search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL T20"

    • போட்டிக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.
    • பெண்களுக்கு தனி வரிசையும், மாற்றுத்திறனாளர்களுக்குத் தனியாக ஒரு மணிநேரமும் டிக்கெட் வழங்க முடிவு.

    16வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 10ம் தேதி நடக்கிறது.

    அன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறும் போட்டிக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் நாளை (8.5.2023) காலை 7 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பெண்களுக்கு தனி வரிசையும், மாற்றுத்திறனாளர்களுக்குத் தனியாக ஒரு மணிநேரமும் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது.
    • 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி அசத்தல் வெற்றி.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 2வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்த்தது. இருவரும் ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜோஸ் பட்லர் 59 பந்தில் 95 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. சஞ்சு சாம்சன் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ராகுல் திரிபாதி 47 ரன்களும், அன்மோல்ப்ரீத் சிங் 33 ரன்கள், ஹெயின்ரிச் கிளாசன் 26 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 25 ரன்களும், அப்துல் சமாத் 11 ரன்களும் எய்டன் மார்க்ரம் 6 ரன்களும், மார்கோ ஜான்சன் 3 ரன்களும எடுத்தனர்.

    அப்துல் சமான் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் அவுட்டாகாமல் விளையாடினர்.

    இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி அசத்தலாக வெற்றிப்பெற்றுள்ளது.

    • போட்டியைக் காண திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நேரில் கண்டுகளித்தனர்.
    • ஓபிஎஸ் சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை பார்த்தார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்களின் அபார ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி சிஎஸ்கே தனது 6வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இந்த போட்டியைக் காண திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நேரில் கண்டுகளித்தனர்.

    இந்த நிலையில், இந்த போட்டியை முன்னாள் முதmமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் கண்டு ரசித்தார்.

    அவர் சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை பார்த்தார். இந்த புகைப்படத்தை டுவிட்டரில் டேக் செய்தருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

    அந்த பதிவில், தோனிக்கு பதிலாக தன்னை கேப்டன் ஆக்குமாறு சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் சண்டையிடும் ஓபிஎஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்களை குவித்தது.
    • 16.4 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் 187 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தலாக வெற்றிப்பெற்றது.

    ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூ பிளசிஸ் பொறுப்புடன் ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 82 ஆக இருக்கும்போது டூ பிளசிஸ் 45 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    விராட் கோலியுடன் லாம்ரோர் ஜோடி சேர்ந்தார். 3வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி 55 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்களை குவித்தது. லாம்ரோர் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

    இதில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். தொடர்ந்து, ரிலீ ரொசவ் 35 ரன்களும், மிட்சேல் மார்ஷ் 26 ரன்களும், டேவிட் வார்னர் 22 ரன்களும் அசார் பட்டேல் 8 ரன்களும் எடுத்தனர்.

    ரிலீ ரொசவ் மற்றும் அசார் பட்டேல் ஆட்டத்தை இழக்காமல் ஆடினர்.

    ஆட்டத்தின் முடிவில், 16.4 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் 187 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அசத்தலாக வெற்றிப்பெற்றது.

    • பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது.
    • 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டி பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

    டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் ஷிகர் தவான் 30 ரன்னும், மேத்யூ ஷார்ட் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா ஜோடி மும்பை பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்து சிக்சர், பவுண்டரிகளை விளாசியது. லிவிங்ஸ்டோன் அரை சதம் கடந்தார்.

    இறுதியில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. லிவிங்ஸ்டோன் 42 பந்தில் 82 ரன்னும், ஜிதேஷ் சர்மா 27 பந்தில் 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 41 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் 66 ரன்களும், கேரமரன் கிரீன் 23 ரன்களும் எடுத்தனர்.

    திம் டேவிட் 19 ரன்களுடன், திலக் வர்மா 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

    இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 18.5 ஓவரில் 216 ரன்கள் எடுத்து மும்பை அணி ஆட்டத்தை கைப்பற்றியது.

    • லக்னோ அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது.
    • பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்க லக்னோ முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொகாலியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    லக்னோ அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணியும் அதே நிலையில்தான் உள்ளது.

    ஏற்கனவே இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க லக்னோ முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஐபிஎல் போட்டியில் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 3 வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் சந்தித்து 6 புள்ளிகளுடன் உள்ளன.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    அதன்படி, இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் களமிறங்குகின்றன.

    இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்ன்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 3 வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் சந்தித்து 6 புள்ளிகளுடன் உள்ளன.

    இந்நிலையில், இன்றைய 7வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே பலப்பரீட்சை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.
    • முதல் 5 ஆட்டங்களில் வரிசையாக தோல்வி அடைந்த டெல்லி கேப்பிட்டல் அணி கடந்த ஆட்டத்தில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ள ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

    முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    இதேபோல், முதல் 5 ஆட்டங்களில் வரிசையாக தோல்வி அடைந்த டெல்லி கேப்பிட்டல் அணி கடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில், தனது சொந்த மண்ணில் விளையாடும் ஐதராபாத் அணிக்கு வெற்றி கிடைக்குமா அல்லது டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, சி.எஸ்.கே. அணி முதலில் களமிறங்கியது.

    சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

    போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 6 போட்டிகளின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தது.

    இன்றைய 7வது ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    • ஐதராபாத்தை துவம்சம் செய்த உத்வேகத்துடன் சென்னை அணி இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.
    • இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மோதும் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா.

    16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை சென்னை அணி 4 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 8 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை துவம்சம் செய்த உத்வேகத்துடன் சென்னை அணி இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.

    கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (பெங்களூரு, குஜராத் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (பஞ்சாப், ஐதராபாத், மும்பை. டெல்லி அணிகளிடம்) கண்டுள்ளது. அந்த அணி தனது முந்தைய 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஆதிக்கத்தை தொடர சென்னை அணியும், சரிவில் இருந்து மீண்டு வர கொல்கத்தா அணியும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது.
    • மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் 11 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னிலும் லிவிங்ஸ்டோன் 10 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அதர்வா டெய்ட் 29 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சாம் கர்ரன் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது.

    5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 50 பந்தில் 92 ரன்களை குவித்தது. பாட்டியா 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சாம் கர்ரன் 29 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஜிதேஷ் சர்மா 7 பந்தில் 4 சிக்சர் உள்பட 25 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது.

    மும்பை அணி சார்பில் பியூஷ் சாவ்லா, கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக கேமரன் கிரீன் அரை சதம் எடுத்து 67 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 57 ரன்களும், ரோகித் சர்மா 44 ரன்களும், டிம் டேவிட் 25 ரன்களும், திலக் வர்மா 3 ரன்களும், இஷான் கிஷன் ஒரு ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.
    • என் பேச்சை கேட்க சென்னை ரசிகர்கள் கடைசி வரை இருக்கின்றனர்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு ஐபிஎல் கிரிக்கெட்டின் 29வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.

    பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கூறுகையில், "என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது. அதை மகிழ்ச்சியாக கடப்பது முக்கியமானது. சென்னைக்கு வருவது மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். என் பேச்சை கேட்க சென்னை ரசிகர்கள் கடைசி வரை இருக்கின்றனர்" என்றார்.

    ×