search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கருத்தரங்கு"

    • கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
    • பயிலரங்கின் இயக்கவியல் குறித்து கணிதத்துறை இணைப்பேராசிரியர் விளக்கினார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி கணிதத் துறை, பெங்களூர் கெரிசிம் அகாடமி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கணிதத்தில் கணக்கீட்டு நுட்பங்கள் குறித்த ஒரு நாள் தேசிய பயிலரங்கு நடைபெற்றது. கணிதத் துறைத்தலைவர் ராபர்ட் திலிபன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அன்பரசு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கல்லூரி செயலர் அந்தோனிசாமி வாழ்த்துரை வழங்கினார். பயிலரங்கின் இயக்கவியல் குறித்து கணிதத்துறை இணைப்பேராசிரியர் சேவியர் அடைக்கலராஜ் விளக்கினார். பெங்களூரு மவுண்ட் கார்மல் கல்லூரியின் (தன்னாட்சி) கணித பேராசிரியர் கிளமென்ட் ஜோ ஆனந்த், கணக்கீட்டு நுட்பங்களில் உள்ள சமீபத்திய வளர்ச்சிகள் குறித்த தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார். சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் கணித பேராசிரியர் ஹன்னா கிரேஸ், கணக்கீட்டுக் கணிதத்தில் மென்பொருள் அணுகுமுறைகள் குறித்த தனது நுண்ணறிவைப் பகிர்ந்து கொண்டார். இணை முதல்வர் சுந்தரராஜ் பயிலரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். முடிவில் பேராசிரியர் நிவேதா மார்ட்டின் நன்றி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்ப்டடோர் கலந்து கொண்டனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
    • தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பர பாரதி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நீதி இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கை நடத்தியது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். கேரளா பல்கலைக்கழகக் கல்லூரி இணைப் பேராசிரியர் சீனிவாசன் "காலம் தோறும் அறமுணர்த்தல் பதினென்கீழ்க்கணக்கு அறநூல்களை முன்வைத்து'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    2-ம் அமர்வில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தின் உதவிப்பேராசிரியர் கரு.முருகனும், 3-ம் அமர்வில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் முதுகலைத் தமிழ் மற்றும் தமிழாய்வு மையத் தலைவர் சிவனேசனும் பேசினர். தமிழியல் துறைத் தலைவர் அமுதா வரவேற்றார். இதில் பிற கல்லூரி மாணவர்கள் 25 பேரும், தமிழியல் துறை மாணவர்கள் 140 பேருமாக மொத்தம் 165 மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பர பாரதி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை முத்துச்சிதம்பர பாரதி மற்றும் சங்கர் உள்பட தமிழியல் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

    • இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
    • பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

    ஓசூர்,

    ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில், கணினி அறிவியல் மற்றும் பயன்பட்டியல் துறை சார்பில், வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவும், தரவு அறிவியலும் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. முன்னதாக கணினி அறிவியல்துறை தலைவர் சாந்தி ஜெஸ்லெட் வரவேற்றார்.

    எம்.ஜி.ஆர். கல்லூரி முதல்வர் முத்துமணி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து பேசுகையில், கணினி தொழில்நுட்பம், எல்லா துறை மாணவர்களுக்கும் அடிப்படையானது, அத்தியாவசியமானது என்றும், அதனை, மற்ற துறை மாணவர்களும் பயன்படுத்தி தங்கள் துறை ஆராய்ச்சிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    முன்னாள் துணை வேந்தரும், அதியமான் கல்வி குழும ஆலோசகருமான முத்துச்செழியன் கணினி செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தரவு தொழில்நுட்பத்தால் உலகம் முழுவதும் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி எட்டியுள்ளது. இந்த தொழில் நுட்பமானது, மனிதர்களுக்கு ஏழாம் அறிவாக செயல்படுகிறது. எனவே மாணவர்கள் இந்தத் தொழில் நுட்பங்களை பயின்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    கருத்தரங்கில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அவர்ஒவ்வொரு துறை மாணவர்களுக்கும் கட்டாயம் கணினிப் பாடம் வைக்கவேண்டும்.

    மேலும், கணினித் துறையில் பல பிரிவுகள் பிரித்து இன்றைய தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்கி மாணவர்களின் நுண்ணறிவை பெருக்கிக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்றார்.

    இதில், பாரதிதாசன் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியர் ஜார்ஜ் தர்மபிரகாஷ்ராஜ் உள்பட பலர் பேசினர்.கருத்தரங்கில், தமிழகம், பெங்களூரூவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்களும், ஆய்வறிஞர்களும் கலந்து கொண்டனர்.

    முடிவில் கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.

    ×