search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே பைனான்சியர் வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
    X

    திண்டுக்கல் அருகே பைனான்சியர் வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

    திண்டுக்கல் அருகே பைனான்சியர் வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே செம்பட்டி மூவேந்தர் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் 3 கடைகள் உள்ளன. இதனை வாடகைக்கு விட்டுள்ளார்.

    ராஜேந்திரனின் குடும்பத்தினர் சாமி கும்பிடுவதற்காக திருச்செந்தூர் சென்று விட்டனர். ராஜேந்திரன் வழக்கம் போல் பைனான்ஸ் வசூல் செய்ய சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

    அது வீட்டில் இருந்து செம்பட்டி பஸ் நிலையம் வழியாக பெட்ரோல் பங்க் வரை சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதனால் போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கீழ் தளத்தில் 3 கடைகள் இயங்கிய நிலையில் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×