தொழிற்படிப்புகள் சார்ந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழிற்படிப்புகள் சார்ந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. வணிகவியல் துறை முதலாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் 228 பேர் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.
தொழிற்படிப்புகள் சார்ந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி
Published on

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் தொழிற்படிப்புகள் பற்றிய வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக வணிகவியல் துறை முன்னாள் மாணவர் மணிகண்டன் பங்கேற்றார்.

முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், தொழிற்படிப்புகளில் எவ்வாறு வெற்றி பெறுவது? வெற்றிக்கான இலக்கை நோக்கி எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்வது? என்பது பற்றி எடுத்துரைத்தார்.

மேலும் தொழிற்படிப்புகள் வாயிலாக வாழ்வில் பொருளாதாரத்தின் மேம்பாடுகள் பற்றிக் கூறினார். வணிகவியல் முதலாமாண்டு மாணவி ஜெயராசாத்தி வரவேற்றார். முதலாமாண்டு மாணவி ஜமுனா தேவி நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் துறை ராஜீவ்காந்தி செய்திருந்தார். வணிகவியல் துறை முதலாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் 228 பேர் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com