search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pondicherry robbery"

    புதுவையில் டாக்டர் வீட்டில் ரூ.35 லட்சம் மதிப்பிலான பணம்-நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரை சேர்ந்தவர் வடிவேல் பாண்டி (வயது67). டாக்டரான இவர் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் தனக்கு சொந்தமான இடத்தில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 26-ந்தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு வடிவேல்பாண்டி தனது மனைவியுடன் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நள்ளிரவில் வீடு திரும்பிய அவர்கள் பயண களைப்பில் படுக்கை அறைக்கு சென்று தூங்கினர்.

    நேற்று காலை வடிவேல் பாண்டி கண்விழித்து கழிவறைக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் ஒரு அறையில் இருந்த 2 பீரோக்களும் திறந்து கிடந்தன. பீரோவில் இருந்த 160 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் ரூ.5½ லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.35 லட்சமாகும். அதிகாலை வேளையில் யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து மறைவான இடத்தில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    இதுகுறித்து டாக்டர் வடிவேல் பாண்டி கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு மாறனும் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். அதோடு டாக்டர் வீடு மற்றும் பக்கத்து வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் டாக்டர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் தெரிந்த நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
    புதுவையில் நிதிநிறுவன ஊழியரை அரிவாளால் தாக்கி ரூ.5 லட்சம் பணப்பையை பறித்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    மதுராந்தகத்தில் வெங்டேஸ்வரா பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் சென்னை நுங்கம்பாக்கம் 11-வது கிராஸ், ஏ.வி.எம். அவென்யூவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 55) வேலை பார்த்து வருகிறார்.

    வெங்டேஸ்வரா பைனான்சில் புதுவையை சேர்ந்த பல தொழிலதிபர்கள், வியாபாரிகள் கடன் வாங்கி உள்ளனர். அதற்கான வட்டி பணம் மற்றும் அசல் பணத்தை வசூல் செய்வதற்காக பாலசுப்பிரமணியன் அடிக்கடி புதுவைக்கு வருவது வழக்கம்.

    நேற்று மோட்டார் சைக்கிளில் புதுவை வந்த அவர் மேட்டுப்பாளையம் பகுதியில் தொழிலதிபர்கள், வியாபாரிகளிடம் வட்டி பணத்தை வசூல் செய்தார். ரூ.5 லட்சம் வரை வசூலானது.

    அதை ஒரு கைப்பையில் வைத்துக் கொண்டு புதுவை நகரை நோக்கி இரவு 7 மணி அளவில் வந்து கொண்டிருந்தார். எல்லைப்பிள்ளைச்சாவடி ராஜீவ்காந்தி குழந்தைகள் ஆஸ்பத்திரி அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து வந்த 2 பேர் வழிமறித்தனர்.

    அதில் ஒருவர் பாலசுப்பிரமணியனின் கைப்பையை பறிக்க முயன்றார். ஆனால் அவர் பையை கொடுக்கவில்லை. இதனால் அந்த நபர் அரிவாளை எடுத்து அதை திருப்பி வைத்து பாலசுப்பிரமணியனை சரமாரியாக வெட்டுவது போல தாக்கினார்.

    ஆனாலும் அவர் பணப்பையை விடவில்லை. தொடர்ந்து ஓட, ஓட விரட்டி தாக்கினார். இதனால் நிலை குலைந்தபோது அவரது பணப்பையை பறித்துக் கொண்டு அந்த நபர் ஓடினார். அங்கு தயாராக நின்று கொண்டிருந்த தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடிவிட்டார்.

    அரிவாளின் பின்புறத்தால் தாக்கியதால் பாலசுப்பிரமணியனுக்கு வெட்டு காயம் ஏற்படவில்லை. ஆனால் அடிபட்டதில் உள் காயம் கடுமையாக இருந்தது.

    இதுசம்பந்தமாக அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தினார்கள். அதிரடிப்படையினரும் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் பாலசுப்பிரமணியத்தை அரிவாளால் தாக்கும் காட்சி பதிவாகி இருந்தது.

    மேலும் இன்னொரு கேமராவில் அந்த மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்ததும், அதில் ஒருவர் மட்டும் சற்று தூரத்திற்கு முன்பாகவே இறங்கி சென்ற காட்சியும் பதிவாகி இருந்தது.

    அதை ஆய்வு செய்தபோது இறங்கி சென்ற நபரின் முகம் நன்றாக தெரிந்தது. அவர் கதிர்காமத்தை சேர்ந்த கந்தவேலு என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    உடனே அவரது வீட்டுக்கு சென்று போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது 4 பேர் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

    அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வழுதாவூர் அருகே உள்ள ராமநாதபுரம் வெட்டுக்காடுவை சேர்ந்த சரவணன், தர்மாபுரியை சேர்ந்த மதுபாலா, அய்யங்குட்டிபாளையத்தை சேர்ந்த அஜித் ஆகியோரை கைது செய்தனர். இதில் சரவணன் தான் அரிவாளால் தாக்கி பணத்தை பறித்தவர் ஆவார்.

    பணத்தை பறித்ததும் சரவணன், மதுபாலா ஆகியோர் திருக்கனூரில் உள்ள நண்பர் ஒருவர் உதவியுடன் அங்குள்ள மோட்டார் கொட்டகைக்கு சென்று பதுங்கி இருந்தனர்.

    அந்த நண்பர் பற்றிய விவரத்தை அறிந்த போலீசார் திருக்கனூர் சென்று நண்பரை பிடித்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மோட்டார் கொட்டகையில் பதுங்கி இருந்த சரவணன், மதுபாலா ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்கள் வைத்திருந்த ரூ.1½ லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மீதி பணத்தை அதற்குள் வேறு நபர்களிடம் கைமாற்றி இருந்தனர். அந்த பணத்தை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

    இந்த கொள்ளையில் மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார். அவரை தேடி வருகிறார்கள். பாலசுப்பிரமணியன் அடிக்கடி புதுவை வந்து பணம் வசூல் செய்வதை நீண்ட நாட்களாக கண்காணித்து வந்த அவர்கள் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    பாலசுப்பிரமணியத்தை தாக்கி பணத்தை பறிக்கும் வீடியோ காட்சி வெளியே பரவி உள்ளது. அதை சமூக வலைதளங்களில் பலரும் உலாவவிட்டுள்ளனர். அதில் பாலசுப்பிரமணியத்தை சரவணன் தொடர்ந்து அரிவாளால் தாக்குவதும், பாலசுப்பிரமணியன் பணத்தை கொடுக்காமல் தக்க வைக்க முயற்சிக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளன.

    இந்த சம்பவத்தை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்துவிட்டு அதிர்ச்சியாக நிற்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
    ×