search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "infection"

    • நேற்று புதிதாக 94 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட 212 பேர் தங்களை வீடு களில் தனிமைப்படுத்தி கொண்டும், ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,483 ஆக உயர்ந்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 27 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

    இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,483 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 67,763 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 186 பேரில் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும், சிலர் ஆஸ்பத்தி ரிகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • நேற்று புதிதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
    • 22 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 22 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

    இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,360 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 67,672 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

    534 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 154 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும், ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    • கொகோரானா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 40 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 18 பேர், சேலம் ஒன்றியத்தில் 4 பேர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், தாரமங்கலம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், எடப்பாடி, காடையாம்பட்டி, மேச்சேரி, நங்கவள்ளி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    மேலும் தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வந்த தலா 2 பேர், சென்னையில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் உள்பட 246 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 17 பேர் குணமடைந்தனர். அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    மேலும் 246 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொேரானா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    பொது இடங்களிலும், வாகனங்கள், அலுவலகங்களில் தணிக்கை செய்ய உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறையினர், போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். மேலும் அனைவரும் முக கவசம் அணிவித்து சமூக இடை வெளியை கடை பிடித்து கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையிலேயே உள்ளது. நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. 13 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 183 ஆகும். இவர்களில் 67 ஆயிரத்து 533 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்து விட்ட நிலையில் 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 61 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பொது இடங்களில் முக கவசம் அணிந்து செல்ல பொதுமக்களை மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.

    • ஒரே நாளில் மேலும் 35 பேருக்கு பாதிப்பு சேலத்தில் 204 பேருக்கு கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 35 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் சேலம் மாநக ராட்சியில் 21 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில் 11 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 3 பேரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்க ளில் நேற்று 17 பேர் குணமாகி வீடு திரும்பினர். மேலும் 204 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொேரானா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் பரிசோதனையும் அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி பகுதியில் 18 பேரும், சேலம் சுகாதார மாவட்டத்தில் 11 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 8 பேரும், ேகாவையை சேர்ந்த ஒருவர் என 38 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தவர்களில் நேற்று 9 பேர் குணமாகி வீடு திரும்பினர். மருத்துவமனையில் தற்போது 186 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 25 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
    • தினமும் 1000 பேருக்கு பரிசோதனை

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 25 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

    ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 98 பேரில் 7 பேர் குணமாகினர். தற்போது 116 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மே மாதம் வரை கொரோன ா பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரேனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

    தற்போது சேலத்தில் தொற்று அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். மேலும் தற்போது தினமும் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனையை செய்யப்பட்டு வருகிறது. 24 மணி நேரத்தில் அதற்கான முடிவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே முக கவசம் அணிவது கட்டாய–மாக்கப்பட்டுள்ளது. இதனால் முக கவசம் அணியாதவர்களுக்கு அபாராதம் விதிக்கப்பட உள்ளது. சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோட்டில் ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.
    • பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முககவசம் அணிந்து வர சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 18 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பை விட குணமடைந்து வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 744 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 978 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 19 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. 100-க்கு 95 சதவீத மக்கள் முககவசம் அணியும் பழக்கத்தை மறந்து விட்டனர். பொது இடங்களிலும் சமூக இடைவெளி கேள்வி க்குறியாகி உள்ளது.

    எனவே மீண்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முககவசம் அணிந்து வர சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு, சென்று தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    • சேலத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிக்கபட்டுள்ளது.
    • சேலத்தில் தினமும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தினமும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    புதியதாக நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகராட்சி, தலைவாசல், கெங்கவல்லியில் தலா 2 பேர், எடப்பாடி, வீரபாண்டி, நங்கவள்ளியில் தலா ஒருவர், ஈரோட்டில் இருந்து வந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர், நேற்று குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 56 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 1,27,502 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,25,683 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 11 பேருக்கு கொரோனா.
    • கொரோனா தொற்று மீண்டும் தற்போது வேகம் எடுத்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது வேகம் எடுத்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 23-ந் தேதி தொற்று எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. நேற்று மேலும் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

    தொற்று பாதிபபு ஏற்பட்டவர்கள் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே 48 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று 4 பேர் வீடு திரும்பினர். இதனால் மேலும் 55 பேர் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.

    இனி வரும் நாட்களில் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 17 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டி–யல்படி மேலும் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 739 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 972 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 18 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோட்டில் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.
    • இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 15 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 961 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 16 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×