search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelry money robbery"

    ஈத்தாமொழி அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    நாகர்கோவில்:

    ஈத்தாமொழி வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் தங்கநாடார் (வயது 49). தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று காலையில் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் மரவேலைக்கு சென்றிருந்தார். பின்னர் இரவு அவர்கள் வேலை முடிந்து வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனை கண்டுஅதிர்ச்சி அடைந்த தங்கநாடார் ஈத்தாமொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் மாரி முத்து மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது, அங்கிருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.

    மேலும் 1½ பவுன் எடையுள்ள தங்க செயின், ½ பவுன் மோதிரம் ஆகியவையும் மற்றொரு பீரோவில் இருந்த ரூ. 40 ஆயிரம் ரொக்க பணம், மேஜையில் இருந்த செல்போன், சமையல் அறையில் இருந்த மின்சார அடுப்பு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம், மரபீரோ ஆகிய இடங்களில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் கொள்ளையர்களின் 2 கைரேகை சிக்கியது.

    இந்த கைரேகைகளை வைத்து பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா உள்ளதா? அதில் கொள்ளையர்களின் உருவம் பதிந்துள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். சந்தேகம் படும்படியாக சுற்றி திரிந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    கும்பகோணத்தில் மின்வாரிய அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம், மார்ச்.15-

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வலங்கைமான் ரோட்டில் உள்ள ராஜமீனா நகரில் வசித்து வருபவர் தொல்காப்பியன் (வயது 55). இவர் பட்டுக்கோட்டையில் மின்வாரிய உதவி இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (50). இவர் பருத்தி சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை யாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் இவர்களது 2-வது மகள் காவ்யாவும், பிரதீப் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    இதனால் மகளையும், மருமகனையும் பார்ப் பதற்காக தொல்காப்பியன் தனது மனைவியுடன் கடந்த 10-ந்தேதி சென்னைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இன்று அதிகாலை அவர்கள் ஊருக்கு திரும்பினர்.

    வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தொல்காப்பியன் அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. பின்னர் மாடி வீட்டுக்கு சென்று அவர் பார்த்த போது, அங்கும் பீரோவில் இருந்த 38 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

    பூட்டி கிடந்த வீட்டை மர்ம கும்பல் நோட்டமிட்டு நகை- பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. திருட்டுபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும்.

    இந்த கொள்ள சம்பவம் பற்றி நாச்சியார் கோவில் போலீசில் தொல்காப்பியன் புகார் செய்தார். திருவிடைமருதூர் போலீஸ் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுனர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

    மின்வாரிய அதிகாரி வீட்டில் 50 பவுன், மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போன சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. * * * பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கிறது. * * * கொள்ளை நடந்த மின்வாரிய அதிகாரி வீட்டை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல் அருகே பைனான்சியர் வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே செம்பட்டி மூவேந்தர் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் 3 கடைகள் உள்ளன. இதனை வாடகைக்கு விட்டுள்ளார்.

    ராஜேந்திரனின் குடும்பத்தினர் சாமி கும்பிடுவதற்காக திருச்செந்தூர் சென்று விட்டனர். ராஜேந்திரன் வழக்கம் போல் பைனான்ஸ் வசூல் செய்ய சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

    அது வீட்டில் இருந்து செம்பட்டி பஸ் நிலையம் வழியாக பெட்ரோல் பங்க் வரை சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதனால் போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கீழ் தளத்தில் 3 கடைகள் இயங்கிய நிலையில் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூரில் பைனான்சியர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.4½ லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றன.
    வேலூர்:

    வேலூர் தென்னமரத் தெருவை சேர்ந்தவர் பன்னீர் (வயது 50). பைனான்சியர். ஊதுபத்தி ஏஜென்சி தொழில் செய்து வருகிறார்.

    நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் கதவை உடைத்து அங்கு சென்று பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.4½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை வீடு திரும்பிய பன்னீர் கதவு உடைந்து கிடப்பதையும், பீரோ திறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வேலூர் மாநகர பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கோயம்பேட்டில் இருந்து மணலி செல்லும் மாநகர பஸ்சில் பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    போரூர்:

    சீர்காழி திருமுல்லைவாசல் இருதய நகரைச் சேர்ந்தவர் சோனைமுத்து. இவரது மனைவி கல்யாணி. இவர் சென்னை மணலியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை சென்னை வந்தார். பின்னர் இரவு கோயம்பேட்டில் இருந்து மணலி செல்வதற்காக மாநகர பஸ்சில் (எண் 121ஏ) ஏறி அமர்ந்தார்.

    பஸ் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்றதும் தான் வைத்திருந்த கைப்பை கிழிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் பிளேடால் பையை கிழித்து அதிலிருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் 2 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
    ஊத்துக்கோட்டை அருகே தொழிலாளி வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பள்ளகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார், தொழிலாளி. இவரது மனைவி புஷ்பலதா.

    நேற்று காலை சிவகுமார் மளிகை பொருட்கள் வாங்க ஊத்துக்கோட்டைக்கு சென்றார். புஷ்பலதா அதே கிராமத்தில் நடக்கும் தேசிய ஊரக வேலை திட்ட பணிக்கு வீட்டின் கதவை பூட்டாமல் சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் சிவக்குமாரின் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கம், வெள்ளி, தங்க நகையை கொள்ளயடித்து தப்பி சென்று விட்டனர்.

    சிவகுமார் வீட்டிற்கு திரும்பி வந்த போது நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் டாக்டர் வீட்டில் ரூ.35 லட்சம் மதிப்பிலான பணம்-நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரை சேர்ந்தவர் வடிவேல் பாண்டி (வயது67). டாக்டரான இவர் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் தனக்கு சொந்தமான இடத்தில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 26-ந்தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு வடிவேல்பாண்டி தனது மனைவியுடன் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நள்ளிரவில் வீடு திரும்பிய அவர்கள் பயண களைப்பில் படுக்கை அறைக்கு சென்று தூங்கினர்.

    நேற்று காலை வடிவேல் பாண்டி கண்விழித்து கழிவறைக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் ஒரு அறையில் இருந்த 2 பீரோக்களும் திறந்து கிடந்தன. பீரோவில் இருந்த 160 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் ரூ.5½ லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.35 லட்சமாகும். அதிகாலை வேளையில் யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து மறைவான இடத்தில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    இதுகுறித்து டாக்டர் வடிவேல் பாண்டி கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு மாறனும் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். அதோடு டாக்டர் வீடு மற்றும் பக்கத்து வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் டாக்டர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் தெரிந்த நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
    மீஞ்சூர் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூர், பாபு நகரைச் சேர்ந்தவர் சேகர். புரசைவாக்கத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு திருவள்ளூர் அருகே மணவாளநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    நேற்று மாலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 15 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி, 2 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானு. இவர்களது மகன் தமிழரசன்.

    இந்த நிலையில் நேற்று நடராஜன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். பானுவும், தமிழரசனும் வீட்டை பூட்டிவிட்டு தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். மாலையில் தமிழரசன் மட்டும் வீடு திரும்பினார். வீட்டை திறந்து உள்ளே சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அறைக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    நகை கொள்ளை போனது பற்றி தமிழரசன் செல்போனில் தனது தாய் பானுவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    முதல் கட்ட விசாரணையில் புத்தாண்டு அன்று வீடு பூட்டி கிடப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க வழியாக வந்து பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து இந்த கொள்ளை ஈடுபட்டது தெரிய வந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பொன்னேரி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம், அங்கம்மாள் நகரை சேர்ந்தவர் இளங்கோ. பெரும்பேடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் ரொக்கம், 2 பவுன் நகை, ¼ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் பட்டப்பகலில் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே 4 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சின்னம்பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த குமார், கோவிந்தன், சந்திரன், பொன்னுத்தாய் ஆகிய 4 பேர் வீடுகளில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கொள்ளை நடந்துள்ளது.

    4 வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நகை, பணம் உள்பட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    குமார் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அவரது சட்டைப் பையில் இருந்த 3500 ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்தனர்.

    கோவிந்தன், சந்திரன், பொன்னுத்தாய் ஆகியோர் வீடுகளில் நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர்.

    4 வீடுகளையும் சேர்த்து ரூ.5லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. குமார், கோவிந்தன், சந்திரன், பொன்னுத்தாய் ஆகிய 4 பேரும் தங்கள் வீடுகளில் நேற்று இரவு 11.30 மணி வரை பேசி விட்டு அவர்களது வீடுகளை பூட்டிவிட்டு வேறு வீட்டில் தூங்கினர்.

    நகை உள்ள இரும்பு பெட்டி உடைக்கப்பட்டுள்ள காட்சி.

    இதை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெரும்பாலை போலீசார் விசாரணை நடநத்தி வருகிறார்கள்.

    சமீப காலமாகவே பென்னாகரம், இண்டூர் பகுதிகளில் தொடர் கொள்ளை நடந்து வருகிறது. பென்னாகரம் டவுனிலும், பி.அக்ரஹாரம், ஜெட்டூர் ஆகிய பகுதிகளிலும் கொள்ளை நடந்தது.

    இண்டூரிலும், எர்ர பையன அள்ளியிலும் கொள்ளை நடந்தது. இப்படி தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    ஏதோ ஒரு கொள்ளை கும்பல் அந்த பகுதியில் திட்டமிட்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இண்டூர் அருகே கொள்ளையர்கள் மின்சாரத்தை நிறுத்தி விட்டு கொள்ளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
    ஆர்.எஸ்.மங்கலம் அருகே பட்டப்பகலில் அரிவாளை காட்டி மிரட்டி 13 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சனவேலியை சேர்ந்தவர் சிவசங்கரபாண்டியன் (வயது68), ஜோதிடர்.

    சில நாட்களுக்கு முன்பு இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று விட்டனர். சிவசங்கரபாண்டியன் மட்டும் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஓட்டலில் சாப்பிடுவதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம ஆசாமி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தான்.

    அவன் பீரோவை திறந்து அதில் இருந்த 13 பவுன் நகை, 2 ஜோடி கொலுசு, ரூ.ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடினான்.

    அப்போது வீட்டுக்கு வந்த சிவசங்கரபண்டியன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்றார்.

    இதை அறிந்த திருடன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி சிவசங்கரபாண்டியனை மிரட்டினான். இதனால் உயிருக்கு பயந்த அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அதற்குள் திருடன் வீட்டின் பின்புறம் வழியாக நகை-பணத்துடன் தப்பினான்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×