிகண்டன், பயிற்றுநர்-மனிதவள மேலாளர் ஜெயவிஜயன் ஆகியோர் பங்கேற்றனர். மாணவர்களிடம் குழு உரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நிலைகளில் நேர்காணல் நடத்தினர்.

    இதில் கல்லூரியின் பல்வேறு துறை சேர்ந்த மாணவர்கள் 560 பேர் பங்கேற்றனர். 253 மாணவர்கள் பணி நியமன ஆணையை பெற்றனர். பணி அமர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். பணி அமர்வு மையப் பொறுப்பாளர் குமாரபாலாஜி நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழிற்படிப்புகள் சார்ந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • வணிகவியல் துறை முதலாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் 228 பேர் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் தொழிற்படிப்புகள் பற்றிய வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக வணிகவியல் துறை முன்னாள் மாணவர் மணிகண்டன் பங்கேற்றார்.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், தொழிற்படிப்புகளில் எவ்வாறு வெற்றி பெறுவது? வெற்றிக்கான இலக்கை நோக்கி எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்வது? என்பது பற்றி எடுத்துரைத்தார்.

    மேலும் தொழிற்படிப்புகள் வாயிலாக வாழ்வில் பொருளாதாரத்தின் மேம்பாடுகள் பற்றிக் கூறினார். வணிகவியல் முதலாமாண்டு மாணவி ஜெயராசாத்தி வரவேற்றார். முதலாமாண்டு மாணவி ஜமுனா தேவி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் துறை ராஜீவ்காந்தி செய்திருந்தார். வணிகவியல் துறை முதலாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் 228 பேர் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது.
    • உதவிப் பேராசிரியர் கார்த்திக் பிரபு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் தேசிய அறிவியல் தின விழா நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு சொற்பொழிவு மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றன. முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். 3-ம் ஆண்டு மாணவி ஷர்மிளா வரவேற்றார். இயற்பியல் துறை தலைவர் குமரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தின் இயற்பியல் துறை தலைவர் ஆசாத் பகதூர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மின் தேக்கிகளின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

    தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி, கட்டுரைப் போட்டி, வாய்மொழி விளக்கக் காட்சி, பழைய பொருட்களிலிருந்து கலை மற்றும் வண்ணக் கோலங்கள் உருவாக்குதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள 8 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர். சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாலமுருகன் பரிசுகளை வழங்கினார். இரண்டாமாண்டு மாணவி கார்த்திகா நன்றிகூறினார்.

    உதவிப் பேராசிரியர் கார்த்திக் பிரபு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • குழந்தைகள் காப்பகத்திற்கு காளீஸ்வரி கல்லூரி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இளங்கலை 3-ம் ஆண்டு மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு பயிலும் 56 பேரும் பணியாற்றினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீ ஸ்வரி கல்லூரி ஆங்கில த்துறையின் விரிவாக்கப்பணி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பக தோப்பிலுள்ள வள்ளலார் இல்லம்- குழந்தைகள் காப்பகத்தில் விரிவாக்கப்பணியை மேற்கொண்டனர்.

    இதன் ஒரு பகுதியாக ''சிறப்பு மதிய உணவு'' காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் ஆங்கில புலமையை மேம்படுத்தும் வகையில் போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள் நடத்தி, வெற்றிப் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

    மேலும் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான எழுதுபொருட்கள், பென்சில் டப்பாக்கள், நோட்டுப் புத்தகங்கள். பென்சில்கள், ரப்பர்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட்கள், பலசரக்கு பொருட்களான அரிசி, துவரம் பருப்பு மற்றும் முதலுதவிப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

    இந்த விரிவாக்கப் பணியில் இளங்கலை 3-ம் ஆண்டு மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு பயிலும் 56 பேரும் பணியாற்றினர். இந்த விரிவாக்கப்பணியின் மூலம் மாணவர்களுக்கு சமுதாயத்திலுள்ள பின்தங்கிய குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் தேவைகள் குறித்து விழிப்புணர்வு கிடைத்தது.

    ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர்கள் சாந்தி, அர்ச்சனாதேவி மற்றும் வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்வை வழி நடத்தினர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் புத்தகக் கண்காட்சி நடந்தது.
    • தமிழியல் துறைத்தலைவர் அமுதா மற்றும் தமிழியல் துறை உதவிப்பேராசிரியர்கள் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து 2 நாட்கள் புத்தகக் கண்காட்சியை நடத்தியது. முதல்வர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். இதில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், தலைசிறந்த புதினங்கள், கவிதைகள், கதைகள் தொடர்பான புத்தகங்கள், திறனாய்வுப் புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், இலக்கியம், இலக்கணம் தொடர்பான புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகங்கள், ஆங்கிலம், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பிற துறை சார்ந்த புத்தகங்கள், பயண நூல்கள் உள்ளிட்ட எண்ணற்ற புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேவையான நூல்களை வாங்கிப் பயனடைந்தனர். தமிழியல் துறைத்தலைவர் அமுதா மற்றும் தமிழியல் துறை உதவிப்பேராசிரியர்கள் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தென்மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை யொட்டி காளீஸ்வரி கல்லூரியின் உடற்கல்விதுறை சார்பில் தென்மா வட்டத்தை சேர்ந்த 19 வயதிற்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கான கைப்பந்து, கூடைப்பந்து, கபடி மற்றும் கோ-கோ போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை காளீஸ்வரி குழுமத்தின் இயக்குநர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்.

    மொத்தம் 38 அணிகளை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர். கைப்பந்து மற்றும் கூடைப்பந்தில் நெல்லை எம்.என்.எம். அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளியும், கபடி போட்டியில் ராஜபா ளையம்,ஆர்.சி.மீ னாட்சிபுரம் மேல்நிலைப்பள்ளியும், கோ-கோ போட்டியில் திருத்தங்கல் எஸ்.என்.ஜி. பெண்கள் மேல்நி லைப்பள்ளி அணியும் முதலிடத்தை பெற்றன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு காளீஸ்வரி குழுமத்தின் இயக்குநர் ராஜேஷ் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழில்முனைவோர் நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த அமர்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நிறுவன புதுமையாக்க அமைப்பின் சார்பில் "வெற்றிகரமான தொழில்முனைவோர்" என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் அமர்வை ஏற்பாடு செய்தது. மதுரை ஜனஜா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் ஜான்லாரன்ஸ் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், வணிக உலகில் மாறுபட்ட மற்றும் பரந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் பங்கேற்பாளர்களை கதையின் மூலம் ஊக்கப்படுத்தினார்.

    தொழில்முனைவோரால் வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் விருப்பங்களை அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். நிறுவன புதுமையாக்க அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வரவேற்றார்.

    உறுப்பினர் முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.தொழில் தொடக்க செயல் ஒருங்கிணைப்பாளர் நாகேசுவரி நன்றி கூறினார்.

    இந்த அமர்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×