search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intelligence"

    இந்திய போர்கப்பல்களை தகர்க்க ஆழ்கடலில் தீவிரவாதிகள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை தகவல் கொடுத்து எச்சரித்துள்ளது. #IndianNavy
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களும் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

    கடந்த 2008-ம் ஆண்டு மும்பைக்குள் ஊடுருவிய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் 166 பேரை கொன்று குவித்தனர். அதே போன்று பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்தனர்.

    தீவிரவாதிகளின் சதி திட்டங்கள் அனைத்தையும் உளவுத்துறை தகவல்கள் உதவியுடன் இந்திய பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்தப்படி உள்ளனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற சுமார் 200 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்றாலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவும் நோக்கத்துடன் சுமார் 300 தீவிரவாதிகள் காத்து இருக்கின்றனர்.

    தரை வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் தடுப்பதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளனர். இதன் காரணமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள், வேறு வழிகளில் இந்திய ராணுவ நிலைகளை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் தீவிரவாதிகளின் பார்வை இந்திய கடற்படை மீது திரும்பியுள்ளது.

    இந்திய கடற்படை சமீப ஆண்டுகளில் மிகவும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தும் தொழில் நுட்பத்தில் இந்திய கடற்படை மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவிடம் தற்போது ஐ.என்.எஸ். அரிகண்ட், ஐ.என்.எஸ். அகாட், ஐ.என்.எஸ். சக்ரா எனும் 3 நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளன.

    இவற்றை பாகிஸ்தான் ராணுவம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக கருதுகிறது. எனவே இந்திய போர் கப்பல்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும்படி தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய போர் கப்பல்களை தகர்க்க, பாகிஸ்தான் கடல் பகுதியில் உள்ள ஆழ்கடலில் தீவிரவாதிகள் ரகசிய பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் கடந்த 6 மாதமாக இந்த பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. நீண்ட தொலைவுக்கு கடலுக்கு அடியில் நீந்தி சென்று, கப்பல்களை குண்டு வைத்து தகர்க்கும் வகையில் அவர்கள் பயிற்சி பெறுவதை உளவுத்துறை மோப்பம் பிடித்துள்ளது.

    டெல்லியில் உள்ள உளவுத்துறை பல்முனை ஒருங்கிணைப்பு மையரிம் இதை உறுதி செய்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய கடற்படை தளங்களை தாக்கும் வகையிலும் ஒத்திகை நடத்தி இருப்பதையும் உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இதுபற்றி மத்திய அரசுக்கு தகவல் கொடுத்து உளவுத்துறை எச்சரித்துள்ளது.



    இதையடுத்து இந்திய கடற்படை போர் கப்பல்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நீர் முழ்கி கப்பல்களுக்கும், விமானம் தாங்கி கப்பல்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதுபோல விசாகப்பட்டினம், கொச்சி, மும்பை உள்ளிட்ட கடற்படை தளங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #IndianNavy
    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
    புதுடெல்லி:

    காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவமும் பயங்கரவாதிகளும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

    சமீபத்தில் காஷ்மீரில் மத்தியப்படை வாகனங்கள் மீதும், ராணுவ முகாம்கள் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதுபோல் மேலும் சில ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

    குறிப்பாக பூஞ்ச் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 2 ராணுவ முகாம்களுக்கு பயங்கரவாதிகள் குறிவைத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று இருக்கிறார்கள். அவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவ காத்திருக்கிறார்கள். எந்த நேரத்திலும் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடலாம். எனவே உஷாராக இருக்குமாறு பாதுகாப்பு படையினரை உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    35 பயங்கரவாதிகள் வரை இந்த தாக்குதலுக்கு தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளும், ஊடுருவல்காரர்களும் பெரிய அளவில் முகாமிட்டு உள்ளனர். 250-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கலாம். என்று தெரிய வருகிறது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரவு நேரத்தில் அவர்கள் ஊடுருவ முயற்சித்து வருவதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதை முறியடிக்க ராணுவமும் பாதுகாப்பு படையினரும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.
    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றதற்காக பழிக்குப்பழி வாங்கும் விதமாக போலீசாரை தாக்க ஒரு கும்பல் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த போராட்டம் மோதலில் முடிந்தது. போராட்டக்காரர்கள் கல்வீச்சு- தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒடுக்க போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவத்தையடுத்து தூத்துக்குடியில் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். 5 ஐ.ஜி.க்கள், 7 டி.ஐ.ஜி.க்கள் என ஏராளமான போலீஸ் அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டனர். இருந்த போதிலும் தூத்துக்குடியில் ஆங்காங்கே தீவைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்ந்தன.

    இதனால் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கமாண்டோ வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் எதிரொலியாக தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப தொடங்கியது.

    இதையடுத்து தூத்துக்குடியில் குவிக்கப்பட்டிருந்த போலீசாரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த போலீசார் அவர்களது ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    நகரின் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட நிலையில் பதற்றமான பகுதியாக கருதப்படும் பாத்திமாநகர், திரேஸ்புரம், தாளமுத்துநகர், தெர்மல்நகர், முத்தையாபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பில் ஈடுபடும் போலீசார், அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமூக நலக்கூடங்களில் தங்கியுள்ளனர்.


    இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றதற்காக பழிக்குப்பழி வாங்கும் விதமாக போலீசாரை தாக்க ஒரு கும்பல் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அதனை எச்சரிக்கையாக போலீஸ் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி மோதல் நடந்த போது போலீஸ்காரர்களை, போராட்டக்காரர்கள் ஆவேசமாக கற்களை வீசி தாக்குல் நடத்தினர். துப்பாக்கி சூடு நடந்த பிறகும் போராட்டக்காரர்கள் ஆங்காங்கே கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு ஆயிரக்கணக்கான போலீசார் தூத்துக் குடியில் குவிக்கப்பட்டு கலவரக்காரர்களை தடுத்ததால் அங்கு இயல்பு நிலை திரும்பியது. இருந்த போதிலும் போலீசார் கண் மூடித்தனமாக தடியடி நடத்தியது, துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதால் போராட்டக்காரர்கள் இன்னும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆகவே ஒரு கும்பல் போலீசாரை தாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதற்காக அந்த கும்பல் நெல்லை மாவட்டம் கூத்தங்குழி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை கடல் வழியாக படகு மூலம் தூத்துக்குடிக்கு வரவழைத்து இருப்பதாகவும், வெடிகுண்டுகளை தயாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    அவர்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்கியுள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் மற்றும் சில போலீஸ் நிலையங்களை தாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் அந்த கும்பலில் பல்வேறு தாக்குதல் திட்டங்கள் குறித்து தகவல் சேகரித்துள்ள உளவுத்துறை போலீசார், அதுபற்றி நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

    அதன்படி போலீசாரை தாக்க திட்டமிட்டுள்ள கும்பல் பற்றி ரகசிய விசாரணை மற்றும் கண்காணிப்பில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மர்மக்கும்பல் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கைப்பட்டுள்ள இடங்களில் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். #Thoothukudifiring #SterliteProtest
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டம் உளவுத்துறையின் தோல்வி என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.#ThoothukudiProtest #sterlite #tamilisaisoundararajan
    ஆலந்தூர்:

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி சென்று உள்ளார். அவரும், அமைச்சர்களும் முன்கூட்டியே சென்று இருக்க வேண்டும். அங்குள்ள மக்களுக்கு முழு பாதுகாப்பு மற்றும் அச்ச உணர்வை போக்குவது அரசின் கடமை.

    மக்களுக்கு அரசு பாதுகாப்பு தரும் என்ற எண்ணம் இல்லாததினால் தான் போராட்டங்கள் பிரிவினைவாதிகள் கையில் சென்று விடுகின்றன.

    துணை முதலமைச்சர், தூத்துக்குடி சென்று இருப்பது ஆரோக்கியமானது தான். அது கண்துடைப்பு என்று சொல்ல முடியாது.

    இயல்பாக நடப்பதை கூட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி மக்கள் மனதில் பதியவைத்து தமிழ்நாட்டை போராட்ட களமாக்கி வருகின்றனர். நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. வழக்கம்போல் தி.மு.க. வெளிநடப்பு செய்யும். சட்டமன்ற கூட்டமோ, அலுவல் கூட்டமோ எதுவாக இருந்தாலும் அதில் ஆக்கப்பூர்வமாக நடக்க வேண்டும் என்று ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.

    தூத்துக்குடி போராட்டம் உளவுத்துறையின் தோல்வி தான். திடீரென்று போராட்டம் நடத்த முடியாது. இதே போல் போராட்ட சம்பவங்கள் நடைபெறும் போது எதிர்க்கட்சிகள் உடனே அரசு பதவி விலக வேண்டும் என்று கூறுவது சரியானதல்ல.



    மு.க.ஸ்டாலின் எப்போது முதலமைச்சரை கீழே இறக்கலாம், தான் எப்போது முதலமைச்சர் ஆகலாம் என்று நினைத்து போராட்டத்தை நடத்த கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.#ThoothukudiProtest #sterlite #tamilisaisoundararajan
    தூத்துக்குடியில் கலவரம் வரும் என்பதை போலீசார் முன் கூட்டியே அறிந்து தடுக்க தவறி விட்டதாகவும் இதில் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #Thoothukudifiring
    பொள்ளாச்சி:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் பல நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று கலவரம் நடந்துள்ளது.

    கலவரம் வரும் என்பதை போலீசார் முன் கூட்டியே அறிந்து தடுக்க தவறி விட்டனர். இதில் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்து உள்ளது.

    ஆர்ப்பாட்டம், போராட்டத்தை முறைப்படுத்தி இருந்தால் அப்பாவி பொதுமக்கள் 11 பேர் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம், இது தடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.


    துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோருக்கு பாரதிய ஜனதா செயற்குழுவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள இழப்பீடு, வேலை வாய்ப்பை விரைந்து வழங்க வேண்டும்.

    போராட்டத்தை தூண்டும் அமைப்புகள், இயக்கங்களை கண்டறிந்து ஒடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் இதுமாதிரி கலவரம் வெடிக்கும்.

    போராட்டத்தால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது. அமைதியான முறையில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #Thoothukudifiring
    ×