search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20: இந்தியா பந்து வீச்சு தேர்வு
    X

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20: இந்தியா பந்து வீச்சு தேர்வு

    • இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் 5 ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    இந்தூர்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. கில், திலக் வர்மாவுக்கு பதில் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. ஆப்கானிஸ்தான் ஒன்றில் கூட வெற்றி கண்டதில்லை.

    இந்தூர் மைதானத்தில் இந்திய அணி முன்று 20 ஓவர் போட்டியில் ஆடி 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்து இருக்கிறது. கடைசியாக இங்கு 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 227 ரன்கள் குவித்தது. எனவே இந்த ஆட்டத்திலும் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட்கோலி, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ்குமார்.

    ஆப்கானிஸ்தான்:

    ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, நஜ்புல்லா ஜட்ரன், கரிம் ஜனாத், குல்படின் நைப், முஜீப் ரகுமான், நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி, நூர் அகமது.

    Next Story
    ×