என் மலர்
நீங்கள் தேடியது "National Seminary"
- கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
- பயிலரங்கின் இயக்கவியல் குறித்து கணிதத்துறை இணைப்பேராசிரியர் விளக்கினார்.
மதுரை
மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி கணிதத் துறை, பெங்களூர் கெரிசிம் அகாடமி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கணிதத்தில் கணக்கீட்டு நுட்பங்கள் குறித்த ஒரு நாள் தேசிய பயிலரங்கு நடைபெற்றது. கணிதத் துறைத்தலைவர் ராபர்ட் திலிபன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அன்பரசு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கல்லூரி செயலர் அந்தோனிசாமி வாழ்த்துரை வழங்கினார். பயிலரங்கின் இயக்கவியல் குறித்து கணிதத்துறை இணைப்பேராசிரியர் சேவியர் அடைக்கலராஜ் விளக்கினார். பெங்களூரு மவுண்ட் கார்மல் கல்லூரியின் (தன்னாட்சி) கணித பேராசிரியர் கிளமென்ட் ஜோ ஆனந்த், கணக்கீட்டு நுட்பங்களில் உள்ள சமீபத்திய வளர்ச்சிகள் குறித்த தனது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார். சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் கணித பேராசிரியர் ஹன்னா கிரேஸ், கணக்கீட்டுக் கணிதத்தில் மென்பொருள் அணுகுமுறைகள் குறித்த தனது நுண்ணறிவைப் பகிர்ந்து கொண்டார். இணை முதல்வர் சுந்தரராஜ் பயிலரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். முடிவில் பேராசிரியர் நிவேதா மார்ட்டின் நன்றி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்ப்டடோர் கலந்து கொண்டனர்.