search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvAFG"

    • இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் 5 ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    இந்தூர்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. கில், திலக் வர்மாவுக்கு பதில் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. ஆப்கானிஸ்தான் ஒன்றில் கூட வெற்றி கண்டதில்லை.

    இந்தூர் மைதானத்தில் இந்திய அணி முன்று 20 ஓவர் போட்டியில் ஆடி 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்து இருக்கிறது. கடைசியாக இங்கு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 227 ரன்கள் குவித்தது. எனவே இந்த ஆட்டத்திலும் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட்கோலி, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ்குமார். 

    ஆப்கானிஸ்தான்:

    ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, நஜ்புல்லா ஜட்ரன், கரிம் ஜனாத், குல்படின் நைப், முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி, நூர் அகமது.

    • இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நாளை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது.
    • இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

    இந்தூர்:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

    இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மொகாலியில் மோதிய முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணி மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது. இப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

    இந்நிலையில் முதல் ஆட்டத்தில் விளையாடாத விராட்கோலி 2-வது போட்டிக்கு அணிக்கு திரும்பி உள்ளார். அவர் நாளைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலி 430 நாட்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர். 

    இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளதால் நாளைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது வெற்றியை பெற்ற முதல் வீரர்.
    • 14 மாதம் கழித்து களம் இறங்கிய ரோகித் சர்மா, டக்அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுமார் 14 மாதங்கள் கழித்து டி20-யில் களம் இறங்கிய ரோகித் சர்மா, ஆட்டத்தின் 2-வது பந்திலேயே ரன்அவுட் ஆனார்.

    இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால், டி20 சர்வதேச போட்டியில் 100 வெற்றிகளை ருசித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அதேவேளையில் டி20 கிரிக்கெட்டில் டக்அவுட்டில் ரன்அவுட் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகளின் கேப்டன் பட்டியலிலும், முதல் இந்திய அணி கேப்டன் என்ற விரும்பத்தகாத சாதனையையும் படைத்துள்ளார்.

    இதற்கு முன் இலங்கையில் ஜெயவர்தனே 2 முறையில், ஆப்கானிஸ்தானின் ஆஸ்கர் ஆப்கன், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், பால் காலிங்வுட், ஜிம்பாப்வேயின் சிகும்புரா, பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் அப்ரிடி, நியூசிலாந்தின் வெட்டோரி ஆகியோரும் டக்அவுட் ஆகியுள்ளனர்.

    மேலும் டி20-யில் இதுவரை 6 முறை ரன்அவுட் ஆகி விராட் கோலி, தோனியுடன் அதிகமுறை ரன்அவுட்டாகிய இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

    • ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார்.
    • ஜிதேஷ் சர்மா 20 பந்தில் 31 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா- சுப்மன் கில் ஜோடி களம் இறங்கியது. ஆட்டத்தின் 2-வது பந்திலேயே ரோகித் சர்மா ரன்அவுட் ஆனார். அவர் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேற, அடுத்து திலக் வர்மா களம் இறங்கினார்.

    சுப்மன் கில் 12 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். திலக் வர்மா 22 பந்தில் 26 ரன்கள் சேர்த்தார். ஷிபம் டுபே ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் ஜிதேஷ் சர்மா 20 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    5-வது விக்கெட்டுக்கு டுபே உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்தியாவுக்கு கடைசி 4 ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஷிவம் டுபே 38 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். 17-வது ஓவரில் இந்தியாவுக்கு 8 ரன்கள் கிடைத்தது.

    18-வது ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கும், 3-வது பந்தை பவுண்டரிக்கும் ஷிவம் டுவே விரட்ட இந்தயிா 17.3 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டுபே 60 ரன்களுடனும், ரிங்கு சிங் 16 ரன்களுடனும் களத்தில் நின்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

    • ஆப்கானிஸ்தான் கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் விளாசியது.
    • முகேஷ் குமார், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த அணியில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெறவில்லை.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய குர்பாஸ், இப்ராஹிம் ஜட்ரன் ஆகியோரால் விரைவாக ரன்கள் சேர்க்க முடியவில்லை. ஆனால் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். 8-வது ஓவரின் கடைசி பந்தில்தான் ஆப்கானிஸ்தான் முதல் விக்கெட்டை இழந்தது. 50 ரன்கள் எடுத்திருக்கும்போது குர்பாஸ் 28 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    குர்பாஸ் ஆட்டமிழந்த உடனேயே ஜட்ரனும் ஆட்டமிழந்தார். 9-வது ஓவர் 2-வது பந்தில் 25 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் வந்த ரஹ்மத் ஷா 3 ரன்னில் வெளியேறினார். இதனால் ஆப்கானிஸ்தான் விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு உமர்ஜாய் உடன் முகமது நபி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினர். இதனால் ஆப்கானிஸ்தான் ஸ்கோர் 150 ரன்னை நோக்கி சென்றது.

    உமர்ஜாய் 22 பந்தில் 29 ரன்கள் எடுத்தும், முகமது நபி 27 பந்தில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 19-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரில் ஆப்கானிஸ்தான் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் சேர்த்தது.

    கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் 3 பவுண்டரியுடன் 15 ரன்கள் விளாச மொத்தமாக ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.

    நஜிபுல்லா ஜட்ரன் 11 பந்தில் 19 ரன்களும், கரிம் ஜனத் 5 பந்தில் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முகேஷ் குமார், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு ரோகித் சர்மா முதன்முறையாக டி20-யில் களம் இறங்குகிறார்.
    • சஞ்சு சாம்சன் உள்ளிட்ட மூன்று வீரர்கள் இன்று களம் இறங்கவில்லை.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது. போட்டி 7 மணிக்கு தொடங்கும் நிலையில் தற்போது டாஸ் சுண்டப்பட்டது.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான், ஜெய்ஸ்வால் ஆகியோர் இன்று களம் இறங்கவில்லை.

    இந்திய அணி விவரம்:

    1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில், 3. திலக் வர்மா, 4. ஷிவம் டுபே, 5. ஜிதேஷ் சர்மா (வி.கீப்பர்), 6. ரிங்கி சிங், 7. அக்சர் பட்டேல், 8. வாஷிங்டன் சுந்தர், 9. ரவி பிஷ்னோய், 10. அர்ஷ்தீப் சிங், 11. முகேஷ் குமார்.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ரோகித் மற்றும் கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர்.

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது. இதற்கான முதல் டி20 போட்டி இன்று மொகாலியில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் விராட் கோலியும் இடம் பிடித்துள்ளார்.

    இதன் மூலம் ரோகித் மற்றும் கோலி 427 நாட்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். ரோகித் மற்றும் கோலி கடைசியாக 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினர். இதைத் தொடர்ந்து இருவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் மற்றும் விளையாடி வந்தனர்.

    இந்நிலையில் விராட் கோலி முதல் போட்டியில் விளையாடாத நிலையில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    • இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடக்கிறது.
    • பயிற்சியில் வீரர்கள் மட்டுமன்றி பயிற்சியாளர் டிராவிட் உள்பட பீல்டிங் பயிற்சியாளரும் கலந்து கொண்டனர்.

    மொகாலி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் கடும் குளிரில் பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் வீரர்கள் மட்டுமன்றி பயிற்சியாளர் டிராவிட் உள்பட பீல்டிங் பயிற்சியாளரும் கலந்து கொண்டனர்.

    அந்த வீடியோவில் பேசிய கில், -7 டிகிரி என்று நினைக்கிறேன். அதனால் எனது கைகளை பாக்கெட்டில் விட்டு கொண்டேன். மேலும் குளிருக்கு எதிராக பயிற்சியில் இடுபடுகிறோம் என தெரிவித்தார். ரொம்ப குளிராக இருக்கிறது என டிராவிட்டு மட்டுமன்றி அனைத்து வீரர்களும் இதனை பற்றி தெரிவித்தனர்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா அல்லது சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய், அவேஷ்கான், அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார்.

    ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜசாய், குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், நஜிபுல்லா ஜட்ரன், முகமது நபி, குல்படின் நைப் அல்லது கரிம் ஜனத், முஜீப் ரகுமான், கியாஸ் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    • இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. இந்த தொடருக்கான முதல் போட்டி நாளை மொகாலியில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார். இந்த அணியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் நட்சத்திர பந்து வீச்சாளர் ரஷித்கான் விலகி உள்ளார். முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    • ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
    • இத்தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டம் வரும் 11ம் தேதி மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்தத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முஜீப் உர் ரஹ்மான் அணிக்கு திரும்பியுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் அணி விவரம் வருமாறு:

    இப்ராகிம் ஜட்ரான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஷரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், பசல்ஹக் பரூக்கி, பரீத் அஹ்மத், நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்படின் நைப், ரஷித் கான்.

    • இந்த போட்டியின் முதல் ஆட்டம் ஜனவரி 11-ந் நடக்கிறது.
    • ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

    அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரில் விளையாடுகிறது.

    இதற்கான முதல் டி20 போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த தொடர் டிசம்பர் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் டிசம்பர் 10 முதல் அடுத்த வருடம் ஜனவரி 7-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி சொந்த நாட்டுக்கு திரும்புகிறது.

    அதன்பின் ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதுவரை இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் தற்போது முதன் முறையாக இரு தரப்பு டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டியின் முதல் ஆட்டம் ஜனவரி 11-ந் நடக்கிறது. 

    • ரோகித் சர்மா உலக கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.
    • சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார் ரோகித் சர்மா.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற 9வது லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.

    அடுத்து களமிறங்கிய இந்தியா, ரோகித் சர்மா அதிரடி சதத்தால் 35 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    கேப்டன் ரோகித் சர்மா 84 பந்துகளில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட்டிலும் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    சர்வதேச போட்டிகளில் 556 சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா முதல் இடத்திலும், 553 சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெய்ல் 2-வது இடத்திலும், 476 சிக்சர்கள் அடித்த அப்ரிடி 3வது இடத்திலும் உள்ளனர்.

    இதேபோல், உலக கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார் ரோகித் சர்மா . 

    ×